ரூபாய் நோட்டுக்களுக்கு மட்டும்தான் சர்ஜிக்கல் ஸ்டிரைக்கா? குழந்தைகளையும் பாருங்க! இப்படியும் ஒரு மனு
வருகிற 20 -ம் தேதி உலக குழந்தைகள் தினம் கொண்டாடப்படுவதைத் தொடர்ந்து குழந்தை திருமணங்களை தடுக்க சர்ஜிகல் ஸ்டிரைக் நடத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
கொல்கத்தா: கருப்பு பணத்தை ஒழிக்க 500, 1000 ரூபாய் நோட்டுக்களுக்கு அதிரடியாக தடை விதித்தது போன்று குழந்தை திருமணக் கொடுமைகளை தடுக்கவும் அதிரடி நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
வருகிற 20 ஆம் தேதி உலக குழந்தைகள் தினம் கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி குழந்தை திருமணத்தை தடுக்க சர்ஜிகல் ஸ்டிரைக் நடத்த வேண்டும் என்று கொல்கத்தா மாநில அதிகாரிகளிடம் அங்குள்ள குழந்தைகள் அமைப்பினர் மனு அளித்துள்ளனர்.

அந்த மனுவில் அவர்கள் மேலும் கூறியிருப்பதாவது:
கருப்பு பணத்தை ஒழிக்கும் அதிரடி நடவடிக்கையாக 500,1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோன்று குழந்தை திருமண கொடுமைகளை தடுக்க மாநில அரசு சர்ஜிகல் ஸ்டிரைக் நடத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
இதுகுறித்து, சர்வதேச தொண்டு நிவுனத்தில் அங்கம் வகிக்கும் சைல்டு சேம்பியன் அமைப்பின் நூற்றுக்கணக்கான உறுப்பினர்களில் ஒருவரான பைசகி பிஸ்வாஸ் கூறியதாவது:
எந்தக் குழந்தைக்கும் குறைந்த வயதில் திருமணம் நடக்கக்கூடாது என்பதை உறுதி செய்ய வேண்டும். கருப்புப் பணத்தை ஒழிக்க அரசு நடவடிக்கை எடுத்தது போன்று குழந்தை திருமணங்களை தடுக்கவும் சர்ஜிகல் ஸ்டிரைக் நடத்த வேண்டும்.
எனக்கு 14 வயதில் திருமணம் செய்து வைக்கப்பட்டதால் இரண்டு வருடங்களில் தாயாக ஆனேன். முன்கூட்டியே திருமணம் செய்ததால் பள்ளிப் படிப்பை 9-ஆம் வகுப்பிற்கு பின்னர் விட வேண்டிய கட்டாயம் எழுந்தது.
எனவே, பிற குழந்தைகளுடன் சேர்ந்து குழந்தை திருமணத்தை தடுக்க வலியுறுத்தி கோரிக்கை வைத்துள்ளேன் என்றார் அவர். சமூகத்தில் பின்தங்கிய மக்கள் இன்னும் குழந்தை திருமணத்தை நடத்தி வரும் அவலம் நீட்டித்து வருகிறது. எனவே, குழந்தை திருமண கொடுமையை தடுக்கும் பொறுப்பு சமூகத்திற்கு உள்ளது.
ஆண்டு தோறும் குழந்தை உரிமை மாநாடு வாரம் நவம்பர் 14-முதல் 20 ஆம் தேதி வரை கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், கொல்கத்தாவில் குழந்தை நல அமைப்பினர் குழந்தை திருமணத்தை தடுக்க அதிரடி நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளனர்.
உலகம் முழுவதும் உள்ள குழந்தைகளுக்கு சிறந்த இடத்தை உருவாக்கித் தர உறுதி எடுக்கும் விதமாக குழந்தை உரிமை வாரம் பின்பற்றப்படுகிறது. ஐ.நா.குழந்தை உரிமை பாதுகாப்பு அமைப்பினர் குழந்தைகளை பாதுகாப்பதற்கான தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.
உலக குழந்தைகள் தினம் வரும் 20 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்தியாவில் உள்ள அனைத்து குழந்தைகளுக்கும் தகுந்த பாதுகாப்பு வழங்க சமூகம் தங்களது பெரும் பங்களிப்பினை அளித்து அவர்களுக்கான பாதுகாப்பு வலையத்தை வலுப்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
குழந்தை பாதுகாப்புக்காக கடந்த 24 ஆண்டுகளுக்கும் மேலாக பல்வேறு அமைப்புகள் இந்தியாவில் போராடி வருகின்றன.
இந்நிலையிலும் 10 லட்சத்து 2 ஆயிரம் குழந்தைகள் 5 வயது வரை வாழ்வாதாரத்துக்காக போராடி வருவதாகவும், 8 கோடியே 40 லட்சம் குழந்தைகள் பள்ளிக்கு செல்லாமல் இருந்து வருவதாகவும், 70 லட்சத்து 8 ஆயிரம் குழந்தைகள் குழந்தைத் தொழிலாளர்களாக பல்வேறு கொடுமைகளை அனுபவித்து வருவதாகவும் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
கொல்கத்தா நேரு அருங்காட்சியகத்தில் குழந்தைகள் பாதுகாப்பு குறித்த புகைப்படக் கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது. அதில் குழந்தைகள் அன்றாடம் எதிர் கொண்டு வரும் பிரச்னைகள், பல பெண் குழந்தைகளுக்கு ஏற்பட்ட கொடூரங்கள் குறித்த ஆவணப்படங்களும் இடம் பெற்றுள்ளன.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications