For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மகாத்மா காந்தியின் பேரன் கனுபாய் காந்தி காலமானார்

உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த மகாத்மா காந்தியின் பேரன் கனு காந்தி(87) உடல்நலக் குறைவால் இன்று காலமானார்.

By Karthikeyan
Google Oneindia Tamil News

சூரத்: மகாத்மா காந்தியின் பேரன் கனுபாய் காந்தி(87) உடல்நலக் குறைவால் இன்று காலமானார். மறைந்த கனுபாய் காந்திக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

மகாத்மா காந்தியின் பேரன் கனுபாய் காந்தி. இவர்தான் உப்பு சத்தியாகிரகத்தின்போது காந்தியின் தடியை பிடித்துக்கொண்டு முன்னால் சென்ற சிறுவன். இது வரலாற்றில் பதிவான புகைப்படங்களில் இடம்பெற்றுள்ளது. பின்னர் அமெரிக்கா சென்று படித்தார். அங்கேயே அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசாவில் விஞ்ஞானியாக பணியாற்றினார். ஓய்வுக பெற்றதற்கு பின்னர் தன்னுடைய மனைவி சிவலட்சுமியுடன் கடந்த 2014ம் ஆண்டு இந்தியா திரும்பினார்.

grandson Kanu Gandhi passes away

இங்கு வந்த பின்னர் இருவரும் ஒரு ஆசிரமத்தில் சேர்ந்தனர். இந்த நிலையில் உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்த கனுபாய் காந்தி குஜராத்தில் உள்ள சூரத்தில் சிவ ஜோதி டிரஸ்ட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இதயக்கோளாறு, பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டிருந்த அவர், திங்கள்கிழமை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

மோடி இரங்கல்:

மறைந்த காந்தியின் பேரன் கனு காந்திக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவரது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளாதவது: கனு காந்தியின் மறைவு வேதனை அளிப்பதாகவும், பல்வேறு தருணங்களில் கலந்துரையாடியதை நினைவு கூர்ந்துள்ளார்.

English summary
Mahatma Gandhi's grandson Kanu Gandhi passes away in Surat after prolonged illness.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X