ஜெய்ப்பூர் அடுக்குமாடி வணிக வளாகத்தில் பயங்கர தீ விபத்து!

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஜெய்ப்பூர்: அடுக்குமாடி வணிக வளாகத்தில் ஏற்பட்ட பயங்கர தீவிபத்தில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் நாசமானது.

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள அடுக்கு மாடி வணிக வளாகத்தில் திருமணத்துக்கான புல்வெளி திடல், மல்டிப்ளக்ஸ் சினிமா திரையரங்கு மற்றும் கேளிக்கை விடுதி ஆகியவை செயல்பட்டு வருகிறது.

Fire accident in Jaipur marriage lawns at Entertainment Paradise Multiplex Cinema

இங்கு இன்று பிற்பகல் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து 10க்கும் மேற்பட்ட வாகனங்களில் தீயணைப்புத்துறையினர் விரைந்து வந்தனர்.

பல மணிநேரம் போராடிய அவர்கள் கொழுந்துவிட்டு எரிந்த தீயை அணைத்தனர். நல்வாய்ப்பாக இந்த விபத்தில் உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை.

மேலும் திருமணத்திற்காக போடப்பட்டிருந்த செட் முழுவதும் இந்த தீ விபத்தில் நாசமானது. ஆனால் தீ திரையரங்கை நெருங்குவதற்குள் 90 நிமிட போராட்டத்துக்குப் பின் அணைக்கப்பட்டது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Fire accident in Jaipur marriage lawns at Entertainment Paradise Multiplex Cinema. Ten fire tenders were at the spot to douse the fire. no loss of life reported in this accident.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற

X