For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கூடங்குளம்: ''அனைத்து பாதுகாப்பு அம்சங்களும் நிறைவேற்றப்பட்டுள்ளதா?''- உச்ச நீதிமன்றம் கேள்வி

Google Oneindia Tamil News

டெல்லி: கூடங்குளம் அணுமின் நிலையத்தில் தேவையான அனைத்து பாதுகாப்பு அம்சங்களும் நிறைவேற்றப்பட்டுள்ளதா? என்று மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது.

கூடங்குளம் அணுமின் நிலையம் தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் ஏ.கே.பட்நாயக், விக்ரம்ஜித் சென் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு கடந்த 14ம் தேதி விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுதாரர் பூவுலகின் நண்பர்கள் அமைப்பைச் சேர்ந்த சுந்தர ராஜன் சார்பில் வழக்குரைஞர் பிரசாந்த் பூஷண் ஆஜராகி வாதாடினார். அவர் தனது வாதத்தின் போது, கூடங்குளம் அணு உலையில் உச்சநீதிமன்ற அறிவு றுத்தல் படி, 15 நிபந்தனைகளை நிறை வேற்ற மத்திய அரசு தவறிவிட்டதாகவும், எனவே உடனடியாக அணு உலையை மூடிவிட வேண்டும் என்றும் கூறினார்.

File report on safety measures at Kudankulam Nuclear Plant: SC to Centre

உடனே குறுக்கிட்ட மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் கூளம் ஜி.வாகன்வதி, தற்போது அணு உலை யில் மின் உற்பத்தி தொடங்கப்பட்டுளளது என்றும், எந்த பாதிப்பும் கிடையாது என்றும், எனவே இந்த மனுவை தேவையற்றது எனக்கருதி உடனடியாக தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் வாதிட்டார்.

இரு தரப்பு வாதங்களை யும் கேட்ட நீதி பதிகள், அணு உலையில் பாதுகாப்பு அம்சங்கள் அனைத்தும் நிறைவேற்றப் பட்டுள்ளனவா? என்று மத்திய அரசுக்கு கேள்வி எழுப்பினார்கள். பின்னர் வழக்கு விசாரணையை 17-ஆம் (திங்கட்கிழமை)தேதிக்கு நீதிபதிகள் ஒத்தி வைத்தனர்.

இன்று இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்த போது உச்சநீதிமன்ற பரிந்துரைகளை பின்பற்றி கூடங்குளம் அணுமின்நிலையம் திறக்கப்பட்டதா என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். மேலும், 15 பரிந்துரைகள் பின்பற்றப்பட்டுள்ளதா என மத்திய அரசு 3 வாரத்தில் பதிலளிக்கவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

English summary
The Supreme Court on Monday directed the Centre to file a comprehensive report over its compliance with the court-mandated 15 safety measures on commissioning of the Kudankulam nuclear plant.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X