பாஜக ஆட்சியில் மக்களுக்கு எல்லாமே கிடைத்தது, ஆனா காங்கிரசுக்குதான் ஓட்டு போடுவார்கள்: மாஜி அமைச்சர்
போபால்: மத்தியப் பிரதேசத்தில் மக்களுக்கு எல்லாம் கிடைத்தாலும் அவர்கள் காங்கிரஸுக்குதான் ஓட்டு போடுவார்கள் என அக்கட்சியின் முன்னாள் அமைச்சரும், வேட்பாளருமான பி.சி.சர்மா கூறியுள்ளார்.
230 சட்டமன்ற தொகுதிகள் கொண்ட மத்தியப் பிரதேச மாநிலத்திற்கு கடந்த 17ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டிருக்கிறது. டிசம்பர் மாதம் 3ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு அன்றைய தினமே முழு ரிசல்டும் வெளியாகிறது. இந்நிலையில் இந்த தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெறும் எனவும், பாஜக மக்களுக்கு என்னதான் செய்திருந்தாலும், அவர்கள் காங்கிரஸுக்குதான் வாக்களிப்பார்கள் என அக்கட்சியின் முன்னாள் அமைச்சரும், போபால் தென்மேற்கு சட்டமன்றத் தொகுதியின் வேட்பாளருமான பி.சி.சர்மா கூறியுள்ளார்.

மத்தியப் பிரதேசத்தில் தற்போது பாஜக ஆட்சியில் இருக்கிறது. ஆனால் இந்த தேர்தலில் பாஜகவுக்கு காங்கிரஸ் பயங்கர டஃப் கொடுத்திருக்கிறது. இந்நிலையில் தேர்தல் முடிவுகள் குறித்து பேசிய சர்மா, "காங்கிரஸ் கடந்த முறை 114 இடங்களில் வென்றது. ஆனால் இந்த முறை 174 இடங்களில் வென்று ஆட்சியை கைப்பற்றும். நான் அமைச்சர் கமல் படேல் தொகுதிக்கு சென்றிருந்தேன். அம்மக்களிடம் பாஜகவால் உங்களுக்கு ஏதாவது கிடைத்ததா? என்று கேட்டேன்.
தங்களுக்கு எல்லாம் கிடைத்துவிட்டது என்றும், இருப்பினும் காங்கிரஸுக்குதான் வாக்களிப்போம் என்று அவர்கள் கூறினார்கள். மக்கள் சொல்வதை போல காங்கிரஸ் பெரும்பான்மையான வாக்குகள் பெற்று ஆட்சியில் அமரும்" என்று கூறியுள்ளார். இவருடைய இந்த பேச்சுக்கு பல்வேறு தரப்பினரும் மாற்று கருத்து தெரிவித்துள்ளனர். இப்படி கூறினால் பாஜக அனைத்தையும் செய்திருப்பதாக அர்த்தமாகிவிடும் என விமர்சித்துள்ளனர்.
இதேபோல உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா தோல்வியடைந்தபோதும் இவர் கூறிய கருத்துக்கள் பெரிதும் விவாதிக்கப்பட்டிருந்தது. அதாவது அமலாக்கத்துறையினருக்கு பயந்துதான் இந்திய அணி தோல்வியடைந்திருந்தது என்று இவர் கூறியிருந்தார்.
மத்தியப் பிரதேசத்தை பொறுத்த அளவில் கடந்த 2003ம் ஆண்டிலிருந்து 2023ம் ஆண்டு வரை பாஜகவே ஆட்சியில் இருந்து வருகிறது. இடையில் இரண்டு ஆண்டுகள் மட்டும் காங்கிரஸ் இருந்தது. இதனால் ஆளும் கட்சியான பாஜக மீது மக்களுக்கு எதிர்ப்பு உணர்வு ஏற்பட்டிருக்கிறது என அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். இது தவிர கடந்த 2018ம் ஆண்டு 114 இடங்களை வென்று காங்கிரஸ் கூட்டணி கட்சிகளுடன் ஆட்சியை கைப்பற்றிய நிலையில், காங்கிரஸிலிருந்து சில எம்எல்ஏக்கள் விலகி பாஜகவில் சேர்ந்தனர். இதனால் காங்கிரஸ் ஆட்சி கலைக்கப்பட்டது. பின்னர் பாஜக ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியது.
இது மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்திருக்கும் எனவும் விமர்சகர்கள் கூறுகின்றனர். மட்டுமல்லாது கருத்துக்கணிப்புகளும் காங்கிரஸ்தான் ஆட்சியை கைப்பற்றும் என்று கூறியிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications