ஐஎஸ் அமைப்பில் சேரவிருந்த டெல்லி இந்து பெண்: என்.ஐ.ஏ.வுக்கு தகவல் கொடுத்த தந்தை
டெல்லி: டெல்லியைச் சேர்ந்த இந்து மதப் பெண் ஒருவர் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பில் சேர திட்டமிட்டிருந்ததை அவரது தந்தை தேசிய புலனாய்வுத் துறையினருக்கு தெரிவித்துள்ளார்.
டெல்லியைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர் அங்குள்ள பிரபல பல்கலைக்கழக கல்லூரியில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளார். அதன் பிறகு அவர் ஆஸ்திரேலியா சென்று முதுகலை பட்டம் பெற்றுள்ளார். ஆஸ்திரேலியாவில் இருந்து நாடு திரும்பிய பிறகு அவரின் நடவடிக்கைகள் வித்தியாசமாக இருந்துள்ளது.

இந்து மதத்தைச் சேர்ந்த அவர் சிரியா சென்று ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பில் சேர முடிவு செய்தார். இதையடுத்து அவர் ஐஎஸ்ஐஎஸ் அமைப்புக்கு ஆட்களை தேர்வு செய்யும் நபரை தொடர்பு கொண்டுள்ளார்.
இந்நிலையில் அவரின் தந்தையான ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி அவரின் கம்ப்யூட்டரை பார்த்துள்ளார். அப்போது தான் அவருக்கு தனது மகள் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பில் சேர திட்டமிட்டது தெரிய வந்து அதிர்ச்சி அடைந்தார்.
உடனே அவர் இது குறித்து தேசிய புலனாய்வுத் துறையினருக்கு தகவல் கொடுத்தார். அவர்கள் உளவுத் துறையிடம் இதை தெரிவித்தனர். இதையடுத்து உளவுத் துறை அதிகாரிகள் அந்த பெண்ணை அழைத்து ஐஎஸ்ஐஎஸ் அமைப்பில் சேர்வது நல்ல விஷயம் அல்ல என்று அறிவுரை கூறி வருகிறார்கள்.
-
தமிழகத்தில் 3 பவர் சென்டர்களாம்! டெல்லியில் விஜய் கால் வைத்ததும் வந்து விழுந்த விமர்சனம்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications