"பாத்துட்டான்.. பாத்துட்டான்".. தெருவில் "சைஸாக" நடந்து சென்ற உருவம்.. பர்தாவை விலக்கினால்.. அடகடவுளே
கான்பூர்: பர்தா அணிந்து சென்றவரை, ஒட்டுமொத்த கிராம மக்களும் சுற்றிவளைத்து பிடித்துவிட்டனர்.. என்ன காரணம்? யார் அவர்?
நாடு முழுவதும் அண்மைக்காலமாக மதம் தொடர்பான விவகாரங்கள் சர்ச்சையாகி வருகிறது. சிலர் அரசியல் நடவடிக்கையாகவும் இதனை மாற்றுகின்றனர். கர்நாடகாவில் பள்ளி, கல்லூரிகளில் பர்தா அணிந்துசெல்ல தடையே விதிக்கப்பட்டது.

இந்த விவகாரம் நாடு முழுவதும் அன்று புயலை கிளப்பியது.. கோர்ட் வரை விவகாரம் சென்றது.. இந்த அளவுக்கு உணர்வுப்பூர்வமான விஷயத்தை, சில இளைஞர்கள் வேடிக்கையாக கையாண்டு வருவது கவலையை தந்து வருகிறது..
கன்னியாகுமரி:
அதிலும், தன்னுடைய காதலியை சந்தித்து பேசுவதற்காக பெரும்பாலும் இளைஞர்கள், பர்தாவை அணிந்து கொள்வதும், இதன் காரணமாக, கைதாகி வருவதும் தொடர்கதையாகி வருகிறது.
கடந்த மாதம் கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒரு சம்பவம் நடந்தது.. குலசேகரத்தில் ஒரு தனியார் மருத்துவக் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியின் அருகே பர்தா அணிந்த நிலையில் ஒருவர் சுற்றித்திரிந்துள்ளார்.. ஆனால் அவரது நடவடிக்கை சந்தேகத்திற்கு இடமான வகையில் இருந்ததால், இதனை காலேஜ் வாசலில் நின்றிருந்த செக்யூரிட்டிகள் பார்த்துள்ளனர்.
நீண்டநேரம், அந்த பகுதியிலேயே பர்தாவை அணிந்துகொண்டு அவர் சுற்றித்திரிந்ததால், அவரை பிடித்து பர்தாவை விலக்கி பார்த்தனர்.. அப்போதுதான், அவர் ஒரு இளைஞர் என்பதும், தன்னுடைய காதலியை நேரில் பார்த்து பேச பர்தா அணிந்து வந்ததும் தெரியவந்தது.
ராயப்பேட்டை:
இப்படித்தான், திருவள்ளூரில் ஒரு சம்பவம் நடந்தது.. அந்த இளைஞர் ஐஐடி மாணவர் ஆவார்.. ராயப்பேட்டையில் இருந்து மெரினா பீச் வரையில் பர்தாவோடு நடந்து வந்து காட்டுமாறு, காதலி சவால் விட்டாராம்.. உடனே அந்த சவாலை நிறைவேற்றிக் காட்டுவதற்காக, பர்தா அணிந்தபடி நடந்து சென்றுள்ளார் அந்த இளைஞர்.. ஆனால், அவரது நடையே அவரை காட்டி தந்துவிட்டது.. பர்தாவுடன் வித்தியாசமாக நடந்து செல்வதை பார்த்து அந்த பகுதியை சேர்ந்தவர்கள் சந்தேகம் அடைந்தனர்...
அப்போதுதான காலை உற்றுநோக்கினால், ஷூ அணிந்திருப்பதை பார்த்து அதிர்ந்துள்ளனர்.. பிறகு, இதையடுத்து "திருடன்... திருடன்" என்று சிலர் சத்தம் போடவும், அக்கம் பக்கத்தினரும் விரைந்து வந்துவிட்டனர். போலீசாரும் வந்துவிட்டனர்.. பர்தாவை விலக்கி பார்த்தால், அந்த இளைஞர் அசடு வழிந்துள்ளார்.. காதலியிடம் சவால் விட்டதால், மெரினா வரை பர்தாவோடு நடந்து வந்தேன் என்று விளக்கம் தந்தார்..

சிக்கிய அன்சார்:
இதோ இப்போதும் ஒரு சம்பவம் அதுபோலவே நடந்துள்ளது.. உத்தர பிரதேசத்தில், காதலியை பார்க்க படாதபாடு பட்டுள்ளார் அந்த காதலன்.. ஆரியா பகுதியை சேர்ந்தவர் அன்சார் என்ற இளைஞர்.. பர்தா அணிந்து கொண்டு தனது காதலியை ரகசியமாக சந்தித்துள்ளார்... காதலியை சந்திப்பதற்காகவே, கட்டம்பூருக்கு பர்தாவுடன் கிளம்பி வந்திருக்கிறார்.. அந்த காதலியின் குடும்ப உறுப்பினர்கள் யாரும் தன்னை அடையாளம் கண்டுபிடித்துவிடக்கூடாது என்பதற்காகவே பர்தா அணிந்து வந்தாராம்.
காதலியை சந்தித்து பேசிவிட்டு, மறுபடியும் அங்கிருந்து கிளம்பி தன் ஊருக்கு நடந்து சென்று கொண்டிருந்தார்.. அப்போது வரும்வழியில் அந்த கிராமத்தை சேர்ந்த சிலர் அன்சாரை பார்த்துள்ளனர்.. ஆனால், அவர் ஆண் என்று அவர்களுக்கு தெரியாது.. மாறாக, தங்கள் ஊரில் உள்ள குழந்தைகளை கடத்தி செல்ல ஊருக்குள் வந்திருக்கும் பெண் என்று சந்தேகப்பட்டுள்ளனர்..
மாமியார் வீடு:
பிறகு, பர்தாவை விலக்கி பார்த்தபிறகுதான், ஆண் என்பதே தெரியவந்தது.. அதற்கு பிறகு, போலீசில் அன்சாரை ஒப்படைத்தனர்.. இப்போது கல்யாணம் ஆகாமலேயே அன்சார் மாமியார் வீட்டுக்கு போயிருக்கிறார்..!!
-
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மீண்டும் வந்த அதே வரலாற்று சிக்னல்.. தங்கம் விலை மிகப்பெரிய அளவில் சரிகிறது.. இப்போ வாங்கலாமா? -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு












Click it and Unblock the Notifications