காதலர் தினம் அப்ப கல்லூரிக்கு வராதீங்க.. வித்தியாசமான உத்தரவு அனுப்பிய லக்னோ பல்கலைக்கழகம்

Posted By:
Subscribe to Oneindia Tamil
  காதலர் தினத்திற்கு கல்லூரி வரக்கூடாது- நிர்வாகம் அதிரடி- வீடியோ

  லக்னோ: நாளைக் காதலர் தினம் உலகம் எங்கும் கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில் உத்தர பிரதேசத்தில் இருக்கும் லக்னோ பல்கலைக்கழகத்தில் முக்கியமான அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டு உள்ளது.

  இந்தப் பல்கலைக்கழகம் சென்ற வருடமும் காதலர் தினம் அன்று வைரல் ஆனது. அப்போது மாணவர்கள் யாரும் வகுப்புக்குப் பரிசுப்பொருட்கள், பூக்கள் கொண்டு வரக்கூடாது என்று குறிப்பிட்டு இருந்தனர்.

  இந்த விஷயம் பெரிய விவாதம் ஆனது. அதேபோல் இந்த முறையும் வித்தியாசமான அறிக்கை ஒன்றை அந்த பல்கலைக்கழகம் வெளியிட்டு உள்ளது.

  சிவராத்திரி

  சிவராத்திரி

  தற்போது லக்னோ பல்கலைக்கழகத்திற்கு நாளை விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது. இன்று இரவு சிவராத்திரி என்பதால் விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது. விடுதி மாணவர்களும் இருக்கக் கூடாது என்று கூறப்பட்டுள்ளது.

  கூடாது

  கூடாது

  இந்த நிலையில் நாளை மாணவர்கள் யாரும் பல்கலைக்கழகத்திற்கு வரக் கூடாது என்று கூறப்பட்டு உள்ளது. யாரையும் உள்ளே விடக் கூடாது காவலருக்கு ஆணைப் பிறப்பிக்கப்பட்டுள்ளது . மீறி உள்ளே செல்பவர்களுக்கு தண்டனை வழங்கப்படும் என்றும் கூறியுள்ளது.

  காரணம் என்ன

  காரணம் என்ன

  இதற்கு அந்தப் பல்கலைக்கழக நிர்வாகம் காரணமும் சொல்லி உள்ளது. அதில் ''நாளைச் சிவராத்திரி மாணவர்கள் அதைத்தான் கொண்டாட வேண்டும். அதை மீறி வெளிநாட்டுப் பண்டிகையை கொண்டாடக் கூடாது'' என்று கண்டிப்பாக கூறியுள்ளனர்.

  கோபம்

  கோபம்

  இந்த அறிக்கையைப் பார்த்து மாணவர்கள் கோபம் அடைந்துள்ளார்கள். அவர்கள் ''நாங்கள் கல்லூரிக்கு வரக்கூடாது என்றால் யார்தான் வருவார்கள். இது என்ன முட்டாள்தனமானச் சட்டமாக இருக்கிறது'' என்று கோபமாக கேட்டு இருக்கிறார்கள்.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  Lucknow University says to student that they should not come to college on Valentine's Day. They ordered this rule in order to make students not to celebrate Valentine's Day.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற