மேகாலயாவில் நிலநடுக்கம்..3.4 ரிக்டர் பதிவு..அதிகாலை நில அதிர்வால் மக்கள் அச்சம்

Subscribe to Oneindia Tamil

ஷில்லாங்: மேகாலயா மாநிலம் டூரா பகுதியின் தென்கிழக்கே 37 கிலோமீட்டர் தொலைவில் இன்று அதிகாலை 3.46 மணியளவில் திடீரென்று நில அதிர்வு உணரப்பட்டதாக தேசிய நிலநடுக்கவியல் மையம் அறிவித்துள்ளது.

வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மேகாலயாவில் அவ்வப்போது நிலநடுக்கம் ஏற்படுகிறது. கடந்த ஜூன் மாதம் டூரா நகரில் இருந்து கிழக்கு-வடகிழக்கே 43 கிலோ மீட்டர் தொலைவில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது. இது ரிக்டரில் 4.0 ஆக பதிவானது. பொருட்சேதமோ உயிர் சேதமோ ஏற்படவில்லை.

Earthquake in Meghalaya Tura 3.4 Richter scale People fear

இன்று அதிகாலையில் டூரா பகுதியின் தென்கிழக்கே 37 கிலோமீட்டர் தொலைவில் இன்று அதிகாலை 3.46 மணியளவில் திடீரென்று நில அதிர்வு உணரப்பட்டதாக தேசிய நிலநடுக்கவியல் மையம் அறிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கம் 3.4 ரிக்டர் அளவில் பதிவானது. இதில் சேதம் எதுவும் ஏற்படவில்லை.

மக்கள் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த போது திடீரென அதிர்வு ஏற்பட்டதால் அச்சத்துடன் வீடுகளை விட்டு வெளியேறினர். கடந்த சில வாரங்களாக வட மாநிலங்களில் தொடர்ந்து நிலநடுக்கம் ஏற்பட்டு வருவது மக்களை பீதியில் ஆழ்த்தியுள்ளது.

சில தினங்களுக்கு முன்பு இந்தோனேசியாவின் மேற்கு ஜாவா தீவில் நேற்று பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் இந்த நிலநடுக்கம் 5.6 ஆக பதிவாகியது. ஜாவாவில் உள்ள சியாஞ்சூரில் 10 கி.மீ. ஆழத்தில் இந்த நிலநடுக்கத்தின் மையப்பகுதி காணப்பட்டது. நிலநடுக்கத்தின் மையப் பகுதியில் இருந்த சியாஞ்சூர் பகுதி கடுமையாகப் பாதிக்கப்பட்டது.

சியாஞ்சூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நூற்றுக்கணக்கான வீடுகள் இடிந்ததில் பலரும் இடிபாடுகளில் சிக்கினர். இந்த நில நடுக்கத்துக்கு இதுவரை 252 பேர் உயிரிழந்துள்ளனர். 600 பேர் வரை காயமடைந்தனர். பாதிக்கப்பட்ட பகுதியிலிருந்து இதுவரை 7,060 பேர் இடம்பெயர்ந்துள்ளனர். மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+