"செத்து போயிடுங்கள்.." பள்ளி கட்டணம் பற்றி புகாரளித்த பெற்றோருக்கு.. பாஜக அமைச்சரின் ஷாக் பதில்
போபால்: மத்திய பிரதேசத்தில் பள்ளி கட்டணம் தொடர்பாகப் புகார் அளித்த பெற்றோர்களைப் பார்த்து, "செத்துப் போய்விடுங்கள்" என பாஜக அமைச்சர் இந்தர் சிங் பர்மர் திட்டும் வீடியோ ட்விட்டரில் வைரலாகியுள்ளது.
நாட்டில் கொரோனா வைரஸ் 2ஆம் அலை இப்போது தான் மெல்லக் குறைந்து வருகிறது. தினசரி பாதிப்பு 40 ஆயிரத்திற்குக் கீழ் குறைந்துள்ளது.
இதனால் வேக்சின் பணிகளை அனைத்து மாநில அரசுகளும் தீவிரப்படுத்தியுள்ளன. தற்போது 18+ வேக்சின் செலுத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

பள்ளிகள் மூடல்
கொரோனா பரவல் காரணமாக தற்போது நாட்டிலுள்ள அனைத்து பள்ளிகளும், கல்லூரிகளும் மூடப்பட்டுள்ளது. இதனால் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமே பாடங்கள் நடத்தப்படுகிறது. இருந்தாலும்கூட பல பள்ளிகள் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாகப் பலரும் புகார் அளித்துள்ளனர்.

பள்ளி கட்டணம்
பள்ளி கட்டணம் உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கிலும் மாணவர்களிடம் டியூஷன் கட்டணம் மட்டுமே வசூலிக்க வேண்டும் என்றும் இதர கட்டணங்கள் எதுவும் வசூலிக்கக் கூடாது என்றும் உத்தரவிட்டுள்ளது. இருந்தாலும் மத்தியப் பிரதேசத்தில் பல பள்ளிகள் கூடுதலாகவே கட்டணம் வசூலிப்பதாகக் குற்றஞ்சாட்டுகின்றனர்.

பெற்றோர்கள் புகார்
இது தொடர்பாகப் புகார் அளிக்க அம்மாநிலத்தில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் இந்தர் சிங் பர்மரை பெற்றோர்கள் சந்தித்துள்ளனர். பள்ளி கட்டணம் அதிகமாக இருப்பதாகவும் அதை முறைப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறியுள்ளனர். மேலும் நிலைமை இப்படி இருந்தால் நாங்கள் என்ன செய்வது, செத்து மடிய வேண்டுமே என்றும் சிலர் ஆவேசமாகக் கேட்டுள்ளனர்.

"செத்து போய்விடுங்கள்"
அதற்கு இந்தர் சிங் பர்மர், "செத்து போய்விடுங்கள்" என்று கூறிவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் கோபடைந்த 80க்கும் மேற்பட்ட பெற்றோர்கள். அவரது அலுவலகத்திற்கு எதிரியிலேயே போராட்டம் நடத்தினர். பள்ளி கட்டணம் தொடர்பாகப் புகார் அளித்த பெற்றோர்களைப் பார்த்து, "செத்து போய்விடுங்கள்" என அமைச்சர் இந்தர் சிங் பர்மர் திட்டும் வீடியோ இப்போது ட்விட்டரில் வைரலாகியுள்ளது.

விமர்சனம்
இதனை காங்கிரஸ் மிகக் கடுமையாக விமர்சித்துள்ளது. இது பற்றி மத்தியப் பிரதேச காங்கிரஸ் தலைவர் தனது ட்விட்டரில், " மத்தியப் பிரதேச முதல்வரும் பள்ளிக் கல்வித் துறை அமைச்சரும் இஷ்டம் போல நடந்து கொள்கிறார்கள். பள்ளி கட்டணம் குறித்து புகார் அளித்த பெற்றோரை பார்த்துச் செத்துவிடுங்கள் என்கிறார். இவர் உடனடியாக பதவி விலக வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். அமைச்சரின் பதிலுக்குக் கண்டனம் தெரிவித்துள்ள பெற்றோர் கூட்டமைப்பும், அவர் உடனடியாக பதவி விலக வேண்டும் எனத் தெரிவித்துள்ளனர்.
-
22 எம்பிக்கள் உள்ள திமுக ஏன் பாஜகவை நோக்கி போகணும்? டெல்லி லாபிக்கு பிரபலம் கொடுத்த நச்சுப் பதிலடி -
அண்ணாமலைக்கும் - விஜய்க்கும் இடையேதான் போட்டி.. உடைத்து பேசிய அமர் பிரசாத் ரெட்டி! -
ஒரு மணி நேரம் நடந்த மீட்டிங்.. ரஜினிகாந்த் மருமகனுக்கு மிகப்பெரிய பொறுப்பை கொடுக்கும் அண்ணாமலை! -
பாஜகவும் திமுகவும் ஒன்னு.. டெல்லிக்கு அதிர்ச்சி கொடுத்த அமர் பிரசாத் ரெட்டி! அண்ணாமலையுடன் ஐக்கியம் -
திராவிட அரசியலை உடைத்த தவெக.. விஜய் வெற்றியால் டென்ஷனான பாஜக? சாணக்கிய அமித்ஷா அடுத்த பிளான் இதுதானா -
அமைதியோ அமைதி.. பிள்ளையைக் கிள்ளி விட்ட அண்ணாமலை! அரசியல் கட்சி அறிவிப்பு எப்போது? திடீர் ட்விஸ்ட்! -
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
ம.பி.யில் காங்கிரசுக்கு பறிபோன ராஜ்யசபா எம்பி சீட்... திமுக எம்பி வில்சன் கிண்டலாக பதிவு -
பாஜக பல்ஸ் குறையுது.. கமலாலய செங்கல்லை ஒவ்வொன்றாக உருவும் அண்ணாமலை! பாஜக பி-டீமா வி தி லீடர்ஸ்? -
பாஜகவுடன் கைகோர்க்கும் திமுக? காங்கிரஸ் சொன்ன‘குட்பை'யால் ரகசிய பேச்சுவார்த்தை.. பரபரப்பு தகவல் -
அமித்ஷா டெல்லி திரும்பியதுமே மாறிய கணக்கு.. புதுச்சேரி ரங்கசாமிக்கு க்ரீன் சிக்னல்.. யாரந்த 3 பேர் -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு












Click it and Unblock the Notifications