இப்பவே களை கட்டுதே... ஓட்டு எண்ணுவதற்கு முன்னரே கோவாவில் 'ஆள்பிடி’ கோதாவில் குதித்த பாஜக
பனாஜி: கோவா சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணுவதற்கு முன்னரே தங்கள் கட்சி வேட்பாளர்களுடன் பாஜக தரப்பு பேரம் பேசுவதாக காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
40 தொகுதிகளை கொண்ட கோவா சட்டசபைக்கு கடந்த 14-ந் தேதி தேர்தல் நடைபெற்றது. இத்தேர்தலில் மொத்தம் 79% வாக்குகள் பதிவாகின.

2017 தேர்தல் நிலவரம்
2017-ம் ஆண்டு கோவா சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி 17 இடங்களிலும் பாஜக 13 இடங்களிலும் வென்றது. ஆனால் பாஜக, மாநில கட்சிகள் ஆதரவுடன் ஆட்சி அமைத்தது. அதன்பின்னர் காங்கிரஸ் எம்.எல்.ஏக்களை வளைத்துப் போட்டு ஆட்சியையும் தக்க வைத்துக் கொண்டது. கோவாவில் எஞ்சிய காங்கிரஸ் தலைவர்களும் திரிணாமுல் காங்கிரஸ், பாஜக என கட்சி தாவி உள்ளனர்.

பாஜக ஆட்சியை இழக்குமா?
தற்போதைய கோவா சட்டசபை தேர்தல் தொடர்பான கருத்து கணிப்புகள் மாறுபட்ட வகையில் வெளியாகின. கோவாவில் காங்கிரஸ் அதிக இடங்களைப் பெற்று மீண்டும் ஆட்சி அமைக்கும் என்கின்றனர் சில அரசியல் நோக்கர்கள். ஆனால் கோவாவில் பாஜக ஆட்சியைத் தக்க வைக்கும்; காங்கிரஸுக்கு சிங்கிள் டிஜிட் இடங்களே கிடைக்கும் என்கின்றன சில கருத்து கணிப்புகள். காங்கிரஸ் மேலிடமோ எப்படியும் கோவாவில் மீண்டும் தங்களது கட்சியே ஆட்சி அமைக்கும் என பெரும் நம்பிக்கையில் உள்ளது. அதனால்தான் தேர்தலுக்கு முன்னரே வாக்கு எண்ணிக்கை முடிந்த பின்னர் கட்சி தாவமாட்டோம் என்கிற உறுதிமொழியை வாங்கியது காங்கிரஸ்.

பாஜக குதிரை பேரம்
கோவா சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் மார்ச் 10-ந் தேதி எண்ணப்படுகின்றன. வாக்குகள் எண்ணுவதற்கு முன்னரே குதிரை பேரம் எனப்படுகின்றன ஆள்பிடி வேலையை பாஜக தொடங்கிவிட்டதாக காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியுள்ளது. தங்களது கட்சி வேட்பாளர்களை இழுக்க பாஜக பேரம் பேசி வருகிறது என்கிறது காங்கிரஸ். அக்கட்சியின் இந்த குற்றச்சாட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாஜகவுக்கு வார்னிங்
கோவா மாநில காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கிரிஷ் சோதன்கர் கூறுகையில், பாஜக அமைச்சர்கள் எங்கள் கட்சி வேட்பாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. வெற்றி பெறக் கூடிய வாய்ப்புள்ள வேட்பாளர்களிடம் பாஜக பேரம் பேசி வருகிறது. பாஜக ஆட்சியை தக்க வைக்க முடியாது என்பதால் தங்களது பழைய பார்முலாவை கையில் எடுத்திருக்கிறது. பாஜகவை பொதுவெளியில் பகிரங்கமாக நாங்கள் எச்சரிக்கிறோம். இப்போதிருப்பது புதிய காங்கிரஸ். எங்களில் ஒருவர் பாஜக பக்கம் தாவப் போவது இல்லை என்பதை அக்கட்சி புரிந்து கொள்ள வேண்டும். வாக்கு எண்ணிக்கைக்கு முன்னரே இத்தகைய குதிரை பேர அரசியலைத் தொடங்கினால் அதற்கு பாஜக சரியான விலைகொடுக்க நேரிடும். கோவா மக்கள் இதை எல்லாம் சகித்து கொண்டிருக்கமாட்டார்கள் என்றார்.
-
வரிசையாக காலை வாரும் தலைவர்கள்.. காங்கிரஸுக்கு விழுந்த மரண அடி.. இப்படியே போன தோல்வி உறுதி! -
கன்னியாகுமரியில் 6 தொகுதிகள் நிலவரம் என்ன? 5ல் முந்தும் திமுக கூட்டணி.. விஜய்யால் பாஜகவுக்கு சேதாரம் -
நாளை டெல்லிக்கு பறக்கும் தினகரன், அன்புமணி? அமித் ஷா முன்னிலையில் NDA கூட்டணி தொகுதிப் பங்கீடு டீல்? -
தொகுதிப் பங்கீடு என்னாச்சு? டெல்லிக்கு பறந்த எடப்பாடி பழனிசாமி.. நயினார் சொன்ன மேட்டர்! -
சிறிய கட்சிகளுக்கு தாமரை சின்னம்.. வாக்கு வங்கியை காக்க பாஜக ஐடியா.. எடப்பாடி காதுக்கு போன மெசேஜ்! -
புதுச்சேரியில் மார்ட்டின் மகனால் தெறித்து ஓடும் பாஜக? ரங்கசாமி போட்ட சைலண்ட் ஸ்கெட்ச்.. அப்போ விஜய் -
30 தொகுதிகளின் பட்டியல்.. அதிமுக கோட்டையை கேட்கும் பாஜக.. எடப்பாடி பழனிசாமி டெல்லி செல்வதன் பின்னணி! -
காங்கிரசுக்கு ஒதுக்க சொல்வதா? அண்ணா அறிவாலயத்தில் அடித்துக்கொண்ட கிள்ளியூர் தொகுதி திமுக நிர்வாகிகள் -
திமுகவை காலி செய்ய விஜய் போதும்! எடப்பாடியிடம் சொன்ன பியூஷ் கோயல்! கான்ஃபரன்ஸ் காலில் 3வது நபர் யார் -
சட்டம் அதன் கடமையை செய்யும்.. விஜய் பிஜேபி கூட போகவே மாட்டாரு.. ஏனென்றால்? விடாமல் அடிக்கும் ஜூலி -
மம்தாவை சுத்துபோடும் பாஜக.. பதிலுக்கு சக்கர வியூகம் போட்டு தூக்கும் திரிணாமுல்! யாரும் எதிர்பார்க்கல -
இருந்தாலும் அவருக்கு இவ்வளவு ஆகாது! கூட்டணிக்கு வருமா? வராதா? பாஜகவுக்கு பிரஷர் ஏற்றும் புதியதமிழகம்











Click it and Unblock the Notifications