For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

10 ரூபாய்க்காக பெற்ற பிள்ளைகளை கம்பத்தில் கட்டி வைத்து வதைத்த தந்தை!

10 ரூபாய்க்காக பிள்ளைகளை கம்பத்தில் கட்டி அடித்துள்ளார் தந்தை.

Google Oneindia Tamil News

உத்திரபிரதேசம்: உலகம் உருள உருள மனிதநேயமும் சேர்ந்து உருண்டு தேய்ந்து வருகிறது. சில செய்திகளை கேட்டாலே உணர்வற்று கிடக்கும் ஜடங்களுக்கு கூட கோபம் கொப்பளித்து வரும். அப்படித்தான் இதுவும். உத்தரபிரதேசத்தில் நடந்துள்ளது.

உத்தரபிரதேசத்தில் ஜலால் நகர் என்ற பகுதி உள்ளது. அங்கு இஸ்லாம் என்பவர் வசித்து வருகிறார். அவருக்கு 3 குழந்தைகள். ஒரு பெண், இரண்டு பையன்கள். இவர் நேற்று 3 குழந்தைகளை கூப்பிட்டு, 10 ரூபாய் கொடுத்து சந்தைக்கு போய் ஏதோ ஒரு பொருளை வாங்கிட்டு வரச்சொன்னார்.
அந்த குழந்தைகளும் சந்தைக்கு போனார்கள்.

Father beats his children brutally in U.P

சந்தையில் கூட்டம் அதிகம் என்பதால் அவங்க அப்பா கொடுத்த 10 ரூபாயை எங்கேயோ போட்டுவிட்டார்கள். காசு தொலைந்து போனதும் 3 பேருக்கும் உடம்பெல்லாம் பயம் வந்து ஒட்டிக் கொண்டது. 10 ரூபாவை காணோமே, வீட்டுக்கு போனால் அப்பா அடிப்பாரே என 3 குழந்தைகளும் காசை தேட ஆரம்பித்தனர். சந்தையின் கூட்டத்தில் அந்த குழந்தைகள் மிகவும் கஷ்டப்பட்டும், அப்பாவின் கோபத்தை நினைத்தும் தேடிக் கொண்டே இருந்தனர். இதற்கிடையே பிள்ளைகள் இவ்வளவு நேரம் ஆகியும் திரும்பி வரலையே என்று, இஸ்லாம் சந்தைக்கே தேடிக்கொண்டு வந்துவிட்டார்.

அங்கே அப்பாவை பார்த்ததும் 3 பிள்ளைகளும் "காசு தொலைஞ்சு போச்சு" என்றனர். இதனால் ஆத்திரமடைந்த இஸ்லாம், தன் குழந்தைகளை அங்கிருந்த ஒரு மின்கம்பத்தில் தலைகீழாக தொங்கவிட்டு சரமாரியாக அடிக்க தொடங்கிவிட்டார். இப்படி 3 குழந்தைகளையும் கொடூரமாக தாக்கியதால் குழந்தைகள் வலி பொறுக்க முடியாமல் அலறினர். அந்த அலறலை கேட்டு அங்கிருந்த மக்கள் எல்லோரும் திரண்டு வந்து குழந்தைகளை மின்கம்பத்திலிருந்து அவிழ்த்து மீட்டனர்.

பிஞ்சுகளிடம் தன் வீரத்தையும், வெறியையும், முரட்டுத்தனத்தையும் காட்டிய இஸ்லாம் பற்றி போலீசில் அந்த மக்களே புகாரும் அளித்தனர். புகாரை பெற்றுக் கொண்ட போலீசாரும் கடுமையான தண்டனை வழங்குகிறோம் என உறுதி அளித்துள்ளனர்.

English summary
Father beats his children brutally in U.P.,
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X