எனது மன உளைச்சலுக்கு ஈடாக ரூ.14 கோடி வேண்டும்.. சுப்ரீம் கோர்ட்டுக்கு கடிதம் எழுதிய நீதிபதி கர்ணன்

Posted By:
Subscribe to Oneindia Tamil

கொல்கத்தா: சுப்ரீம் கோர்ட் ரூ.14 கோடி நஷ்ட ஈடு தர வேண்டும் என கேட்டு கொல்கத்தா ஹைகோர்ட் நீதிபதி கர்ணன் நோட்டீஸ் அனுப்பியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கொல்கத்தா ஹைகோர்ட்டு நீதிபதி சி.எஸ். கர்ணன், கோர்ட்டு அவமதிப்பு வழக்கில் ஆஜராகாத நிலையில், பிடிவாரண்டு பிறப்பித்து உச்சநீதிமன்றம், உத்தரவிட்டது. இது இந்திய நீதித்துறை வரலாற்றில் இதுவரை நடக்காத ஒன்று.

இந்த நிலையில் கொல்கத்தாவில் பேட்டியளித்த நீதிபதி கர்ணன், என் மீது தானாக முன்வந்து கோர்ட்டு அவமதிப்பு வழக்கு பதிவு செய்திருப்பது, என்னை தொல்லை செய்வதற்குத்தான் என குற்றம் சாட்டினார்.

ஆஜர் இல்லை

ஆஜர் இல்லை

மார்ச் 31ம் தேதி கோர்ட்டு அவமதிப்பு வழக்கில் ஆஜராக பிறப்பித்த உத்தரவை ஏற்பீர்களா என்ற நிருபர்களின் கேள்விக்கு இல்லை என்று பதில் அளித்திருந்தார்.

மன உளைச்சல்

மன உளைச்சல்

இந்நிலையில், உச்சநீதிமன்றத்திற்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார் நீதிபதி கர்ணன். அதில், உச்சநீதிமன்றத்தின் நடவடிக்கையால் தனக்கு மன உளைச்சல் ஏற்பட்டுள்ளதாகவும், அதற்கு நஷ்ட ஈடாக ரூ.14 கோடியை வழங்க வேண்டும் என்றும், கேட்டுக்கொண்டுள்ளார்.

கோர்ட் அவமதிப்பு

கோர்ட் அவமதிப்பு

ஊழல் குறித்த ஒரு கருத்துக்காக கர்ணன் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பதியப்பட்டுள்ளது. சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி ஹேகர் தலைமையிலான 7 பேர் கொண்ட அரசியல் சாசன பெஞ்ச் இதுகுறித்து விசாரித்த நீதிமன்றத்தில் ஆஜராக கர்ணனுக்கு நோட்டீஸ் அனுப்பியிருந்தது குறிப்பிடத்தக்கது.

அதிகார எல்லை

அதிகார எல்லை

ஹைகோர்ட் ஒன்றும் சுப்ரீம்கோர்ட்டின் அடிமை கிடையாது என்றும், இரண்டும் அரசியல் சாசன பாதுகாப்பு பெற்ற அமைப்புகள் என்றும் கர்ணன் தனது பேட்டியில் கூறியிருந்தார். இந்த நிலையில், நீதிபதி மற்றும் சுப்ரீம்கோர்ட் நடுவேயான மோதல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Justice C Karnan has dashed off a letter to Supreme Court seeking compensation of Rs 14 crore. He says that the orders of the Supreme Court have disturbed his mind and hence compensation of Rs 14 crore be paid to him.
Please Wait while comments are loading...