அந்தமான் நிகோபார் தீவுகளில் இன்று அதிகாலை நிலநடுக்கம்.. ஒரு வாரத்தில் 2ஆவது சம்பவம்
போர்ட் பிளேர்: அந்தமான் நிகோபார் தீவுகளில் இன்று அதிகாலை 5.30 மணி அளவில் நிலநடுக்கம் உணரப்பட்டது. இது ரிக்டர் அளவில் 5.2 ஆக பதிவாகியுள்ளது.
அந்தமான் நிகோபார் போர்ட் பிளேயரில் இருந்து 151 கி.மீ. தூரத்தில் உள்ள தென்மேற்கு பகுதியில் கடந்த 29ஆம் தேதி நள்ளிரவு 12.53 மணிக்கு திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 5.9 ஆக பதிவானது.

நிலநடுக்கத்தின் போது வீடுகள் மற்றும் கட்டடங்கள் குலுங்கியது. இதனால் பொதுமக்கள் பீதியடைந்தனர். இந்த நிலநடுக்கத்தால் உயிர் இழப்போ பொருட் சேதமோ ஏற்படவில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளன.
அது போல் கடந்த மாதம் 9ஆம் தேதியும் இந்தோனேஷியாவின் வடக்கு சுமத்ரா தீவுகளில் நிலநடுக்கம் உணரப்பட்டது. இது ரிக்டரில் 5.4 ஆக பதிவாகியிருந்தது. இதன் எதிரொலியாக அந்தமானில் 5.3 அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.

இந்த நிலையில் இன்று அதிகாலை 5.30 மணிக்கு அந்தமான் நிகோபார் தீவுகளில் இருந்து பெர்கா என்ற இடத்திற்கு 123 கி.மீ. தொலைவில் பூமிக்கடியில் 10 கி.மீ. ஆழத்தில் நிலநடுக்கம் உணரப்பட்டது. இது ரிக்டரில் 5.2 ஆக பதிவானது. இதனால் உயிர் இழப்புகள் பதிவாகவில்லை.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications