For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கோவாவில் பாலம் உடைந்து விபத்து.. ஒருவர் பலி; 30 பேரை காணவில்லை

கோவாவில் பாலம் இடிந்ததில் 50 பேர் ஆற்றில் மூழ்கி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

By Karthikeyan
Google Oneindia Tamil News

பனாஜி: கோவா மாநிலம் சர்சோரெம் பகுதியில் நடைபாதை ஆற்றுப்பாலம் உடைந்து விபத்துக்குள்ளானது. இதில் 50 பேர் ஆற்றில் மூழ்கி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஒருவர் பலியாகினார். 30க்கும் மேற்பட்டோரை காணவில்லை எனத் தகவல் வெளியாகி உள்ளது.

கோவா மாநிலம் காசோரம் பகுதியில் சான்வோர்டம் என்ற ஆறு ஓடுகிறது. போர்ச்சுகீசிய ஆட்சியின் போது இந்த ஆற்றில் பாலம் கட்டப்பட்டது.

Goa: Around 50 people fall in river after bridge collapse

இந்நிலையில் இன்று மாலை 7 மணி அளவில் இளைஞர் ஒருவர் ஆற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். அவரை காப்பாற்றும் முயற்ச்சியில் ஈடுபட்டபோது 50-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பாலத்தில் கூடியதால் பாலம் உடைந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் நீச்சல் தெரிந்த சிலர் தாங்களாகவே நீந்தி கரை வந்து சேர்ந்து விட்டனர். ஒருவர் பலியானதாகவும் கூறப்படுகிறது.

இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த தீயணைப்பு படையினர் மற்றும் போலீசார் ஆற்றில் விழுந்தவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். கடற்படை வீரர்களும் மீட்பு பணியை மேற்கொண்டு வருகின்றனர்.

English summary
Close to 50 people fell into the river on Thursday after a footbridge collapsed in South Goa's Curchorem town.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X