For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மாநிலவாரியாக கட்சிகள் பெற்ற இடங்கள் விவரம்

By Mathi
|

டெல்லி: லோக்சபா தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 338 இடங்களைக் கைப்பற்றியுள்ளது. காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி மொத்தம் 57 இடங்களை மட்டுமே கைப்பற்றியுள்ளது.

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சிகள் முன்னிலை:

பாஜக பாரதிய ஜனதா கட்சி 427 தொகுதிகளில் போட்டியிட்டு 293 இடங்களைக் கைப்பற்றியுள்ளது.

சிவசேனா 18

பாஜகவின் கூட்டணிக் கட்சியான சிவசேனா 20 தொகுதிகளில் போட்டியிட்டு 18 இடங்களை வசமாக்கியது.

Election results leads and trends party wise

தெலுங்குதேசம் - 16

சீமாந்திரா, தெலுங்கானாவில் தெலுங்குதேசம் கட்சி 30 தொகுதிகளில் போட்டியிட்டு 16ல் வெற்றிக்கொடி நாட்டியிருக்கிறது.

சிரோமணி அகாலிதளம் - 4

பஞ்சாப் மாநிலத்தில் 10 தொகுதிகளில் போட்டியிட்டு 4 தொகுதிகளில் வென்றுள்ளது சிரோமணி அகாலிதளம்.

லோக் ஜனசக்தி - 6

ராம்விலாஸ் பாஸ்வானின் லோக் ஜனசக்தியானது 7 தொகுதிகளில் போட்டியிட்டு சிக்சர் அடித்துள்ளது.

நாகா மக்கள் முன்னணி -1

நாகா மக்கள் முன்னணியானது மொத்தம் 1ல் வென்றுள்ளது.

பாட்டாளி மக்கள் கட்சி -1

தமிழகத்தில் 8 தொகுதிகளில் போட்டியிட்ட பாட்டாளி மக்கள் கட்சி 1 தருமபுரி தொகுதியில் மட்டும் வென்றது.

மோசமான தோல்வியை எதிர்கொண்ட தேமுதிக, மதிமுக

பாரதிய ஜனதா கூட்டணியில் 14 இடங்களை போராடி வாங்கிய தேமுதிக ஒரு இடத்திலும் வெற்றி பெறவில்லை. அதேபோல் 7 தொகுதிகளில் போட்டியிட்ட மதிமுகவும் ஒன்றில் கூட வெல்லவில்லை. குறிப்பாக மதிமுக பொதுச்செயலர் வைகோ படுதோல்வியை சந்தித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

காங்கிரஸ் கட்சி 45

நாடு முழுவதும் மொத்தம் 462 இடங்களில் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சியால் 45ஐத்தான் தொட முடிந்தது.

ராஷ்டிரிய ஜனதா தளம்

லாலு பிரசாத்தின் ராஷ்டிரிய ஜனதா தளம் பீகாரில் 28 தொகுதிகளில் போட்டியிட்டு 4 ஐத்தான் கைப்பற்றியுள்ளார்.

தேசியவாத காங்கிரஸ்

23 தொகுதிகளில் போட்டியிட்ட தேசியவாத காங்கிரஸுக்கோ 1 தொகுதிதான்.

கேரள காங்கிரஸ்(எம்)

கேரள காங்கிரஸ் (எம்) போட்டியிட்ட ஒரு தொகுதியில் வென்றுள்ளது.

முஸ்லிம் லீக்

இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் போட்டியிட்ட 2 தொகுதிகளை தம் வசமாக்கியது.

ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா

இக்கட்சி ஒரு தொகுதியை கைப்பற்றியுள்ளது.

முட்டை வாங்கிய கூட்டணிக் கட்சி.

காங்கிரஸின் கூட்டணிக் கட்சிகயான ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சி முட்டட வாங்கியுள்ளது.

அதிமுக 37

தமிழகத்தில் அதிமுக தனித்து போட்டியிட்டு 37 தொகுதிகளைக் கைப்பற்றியுள்ளது.

திரிணாமுல் காங்கிரஸ் 34

மமதா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் 34 தொகுதிகளைக் கைப்பற்றியது.

பிஜூ ஜனதா தளம் 19

ஒடிஷாவில் பிஜூ ஜனதா தளம் 19 தொகுதிகளை தம் வசமாக்கியது.

தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி

தெலுங்கானாவில் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி 11 தொகுதிகளை கைப்பற்றியது.

ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ்

சீமாந்திராவில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி 9 தொகுதிகளில் வென்றது.

15 கூட தேறாத இடதுசாரிகள்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ் கம்யூனிஸ்ட் கட்சி, புரட்சிகர சோசலிஸ்ட் கட்சி, பார்வார்டு பிளாக் ஆகியவை இணைந்து தேர்தலை எதிர்கொண்டன. மொத்தம் 94 தொகுதிகளில் போட்டியிட்டன.

இதில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 1, மார்க்சிஸ்ட் கட்சி 9 தொகுதிகளிலும் புரட்சிகர சோசலிஸ்ட் கட்சி 1 இடத்தில் வென்றுள்ளன.

ஐக்கிய ஜனதா தளம் 2

ஐக்கிய ஜனதா தளம் கட்சி 2 தொகுதிகளைத்தான் கைப்பற்றியுள்ளது.

மதச்சார்பற்ற ஜனதா தளம் 2

தேவே கவுடாவின் மதச்சார்பற்ற ஜனதா தளமும் 2 தொகுதிகளில்தான் வென்றுள்ளது.

ஆம் ஆத்மி

ஆம் ஆத்மி கட்சி நாடு முழுவதும் 424 தொகுதிகளில் போட்டியிட்டது. அக்கட்சி 4 தொகுதிகளை வென்றுள்ளது.

சமாஜ்வாடி கட்சி 4

சமாஜ்வாடி கட்சி 4 இடங்களைக் கைப்பற்றியது.

முட்டை வாங்கிய திமுக, பகுஜன் சமாஜ் கட்சி

திமுக, பகுஜன் சமாஜ் கட்சி ஆகிய கட்சிகள் முட்டை வாங்கியுள்ளன.

English summary
The BJP-led NDA appears to be heading for a victory in the Lok Sabha elections with the trends in the counting of votes giving the saffron party leads in 257 seats on its own while its allies led in 39 seats. The ruling Congress was struggling with leads only in 45 seats as per the trends available for 490 seats. Among its allies, NCP was ahead in five, Kerala Congress and RSP one each.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X