அமலாக்கத்துறையினர் மண்டையை உடைப்பீங்களா? அரசியல் சாசன நடவடிக்கை பாயும்-மமதாவுக்கு ஆளுநர் எச்சரிக்கை!
கொல்கத்தா: அமலாக்கத்துறையினர் மீது தாக்குதல் நடத்துவதை வேடிக்கை பார்த்து கொண்டிருந்தால் மேற்கு வங்க மாநில அரசுக்கு எதிரான அரசியல் சாசன நடவடிக்கைகள் பாயும் என அம்மாநில ஆளுநர் சிவி ஆனந்த போஸ் மிரட்டல் விடுத்துள்ளார்.
மேற்கு வங்க மாநிலத்தில் ரேஷன் திட்டத்தில் ஊழல் முறைகேடு குற்றச்சாட்டுகள் முன் வைக்கப்பட்டன. இவ்வழக்கில் மாநில அமைச்சர் ஜோதி பிரியா மாலிக் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளார். இவ்வழக்கு தொடர்பாக வடக்கு 24 பர்கானா மாவட்டத்தில் சந்தேஷ்காலி என்ற இடத்தில் திரிணாமுல் காங்கிரஸ் நிர்வாகிகளான ஷாஜஹான் ஷேக், சங்கர் ஆத்யா வீடுகளில் சோதனை நடத்த அமலாக்கத்துறை அதிகாரிகள் குழு சென்றது. இந்த அமலாக்கத்துறை அதிகாரிகள் குழுவுக்கு துணை ராணுவப் படையினர் பாதுகாப்பாக சென்றனர்.

ஆனால் திரிணாமுல் காங்கிரஸ் நிர்வாகிகளின் ஆதரவாளர்கள் 100க்கும் மேற்பட்டோர் அமலாக்கத்துறை அதிகாரிகளின் சோதனைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அப்போது அமலாக்கத்துறை அதிகாரிகள் சென்ற வாகனம் தாக்கப்பட்டது. அவர்களது கார் கண்ணாடிகள் உடைக்கப்பட்டன. இத்தாக்குதலில் அமலாக்கத்துறை அதிகாரிகள், துணை ராணுவப் படையினர் படுகாயமடைந்தனர். சிலருக்கு மண்டையும் உடைந்தது.
இந்த வன்முறை சம்பவத்துக்கு மேற்கு வங்க ஆளுநர் சிவி ஆனந்த போஸ் கடும் கண்டனம் தெரிவித்து கூறியிருப்பதாவாது: இது மிக மோசமான தாக்குதல் சம்பவம். இத்தகைய காட்டுமிராண்டித்தனமான தாக்குதல்களை ஜனநாயகத்தை சூறையாடக் கூடிய தாக்குதல்களை தடுக்க வேண்டியது ஒரு நாகரிகமான அரசாங்கத்தின் கடமை. அரசாங்கம் தமது அடிப்படை கடமையை கூட செய்யாமல் இருந்தால் அரசியல் சாசனத்தின் நடவடிக்கை பாயத்தான் செய்யும். அரசியல் சாசனத்தின் படியான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்வது குறித்து பரிசீலிப்போம். இவ்வாறு ஆளுநர் ஆனந்த போஸ் எச்சரித்தார்.

அமலாக்கத்துறையினர் மீதான தாக்குதலுக்கு மேற்கு வங்க காங்கிரஸும் கண்டனம் தெரிவித்துள்ளது. மேற்கு வங்க காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி கூறியதாவது: அமலாக்கத்துறை அதிகாரிகள் மீதான குண்டர்களின் தாக்குதல் மூலம் மேற்கு வங்க மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு இல்லை என்பது தெளிவாகிவிட்டது. இன்று அமலாக்கத்துறை அதிகாரிகள் படுகாயமடைந்துள்ளனர்; நாளை அவர்கள் கொல்லப்படலாம். இத்தகைய தாக்குதல்கள் அதிர்ச்சியை அளிக்கவில்லை. இவ்வாறு ஆதிர் ரஞ்சன் சவுத்ரி கூறினார்.
-
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
"நாளை மத்திய அரசு இருக்காது.. அப்போ உங்களை பார்த்துக்கறோம்.." போன் போட்டு மிரட்டிய மம்தா? பரபரப்பு -
மூத்த திரிணாமுல் தலைவர் மண்டை உடைப்பு.. ரத்தம் கொட்ட கொட்ட பானர்ஜி செய்த சம்பவம்! பரபரப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்!












Click it and Unblock the Notifications