For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ராஜாதி ராஜ.. "மகாராஜா" ரயிலில் 8 நாள் சுற்றுலா.. தங்க தட்டில் சாப்பாடு.. தங்கக் கப்பில் "டீ"யாம்யா!

திருவனந்தபுரம்- மும்பைக்கு ஜூலை 1ல் புறப்படவுள்ள மகாராஜா ரயிலில் 8 நாள் சுற்றுலா செல்ல ரூ. 5 லட்சம் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

திருவனந்தபுரம்- மும்பைக்கு ஜூலை 1ல் புறப்படவுள்ள மகாராஜா ரயிலில் 8 நாள் சுற்றுலா செல்ல ரூ. 5 லட்சம் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

சென்னை: திருவனந்தபுரத்திலிருந்து மும்பைக்கு புறப்படவுள்ள மகாராஜா என்ற சொகுசு ரயிலில் 8 நாள்கள் சுற்றுலா செல்ல ரூ. 5 லட்சம் கட்டணம் வசூலிக்கப்படும்.

இந்திய ரயில்வேயின் கீழ் செயல்பட்டு வரும் ஐஆர்சிடிசியானது கடந்த 2010-ஆம் ஆண்டில் மும்பை- டெல்லி- கொல்கத்தா இடையே மகாராஜா எக்ஸ்பிரஸ் என்ற சொகுசு ரயிலை இயக்கி வருகிறது.

இந்த ரயிலானது முதல்முறையாக வரும் ஜூலை 1-ஆம் தேதி திருவனந்தபுரத்திலிருந்து மும்பைக்கு இயக்கப்படுகிறது. இதற்கான முன்பதிவு தொடங்கப்பட்டுள்ளது.

2வது இடத்தில்

2வது இடத்தில்

இந்த ரயில் குறித்து ஐஆர்சிடிசி-யின் தென் மண்டல பொது மேலாளர் எஸ்.எஸ். ஜெகநாதன் சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தனர். அதில் உலகின் மிகப் பிரபலமான 5 சொகுசு ரயில்களில் மகாராஜா எக்ஸ்பிரஸ் ரயில் 2-ஆவது இடத்தை பிடித்துள்ளது.

தமிழ் கலாசார உணவு

தமிழ் கலாசார உணவு

வரும் ஜூலை 1-ஆம் தேதி இரவு 9 மணிக்கு திருவனந்தபுரத்தில் இருந்து புறப்படும் இந்த ரயிலானது நாகர்கோவில் வழியாக காரைக்குடிக்கு 2-ஆம் தேதி காலை சென்றடையும். தமிழ் கலாசார உணவு வழங்கப்படுகிறது. கட்டடங்கள், ஆத்தங்குடி தரை ஓடுகள் செய்யும் இடங்கள் சுற்றுலா பயணிகளுக்கு சுற்றி காண்பிக்கப்படுகிறது.

செங்கல்பட்டுக்கு

செங்கல்பட்டுக்கு

அன்றிரவு அங்கிருந்து புறப்பட்டு 3-ஆம் தேதி செங்கல்பட்டு ரயில் நிலையத்துக்கு அந்த ரயில் வருகிறது. அங்கிருந்து சொகுசு பஸ்களில் மாமல்லபுரத்துக்கு பயணிகள் அழைத்து செல்லப்படுகின்றனர். பின்னர் மீண்டும் அன்றிரவு செங்கல்பட்டில் இருந்து புறப்பட்டு மைசூர், ஹம்பி, கோவா வழியாக மும்பைக்கு 8-ஆம் தேதி ரயில் சென்றடைகிறது.

8 பகல், 7 இரவுகள்

8 பகல், 7 இரவுகள்

இந்த சொகுசு ரயிலில் பயணம் செய்யும் பயணிகள் 8 பகல் பொழுதும், 7 இரவுகளிலும் பயணிக்க முடியும். அந்தந்த மாநிலத்தவருக்கான உணவு வகைகளுடன், வெளிநாட்டினருக்கான உணவு வகைகளும் கிடைக்கும். 2 சமையல் கூடங்கள் உள்ளன. மன்னர்களுக்கு வழங்குவது போன்று தங்க தட்டில் உணவும், டீ, காபி போன்றவை தங்க கப்புகளிலும் வழங்கப்படுகிறது.

பார் உள்ளது

பார் உள்ளது

இதுதவிர வெளிநாடு மற்றும் உள்நாட்டு வகை மதுபானங்கள் அடங்கிய பார் ஒன்றும் உள்ளது. பயணம் செய்ய ‘டீலக்ஸ் கேபின்' கட்டணம் ரூ.5,00,680 , ‘ஜூனியர் சூட்' ரூ.7,23,420, ‘சூட்' ரூ. 10,09,330 , ‘பிரெசிடென்சியல் சூட்' ரூ.17,33,410 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.

சலுகைகள் என்னென்ன

சலுகைகள் என்னென்ன

இந்தியர்களுக்கு மட்டும் சலுகையாக பயணி தன்னுடன் ஒருவரை அழைத்து வரலாம். 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு கட்டணம் இல்லை. 5 வயது முதல் 14 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு 50 சதவீத கட்டண சலுகை வழங்கப்படுகிறது. 8 நாட்கள் பயணம் செய்ய முடியாதவர்களுக்காக அவர்கள் விரும்பும் ஏதாவது ஒரு நாள் பயணம் செய்ய ‘டீலக்ஸ் கேபின்' கட்டணமாக ரூ.33 ஆயிரத்து 250 வசூலிக்கப்படுகிறது. பயணிகள் செல்லும் இடங்களில் அந்தந்த மாநில வழக்கப்படி பாரம்பரிய முறையில் இசைக்கருவிகளுடன் வரவேற்பு அளிக்கப்படுகிறது.

முன்பதிவு செய்ய...

முன்பதிவு செய்ய...

இந்த ரெயிலில் பயணம் செய்வதற்காக முன்பதிவு தொடங்கப்பட்டு உள்ளது. கூடுதல் விவரங்களுக்கு http://www.themaharajas.com அல்லது http://www.irctctourism.com என்ற இணையதளங்களை பார்த்து தெரிந்து கொள்ளலாம். இதுதவிர 98409-02916, 90031-40657, 98409-02919 என்ற அலுவலக செல்போன்எண்கள் மூலம் விவரங்களை தெரிந்து கொள்ள முடியும் என்று தெரிவித்தார்.

English summary
The IRCTC will launch a special monsoon service offering visits to prominent southern tourist destinations in the Maharajas' Express from July month. Rs. 5 Lakhs fixed for 8 days tour.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X