கோவாவில் பிரியங்கா காந்தி கால் வைக்க... 5 மூத்த காங்கிரஸ் தலைவர்கள் கட்சியில் இருந்து ராஜினாமா

Subscribe to Oneindia Tamil

பனாஜி: கோவாவில் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி பயணம் மேற்கொண்டுள்ள நிலையில் அக்கட்சியின் 5 மூத்த தலைவர்கள் கட்சியில் இருந்து விலகி அதிர்ச்சி வைத்தியம் கொடுத்துள்ளனர்.

கோவாவில் காங்கிரஸ் கட்சி இருந்த இடம் தெரியாமல் துடைத்தெடுக்கப்பட்டு வருகிறது. திரிணாமுல் காங்கிரஸ், பாஜக ஆகிய இரு கட்சிகளும் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள், தலைவர்களை மாறி மாறி இழுத்து வருகின்றனர்.

அண்மையில் மமதா பானர்ஜி கோவாவில் முகாமிட்டிருந்தார். கோவாவில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்தும் வகையில் அதிருப்தி காங்கிரஸ் தலைவர்களை அக்கட்சி வளைத்துப் போட்டு வருகிறது.

ராகுல், பிரியங்கா

ராகுல், பிரியங்கா

கோவாவில் காங்கிரஸ் கட்சி காணாமல் போவதை தடுக்க முடியாமல் டெல்லி மேலிடம் திணறி வருகிறது. இதனால் எஞ்சிய காங்கிரஸ் தலைவர்களையாவது தக்க வைக்க ராகுல் காந்தியைத் தொடர்ந்து பிரியங்கா காந்தி இன்று பனாஜி வருகை தந்தார்.

பிரியங்கா ஆலோசனை

பிரியங்கா ஆலோசனை

காங்கிரஸ் கட்சியின் மூத்த நிர்வாகிகளை சந்தித்து அடுத்த ஆண்டு நடைபெறும் சட்டசபைத் தேர்தல் குறித்து ஆலோசனை நடத்தினார் பிரியங்கா. கோவா சட்டசபை தேர்தலில் காங்கிரஸுடன் சிவசேனா கூட்டணி அமைக்கிறது. மகாராஷ்டிராவில் சிவசேனா-தேசியவாத காங்கிரஸ்- காங்கிரஸ் கூட்டணி அரசு நடைபெறுவதால் சிவசேனா இந்த முடிவை எடுத்திருக்கிறது.

5 தலைவர்கள் விலகல்

5 தலைவர்கள் விலகல்

இந்த நிலையில் போர்வோரிம் சட்டசபை தொகுதியில் 5 மூத்த காங்கிரஸ் தலைவர்கள் இன்று கட்சியில் இருந்து விலகுவதாக திடீரென அறிவித்தனர். இந்த 5 தலைவர்களும் சுயேட்சை எம்.எல்.ஏ.வான ரோகன் கந்தேவின் ஆதரவாளர்கள். காங்கிரஸில் இருந்து விலகுவது தொடர்பாக கருத்து தெரிவித்த 5 பேரும், 2022 சட்டசபை தேர்தலை எதிர்கொள்வதில் காங்கிரஸ் அக்கறை காட்டவில்லை. அதனால் கட்சியில் இருந்தே விலகுகிறோம் என அறிவித்துள்ளனர். பிரியங்கா காந்தி கோவாவில் பயணம் மேற்கொண்ட நிலையில் காங்கிரஸ் தலைவர்கள் கூண்டோடு விலகி இருக்கின்றனர்.

கூட்டணி குறித்து முரண்பாடு

கூட்டணி குறித்து முரண்பாடு

கோவா காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளராக முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் இருந்து வருகிறார். கோவா பார்வார்டு கட்சியுடன் காங்கிரஸ் கூட்டணி வைப்பதில் ப.சிதம்பரம் மற்றும் மூத்த காங்கிரஸ் தலைவர் தினேஷ் குண்டுராவ் இருவரும் மாறுபட்ட கருத்துகளைத் தெரிவித்து வந்தனர். டெல்லியில் கோவா பார்வார்டு கட்சியினர் ராகுல் காந்தியை சந்தித்த பின்னரும் இது தொடர்பான குழப்பம் ஓயவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+