For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

''நான் தான் கொன்றேன்''... பெண் சாப்ட்வேர் என்ஜினியரை கவுரவக் கொலை செய்த தந்தை ஒப்புதல்

By Mayura Akilan
Google Oneindia Tamil News

ஹைதராபாத்: ஜாதிமாறி காதல் திருமணம் செய்த என் மகள் தீப்தியை நான்தான் கொலை செய்தேன் என்று கொலையான சாப்ட்வேர் என்ஜினியர் பெண்ணின் தந்தை ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார்.

குண்டூரைச் சேர்ந்தவர் ஹரிபாபு, விவசாயத் தொழில் செய்து வருகிறார். அவரது மனைவி சம்ராஜ்யம் குடும்பத்தை கவனித்து வருகிறார். இவரது மகள் தீப்தி (26), தனியார் தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் சாப்ட்வேர் என்ஜினீயராக வேலை பார்த்து வந்தார். இவர் தன்னுடன் வேலை பார்த்த கிரண் குமார் என்பவரை 2001ம் ஆண்டிலிருந்து காதலித்துள்ளார். இருவரும் வெவ்வேறு சமுகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் தீப்தியின் பெற்றோர் எதிர்த்தனர்.

Father takes blame for techie daughter’s murder

இந்நிலையில் தீப்தி-கிரண்குமார் காதல் ஜோடி கடந்த 21ம்தேதி ஹைதராபாத்தில் உள்ள ஆர்யசமாஜத்தில் திருமணம் செய்து கொண்டனர்.

இதனைத் தொடர்ந்து தீப்தியை சந்தித்து அவர்களுடைய திருமணத்தை ஏற்றுக் கொண்டதாக பெற்றோர்கள் கூறினார். அத்துடன் குண்டூரில் சில சடங்குகள் செய்ய வேண்டும் என்று கூறி புதுமண தம்பதியரை கடந்த 23ம் தேதி வீட்டிற்கு அழைத்துச் சென்றனர்.

பின்னர் அங்கிருந்து தீப்தியை மட்டும் தனியாக அழைத்துச் சென்ற அவர்கள், அவரது கணவரையும் நண்பர்களையும் விருந்தினர் இல்லத்தில் தங்கியிருக்குமாறு கூறியுள்ளனர்.

நேற்று காலை கிரண்குமார் மனைவியை அவரது செல்போனில் தொடர்பு கொண்டுள்ளார். ஆனால் எந்தவித பதிலும் இல்லை. இதனால் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் விரைந்து வந்து, வீட்டின் கதவை உடைத்து பார்த்தபோது, தீப்தி கழுத்து நெரிக்கப்பட்டு இறந்து கிடந்தார்.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த பெண்ணின் பெற்றோரை கைது செய்தனர்.

வேறு சமூகத்தைச் சேர்ந்தவரை திருமணம் செய்ததால் மகளை அவர்கள் கவுரவ கொலை செய்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதுதொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தீப்தி கம்மா சமுதாயத்தை சார்ந்தவர், கிரண்குமார் கபு சமுதாயத்தை சேர்ந்தவர் என்பதுதான் கொலைக்கு காரணமாகிவிட்டது. இதனிடையே செய்தியாளர்களிடம் பேசிய தீப்தியின் தந்தை, மகளின் கொலைக்கு தான் மட்டுமே காரணம் என்று கூறி கண்ணீர் விட்டார். தன் மனைவிக்கும் இதற்கும் எந்த ஒரு தொடர்பும் இல்லை என்றும் கூறினார்.ஆனால் தந்தையால் மட்டுமே பெண்ணை கொலை செய்திருக்க வாய்ப்பு இல்லை என்று சந்தேகமடைந்த போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.

English summary
The police on Tuesday presented the couple, who had murdered their daughter for marrying out the caste, before the media. According to Guntur West DSP T.V. Nagaraju, deceased software engineer P. Deepti’s parents, P. Hari Babu and Sambrajyam, had killed their daughter in Guntur city on March 23.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X