For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் சன்டிகர் வந்த பிரான்ஸ் அதிபர் ஹாலண்டே

By Siva
Google Oneindia Tamil News

சன்டிகர்: குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ள பிரான்ஸ் அதிபர் பிரான்காய்ஸ் ஹாலண்டே 3 நாட்கள் சுற்றுப் பயணமாக இன்று மதியம் இந்தியா வந்தார்.

இந்த ஆண்டு டெல்லி செங்கோட்டையில் நடக்கும் குடியரசு தின விழாவில் பிரான்ஸ் அதிபர் பிரான்காய்ஸ் ஹாலண்டே சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ள உள்ளார். இதற்காக அவர் மூன்று நாட்கள் பயணமாக இன்று மதியம் இந்தியா வந்துள்ளார்.

விமானம் மூலம் சன்டிகர் வந்த அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. ஹாலண்டேவை சந்திக்க பிரதமர் மோடி சன்டிகர் சென்றுள்ளார்.

Francois Hollande reaches Chandigarh for his 3-day trip, heavy security deployed

ஹாலண்டேவை வரவேற்று மோடி ட்விட்டரில் கூறியிருப்பதாவது,

பிரான்ஸ் அதிபர் ஹாலண்டேவை வரவேற்கிறேன். குடியரசு தின விழா கொண்டாட்டங்களில் அவர் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்வதில் பெருமையும், மகிழ்ச்சியும் அடைகிறோம்.

நானும், ஹாலண்டேவும் சன்டிகர் மற்றும் டெல்லியில் சந்திக்கிறோம் என்று தெரிவித்துள்ளார்.

குடியரசு தின கொண்டாட்டத்தின்போது ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளால் ஹாலண்டே மற்றும் மோடியின் உயிருக்கு ஆபத்து இருப்பதால் அவர்களின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
France president Hollande has reached Chandigarh on sunday. He is the chief guest for this year republic day celebrations.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X