ரூமிற்குள் அடைத்து சிறுமியை சீரழித்து வீடியோ.. வசமாய் சிக்கிய காங்கிரஸ் எம்எல்ஏவின் மகன்.. அதிர்ச்சி
ஜெய்ப்பூர் : ராஜஸ்தான் மாநிலத்தில் கடந்த ஆண்டு மைனர் சிறுமியை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்ததோடு அதனை வீடியோ எடுத்ததாக காங்கிரஸ் எம்எல்ஏவின் மகன் உட்பட 5 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் அல்வார் பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமியை அதேபகுதியை சேர்ந்த 2 பேர் கடந்த பிப்ரவரி 16ம் தேதி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். மேலும், அந்த செயலை செல்போனில் வீடியோவாக எடுத்துள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து வெளியே யாரிடமாவது கூறினால் வீடியோவை சமூகவலைதளத்தில் வெளியிட்டுவிடுவோம் என மிரட்டியுள்ளனர். இதனால், அஞ்சிய அந்த சிறுமி நடந்த கொடூரம் குறித்து யாரிடமும் கூறவில்லை.

பாலியல் பலாத்காரம்
இதனை தொடர்ந்து அந்த 2 பேரும் கடந்த பிப்ரவரி 19ம் அந்த சிறுமியை ஒரு ஓட்டலுக்கு வருமாறு அழைத்துள்ளனர். இதனால், அந்த சிறுமி ஓட்டலுக்கு சென்றுள்ளார். அங்கு அந்த 2 பேரும் தனது நண்பர்கள் மேலும் 3 பேருடன் சேர்ந்துகொண்டு சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இந்த கொடூரம் குறித்து அந்த சிறுமி தனது தாயாரிடம் தெரிவித்துள்ளார். இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த அந்த சிறுமியின் தாய் உடனடியாக போலீசில் புகார் அளித்தார்.

15 வயது சிறுமி
புகாரை தொடர்ந்து சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு தப்பியோடிய குற்றவாளிகளை தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில் இந்த அதிர்ச்சி சம்பவத்தில், கடந்த ஆண்டு பிப்ரவரியில் 15 வயது சிறுமியை கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்ததாக 5 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். போலீசார் வழக்குப்பதிவு செய்த 5 பேரில் ஒருவர் ராஜஸ்தானில் உள்ள காங்கிரஸ் எம்எல்ஏவின் மகன் என போலீசார் சனிக்கிழமை தெரிவித்தனர்.

காங்கிரஸ் எம்.எல்.ஏ.வின் மகன்
தௌசா மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
தேசிய மகளிர் ஆணையம், சந்தேகத்திற்குரிய அனைவரையும் விரைவில் கைது செய்யுமாறு ராஜஸ்தான் காவல்துறைக்கு கோரிக்கை விடுத்துள்ளதாக தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது. தௌசா கூடுதல் எஸ்பி லால் சந்த் கயல் கூறுகையில், எஃப்ஐஆர் படி, குற்றம் 2021 பிப்ரவரியில் நடந்தது எனவும், இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 5 பேரில் காங்கிரஸ் எம்எல்ஏ ஜோஹரி லால் மீனாவின் மகன் தீபக் மீனாவும் ஒருவர் என்று எஸ்பி லால் சந்த் கயல் கூறினார்.

பலாத்கார வீடியோ
அல்வார் மாவட்டத்தில் வசித்த சிறுமியை தௌசாவுக்கு அழைத்துச் செல்லப்பட்டு கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. கடந்த ஆண்டு சிறையில் அடைக்கப்பட்ட குற்றவாளியில் ஒருவர், தௌசாவில் உள்ள ஒரு ஹோட்டலுக்கு சிறுமியை அழைத்துச் சென்றதாகவும், ஏற்கனவே இருந்த இரண்டு ஆண்களைத் தவிர மூன்று பேர் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக சிறுமி கூறியுள்ளார். கும்பல் பலாத்காரம் செய்ததை எம்.எல்.ஏ.வின் மகன் வீடியோ எடுத்ததாக போலீசார் கூறினார். இதையடுத்து அவர்கள் மீது கூட்டு பலாத்காரம் மற்றும் தகவல் தொழில்நுட்பச் சட்டம், எஸ்சி/எஸ்டி (வன்கொடுமை தடுப்புச் சட்டம்) மற்றும் போக்சோ சட்டத்தின் தொடர்புடைய பிரிவுகள் உள்ளிட்ட குற்றங்களுக்காக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது

காங்கிரஸ் உறுதி
இந்நிலையில் பாரதிய ஜனதா கட்சியைப் போல் அல்லாமல் கட்சிக்குள் குற்றச் செயல்களில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டப்பட்ட எவருக்கும் எதிராகக் கடுமையாகச் செயல்படுவோம் என்றும், அவர்களின் அந்தஸ்தைப் பொருட்படுத்தாமல் அவர்களைக் காப்பாற்ற மாட்டோம் என்றும் புதுதில்லியில் காங்கிரஸ் கட்சி கூறியுள்ளது. இந்த சம்பவம் குறித்து காங்கிரஸ் கட்சியின் தலைமை செய்தித் தொடர்பாளர் ரந்தீப் சுர்ஜேவாலா கூறுகையில், "குற்றம் தொடர்பான விசாரணை முடிந்ததும் கட்சி நடவடிக்கை எடுக்கும். குற்றவாளிகளை மறைக்கும் கலாச்சாரம் கட்சிக்கு இல்லை என்றும் அவர் கூறினார்.












Click it and Unblock the Notifications