For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஆந்திராவில் ஏப்-30, மே-7ல் சட்டமன்ற தேர்தல்-ஒடிஷா, சிக்கிம் சட்டசபைகளுக்கும் தேதி அறிவிப்பு!

By Mathi
Google Oneindia Tamil News

டெல்லி: லோக்சபா தேர்தலுடன் ஆந்திரா, ஒடிஷா மற்றும் சிக்கிம் மாநில சட்டசபைகளுக்கான தேர்தல் தேதியையும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

டெல்லியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய தேர்தல் ஆணையர் சம்பத், நாடு முழுவதும் 9 கட்டமாக லோக்சபா தேர்தல் வாக்குப் பதிவு நடைபெறும் என்று அறிவித்தார்.

EC announces assembly poll dates for AP, Orissa and Sikkim

அத்துடன் ஆந்திரா, ஒடிஷா, சிக்கிம் ஆகிய மாநில சட்டசபைகளுக்கும் தேர்தல் நடைபெறும் என்று அவர் அறிவித்தார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:

ஆந்திர மாநில சட்டசபை பதவி காலம் மே 30, ஒடிஷா சட்டசபை பதவிக் காலம் ஜூன் 29, சிக்கிம் சட்டசபை பதவிக் காலம் மே 23-ந் தேதி முடிவடைகிறது. இதனால் லோக்சபா தேர்தலுடன் இம்மாநிலங்களில் சட்டசபை தேர்தலும் நடைபெறும்.

ஆந்திராவில் உள்ள 294 சட்டசபை தொகுதிகளுக்கும் ஏப்ரல் 30 மற்றும் மே 7 ஆகிய தேதிகளில் வாக்குப் பதிவு நடைபெறும். ஜூன் 2-ந் தேதி தெலுங்கானா தனி மாநிலம் உதயமானது பின்னர் அதன் கீழ் வரும் மாவட்டங்களின் அடிப்படையில் சட்டசபை தொகுதிகள் பிரித்து வரையறை செய்யப்படும்.

ஒடிஷா மாநிலத்தில் உள்ள 147 தொகுதிகளுக்கும் ஏப்ரல் 10 மற்றும் 17-ந் தேதிகளில் வாக்குப் பதிவு நடைபெறும். 32 தொகுதிகளைக் கொண்ட சிக்கிம் மாநிலத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 12-ந் தேதி வாக்குப் பதிவு நடைபெறும்.

இவ்வாறு தேர்தல் ஆணையர் சம்பத் கூறினார்.

English summary
The Election Commission on Monday announced two-phased assembly polls in Andhra Pradesh and Orissa and single-phased polling in Sikkim on April 12.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X