For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

செல்லாத ரூபாய் நோட்டுகளை “அந்த” விசயத்திற்கு பயன்படுத்தும் கில்லாடிகள்.. சூடுபிடித்த பாலியல் தொழில்!

பழைய 500 மற்றும் 1000 நோட்டுகளை மறுக்காமல் பெற்றுக் கொள்வதால் கடந்த சில நாட்களில் சோனாகாச்சியில் பாலியல் தொழில் சூடு பிடித்துள்ளது.

Google Oneindia Tamil News

மும்பை: பழைய 500 மற்றும் 1000 நோட்டுகளை மறுக்காமல் பெற்றுக் கொள்வதால் கடந்த சில நாட்களில் சோனாகாச்சியில் பாலியல் தொழில் சூடு பிடித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

கடந்த வாரம் பிரதமர் மோடி, பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அதிரடியாக அறிவித்தார். இதனால் கைவசம் உள்ள பழைய ரூபாய் நோட்டுகளை மாற்ற இயலாமல் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில், மத்திய அரசின் இந்த அதிரடி அறிவிப்பால் பாலியல் தொழிலாளிக்கு நல்ல வருமானம் கிடைத்துள்ளதாம்.

அதிக வருமானம்...

அதிக வருமானம்...

சில்லறைப் பிரச்சினை இல்லாமல் வாடிக்கையாளர்கள் தாராளமாக 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை பாலியல் தொழிலாளிகளுக்கு தருகிறார்களாம். இதனால் கடந்த சில நாட்களில் மட்டும் இரண்டு லட்ச ரூபாய் அளவிற்கு அவர்கள் வருமானம் பார்த்துள்ளார்களாம்.

வங்கியில் டெபாசிட்...

வங்கியில் டெபாசிட்...

தெற்கு ஆசியாவின் மிகப்பெரிய சிவப்பு விளக்கு பகுதி கொல்கத்தாவில் உள்ள சோனாகாச்சி ஆகும். இங்கு மட்டும் 1.3 லட்சம் பாலியல் தொழிலாளிகள் உள்ளனர். இவர்கள் கடந்த சில நாட்களில் தங்களுக்கு கிடைத்த மொத்த பணத்தையும், பாலியல் தொழிலாளிகள் அமைத்துள்ள உஷா பல்நோக்கு கூட்டுறவு வங்கியில் டெபாசிட் செய்துள்ளனராம்.

தினசரி வருமானம்...

தினசரி வருமானம்...

வழக்கமாக பாலியல் தொழிலாளிகள் தங்களது தினசரி வருமானத்தை அன்றன்று செலவுகளுக்கு பயன்படுத்தி விடுவர். ஆனால், கடந்த சில தினங்களில் அதிகளவு பணம் கிடைத்ததால் அவற்றை டெபாசிட் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ரூ. 50 லட்சத்திற்கும் அதிகம்...

ரூ. 50 லட்சத்திற்கும் அதிகம்...

சாதாரண நாட்களில் 2 நாளில் ரூ.5 லட்சம் மட்டுமே டெபாசிட் செய்யப்பட்டு வந்ததாகவும் தற்போது ரூ.50 லட்சத்துக்கு மேல் டெபாசிட் செய்யப்பட்டுள்ளதாகவும் சம்பந்தப்பட்ட வங்கியின் மூத்த அதிகாரி சாந்தனு கூறி உள்ளார்.

English summary
As demonetisation of high value notes hit small businessmen across Kolkata, sex workers of Sonagachi here, South Asia’s largest redlight area, are seeing brisk business as they are aceepting these notes.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X