For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

உங்களுக்குத் தேவை சட்டப்பிரிவு 370 நீக்கமா? இந்தியாவுடன் காஷ்மீர் நீடிப்பதா?: ஒமர் அப்துல்லா

By Mathi
Google Oneindia Tamil News

ஸ்ரீநகர்: மத்திய அரசுக்குத் தேவையானது ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் அரசியல் சாசனப் பிரிவு 370 நீக்கமா? அல்லது ஜம்மு காஷ்மீர் இந்தியாவுடன் இணைந்து ஒருங்கிணைந்த பகுதியாக நீடிக்க வேண்டும் என்பதா? என்று அம்மாநில முதல்வர் ஒமர் அப்துல்லா காட்டமாக கேள்வி எழுப்பியுள்ளார்.

Either Article 370 will exist, or J&K won't be a part of India, Omar Abdullah tweets

காஷ்மீரில் தனது தேர்தல் பிரசாரத்தின் போது, சட்டப்பிரிவு 370 உண்மையிலேயே காஷ்மீருக்கு பலன் தருகிறதா என பார்க்கவேண்டும். எனவே, இந்தச் சட்டப் பிரிவு குறித்து நான் திறந்த மனதோடு விவாதிக்கத் தயாராக இருக்கிறேன் என்று நரேந்திர மோடி தேர்தல் பிரசாரத்தின் போது பேசினார்.

மேலும் பாரதிய ஜனதா கட்சியின் தேர்தல் அறிக்கையிலும் ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து அளிக்கும் 370வது பிரிவை நீக்குவோம் என்று உறுதியளிக்கப்பட்டிருந்தது. அப்போதே இதற்கு ஜம்மு காஷ்மீரில் கடும் எதிர்ப்பு ஏற்பட்டது.

இந்நிலையில் மத்திய அமைச்சர் ஜிதேந்திரசிங், அரசியல் சாசனத்தின் 370வது பிரிவை நீக்குவது தொடர்பான ஆலோசனைக் கூட்டங்களுக்கு அழைப்பு விடுத்துள்ளோம் என்று கூறியிருந்தார்.

இதற்கு தமது ட்விட்டர் பக்கத்தில் கடுமையான எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளார் காஷ்மீர் முதல்வர் ஒமர் அப்துல்லா.

அவர் ட்விட்டரில் தெரிவித்த கருத்து:

பிரதமர் அலுவலக புதிய இணை அமைச்சர், சட்டப் பிரிவு 370 ஐ நீக்கும் முயற்சியைத் தொடங்கியிருக்கிறார். அட... இது மிகவும் விரைவான தொடக்கம்தான். யார் இது குறித்து பேசுகிறார் என உறுதியாகச் சொல்ல முடியாது.

<blockquote class="twitter-tweet blockquote" lang="en"><p>Art 370 is the ONLY constitutional link between J&K & rest of India. Talk of revocation of not just ill informed it's irresponsible. 3/3</p>— Omar Abdullah (@abdullah_omar) <a href="https://twitter.com/abdullah_omar/statuses/471279710748413952">May 27, 2014</a></blockquote> <script async src="//platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>

எனது வார்த்தைகளை குறித்து கொள்ளுங்கள். இந்த ட்விட்டர் வார்த்தைகளை பாதுகாப்பாக வைத்துக் கொள்ளுங்கள். இந்தியாவின் ஒரு பகுதியாக காஷ்மீர் இருக்கவேண்டாமா அல்லது சட்டப்பிரிவு 370 நிலைத்து இருக்க வேண்டுமா என்ற வார்த்தைகளை நீண்ட நாள் கழித்து நினைவுபடுத்திப் பாருங்கள்.

ஜம்மு காஷ்மீருக்கும் இந்தியாவுக்கும் சட்டரீதியான பிணைப்பினைத் தரும் ஒரே சட்டம், பிரிவு 370தான். இதனை நீக்கப் போவதாகக் கூறுவது பொறுப்பற்ற செயல்

இவ்வாறு ஒமர் அப்துல்லா தமது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.

இதேபோல் ஜம்மு காஷ்மீரின் மக்கள் மாநாட்டு கட்சித் தலைவர் மெகபூபா முப்தியும் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

English summary
A statement by minister of state in the Prime Minister's Office, Jitendra Singh, on Tuesday sparked the new government's first controversy when he said the Narendra Modi government was open to debate on Article 370 in Jammu & Kashmir,while making it clear that efforts would be made through this exercise to "convince" the "unconvinced". Soon after, Jammu & Kashmir chief minister Omar Abdullah strongly objected to the minister's statement and tweeted, "So the new MOS PMO says process/discussions to revoke Art 370 have started. Wow, that was a quick beginning. Not sure who is talking."
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X