For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பல்லாயிரம் அடி உயரம்.. வானத்தில் பறக்கும் போதே நின்ற விமான என்ஜின்.. பெங்களூர் அருகே பரபரப்பு!

பெங்களூரில் இருந்து புனே சென்ற விமானம் ஒன்று கோளாறு காரணமாக மீண்டும் பெங்களூரில் தரையிறக்கப்பட்டது.

By Shyamsundar
Google Oneindia Tamil News

பெங்களூர்: பெங்களூரில் இருந்து புனே சென்ற விமானம் ஒன்று கோளாறு காரணமாக மீண்டும் பெங்களூரில் தரையிறக்கப்பட்டது.

இந்த விமானத்தில் 150க்கும் அதிகமான பயணிகள் சென்று இருக்கிறார்கள். கோளாறு ஏற்பட்ட விமானம் கோ-ஏர் நிறுவனத்தை சேர்ந்த ஜி8-283 விமானம் என்று கூறப்பட்டுள்ளது.

இதுகுறித்து தற்போது விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த விபத்து எப்படி நடந்தது என்று விசாரிக்கப்படுகிறது.

பாதியில் நின்றது

பாதியில் நின்றது

கோ-ஏர் நிறுவனத்தை சேர்ந்த ஜி8-283 விமானம் பெங்களூரில் இருந்து புனே புறப்பட்டு அரை மணி நேரத்தில் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதனால், விமானத்தின் ஒரு என்ஜின் அப்படியே நின்று போய் இருகிறது. இதனால் சில நிமிடம் விமான வானத்தில் நிலைகுலைந்து போய் உள்ளது.

 காரணம் என்ன

காரணம் என்ன

ஆனால் மீதம் உள்ள என்ஜின்கள் கட்டுப்பாட்டில் இருந்துள்ளது. என்ஜின் செயலிழக்க காரணம், அதில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு என்று கூறப்படுகிறது. இதனால் அழுத்த மாறுபாடு ஏற்பட்டு என்ஜின் வைப்ரேஷன் அதிகம் ஆகியுள்ளது. இதனால் உள்ளே எரிபொருள் செல்வதில் பிரச்சனை ஏற்பட்டு என்ஜின் செயலிழந்துள்ளது.

 பாதுகாப்பாக இறங்கியது

பாதுகாப்பாக இறங்கியது

இதனால் விமானிகள் அவசர கால நடவடிக்கையாக விமானத்தை தரையிறக்க முடிவு செய்துள்ளனர். விமானதுறை விதிப்படி அருகில் உள்ள விமான நிலையத்தில் விமானத்தை தரையிறக்க வேண்டும் என்பதால், மீண்டும் விமானம் பெங்களூருக்கு திருப்பட்டது. அதன்பின் விமானம் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டது.

 எந்த பாதிப்பும் இல்லை

எந்த பாதிப்பும் இல்லை

இதனால் எந்த விதமான பாதிப்பும் ஏற்படவில்லை. பயணிகள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. அதேபோல் பயணிகளுக்கு சில மணி நேரத்தில் வேறு விமானம் ஏற்பாடு செய்யப்பட்டது. இதுகுறித்து முறையாக விசாரிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

English summary
GoAir flight G8-283 from Bengaluru to Pune made an emergency landing at Bengaluru airport due to a major snag in engine mid-air, yesterday.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X