For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஜன்தன் யோஜனா வங்கி கணக்குகளில் ரூ.21 ஆயிரம் கோடி டெபாசிட்!

ஜன்தன் யோஜனா வங்கி கணக்குகளில் இதுவரை ரூ.21 ஆயிரம் கோடி டெபாசிட் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

By Mayura Akilan
Google Oneindia Tamil News

டெல்லி: நவம்பர் 8ம் தேதிக்கு பின் ஜன்தன் யோஜனா வங்கி கணக்குகளில் அதிகளவு டெபாசிட் செய்யப்பட்டுள்ளதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.

பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை செல்லாது என பிரதமர் மோடி கடந்த நவம்பர் 8ம் தேதி அறிவித்தார். இதற்கு பதிலாக புதியதாக 2000 ரூபாய் நோட்டுகளை அறிமுகப்படுத்தியது. இதனால் பொதுமக்கள் பழைய நோட்டுகளை மாற்ற அரும்பாடு பட்டு வருகிறார்கள். மேலும் சில்லரை கிடைக்காமல் தடுமாறி வருகின்றனர்.

Demonetisation Effect- spike in Jan Dhan account deposits

பழைய ரூபாய் நோட்டுகளை மாற்ற பொதுமக்கள் தங்களிடம் உள்ள பணத்தை வங்கியில் டெபாசிட் செய்து வருகின்றனர். இதன் மூலம் நாள் தோறும் பொதுமக்களின் வங்கி கணக்குகளில் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் டெபாசிட் செய்யப்படுகிறது.

அதுபோல பிரதமரின் ஜன் தன் திட்டத்தின் கீழ் வங்கி கணக்கு இல்லாதவர்களுக்கும் வங்கி கணக்கு தொடங்கப்பட்டது. தற்போது இந்த வங்கி கணக்கிலும் டெபாசிட் குவிந்து வருகிறது. பழைய நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்ட நவம்பர் 8ம் தேதிக்கு பிறகு இதுவரை ஜன்தன் திட்டத்தின் கீழ் சுமார் 21 ஆயிரம் கோடி ரூபாய் வரை டெபாசிட் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிகின்றன.

கர்நாடகா மற்றும் மேற்குவங்க மாநிலத்தில் உள்ள மக்களின் ஜன்தன் வங்கி கணக்கில் அதிகளவு டெபாசிட் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வந்துள்ளது. மேலும் டெபாசிட் செய்யப்பட்ட பணம் கருப்பு பணமா என மத்திய அரசு விசாரணை நடத்த உள்ளது குறிப்பிடத்தக்கது.

பிரதமராக பதவியேற்ற மோடி ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் வகையில் ஜன்தன் யோஜனா வங்கி கணக்கு திட்டத்தை கொண்டு வந்தார். ஜீரோ பேலன்ஸ் திட்டம் என்பதால் நாடு முழுவதும் கோடிக்கணக்கானோர் கணக்கு தொடங்கினர். இதன் மூலம் மத்திய அரசின் திட்டங்களுக்கான பணம், வரவு வைக்கப்படும் என பேசப்பட்டது. கடந்த நவம்பர் 9ம் தேதி நாடு முழுவதும் உள்ள ஜன்தன் வங்கிக்கணக்கில் வெறும் 45,636 ரூபாய் மட்டுமே இருந்தது.

ஜன்தன் திட்டத்தில் இணைந்துள்ள வங்கி கணக்கு வைத்திருப்போர் ரூ.50,000க்கு மேல் வரவு வைக்க கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ள நிலையில், கடந்த 13 நாளில் மட்டும் இந்தியா முழுவதும் ரூ.21 ஆயிரம் கோடி டெபாசிட் செய்யப்பட்டுள்ளது. ஜன் தன் வங்கிக் கணக்கை தவறாக பயன்படுத்தினால், சலுகைகள் பறிபோகும் என வங்கி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கடந்த 8ம் தேதி முதல் மத்திய அரசின் அறிவிப்பால் ரூ.500, ரூ.1000 நோட்டுகள் மதிப்பிழந்தன. நாடு முழுவதும் பணத்தட்டுப்பாடு ஏற்பட்டது. மேலும், கருப்பு பணம் வைத்திருப்பவர்கள் ஏழை மக்களின் ஜன்தன் வங்கிக் கணக்கு மூலம் மாற்றுவதாக கூறப்படுகிறது. இதனால், ஜன்தன் வங்கிக்கணக்கில் பழைய ரூ.500, ரூ.1000 நோட்டுகள் அதிகளவில் வரவு வைக்கப்படுவதாக கூறப்படுகிறது.

இந்த வங்கிக்கணக்கில் ரூ.50 ஆயிரத்திற்கு மேல் பணம் கட்டியிருந்தால், அவர்களுக்கு சலுகைகள் பறிபோவதுடன், நடவடிக்கைகளும் இருக்கலாம். எனவே, ஜன்தன் வங்கிக் கணக்கை தவறாக பயன்படுத்தக் கூடாது. குறிப்பாக ஏழை, எளிய மக்களுக்கு மத்திய அரசு, அவர்களது வங்கிக்கணக்கில் ரூ.1.50 லட்சம் செலுத்தும் என்ற தகவல் பரவி வருகிறது. அது போன்ற திட்டங்கள் வந்தால், இவர்கள் பாதிக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.

English summary
According to a government source about Rs 21,000 crore has been deposited in Jan Dhan accounts across the courty. The sudden spike in deposits is being viewed as an effect of demonetisation move by the Modi government. As on November 9, a day before banks started post-demonetisation transaction, the total amount across all Jan Dhan accounts stood at Rs 45636.61 according to Government's official record.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X