For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

போலீஸ் வாகனத்தை கடத்தி காக்கி உடையில் பெண்ணை தூக்கிச்சென்ற கும்பல்.. மபியில் கொடூரம்!

மத்திய பிரதேசத்தில் போலீஸ் என்று கூறி பெண் ஒருவர் கடத்தப்பட்டு இருக்கிறார்.

By Shyamsundar
Google Oneindia Tamil News

Recommended Video

    போலீஸ் வாகனத்தில் பெண்ணை கடத்தி சென்ற கும்பல்

    போபால்: மத்திய பிரதேசத்தில் சமீப காலமாக நிறைய குற்றச்சம்பவங்கள் நடந்து வருகிறது. கடத்தல், கொலை என நாளுக்கு நாள் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது.

    அந்த வகையில் தற்போது சினிமா காட்சிகளை மிஞ்சும் சம்பவம் ஒன்று அங்கு நடந்து இருக்கிறது. போலீஸ் உடையில் வந்த நான்கு பேர் அந்த பகுதியை சேர்ந்த பெண் ஒருவரை கடத்தி இருக்கிறார்கள்.

    அவர்கள் போலீஸ் வாகனத்தை கடத்திய சம்பவம் மிகவும் அதிர்ச்சி அளிக்க கூடிய வகையில் இருக்கிறது.

    போலீஸ்

    போலீஸ்

    போபாலில் இருக்கும் தேசிய நெடுஞ்சாலையில் இந்த சம்பவம் நடந்துள்ளது. அங்கு போலீஸ் ரோந்து செல்லும் இடத்தில் சாலையில் அடிப்பட்டு ஒருவர் படுத்துக் கிடந்துள்ளார். போலீஸ் அவரை சென்று தூக்கிய போது, அந்த நபர் துப்பாக்கியை காட்டி மிரட்டி இருக்கிறார். பின் அந்த நபர் போலீஸ் உடையை வாங்கிக் கொண்டு, வாகனத்தை தூக்கிக் கொண்டு நண்பர்களுடன் பறந்து இருக்கிறது.

    விசாரணை செய்ய அழைப்பு

    விசாரணை செய்ய அழைப்பு

    போலீஸ் காரில் அங்கிருந்து 'பார்முகா' என்ற கிராமத்திற்கு சென்று இருக்கிறார்கள். அங்கு ராஜ் குமார் பட்டேல் என்பவர் வீட்டிற்கு சென்றுள்ளனர். அங்கு இருந்த ராஜ் குமார், அவர் தம்பி, அவரின் மகள் மூன்று பேரையும் விசாரணை என்று கூறி அழைத்து சென்றுள்ளனர்.

    மிரட்டல்

    மிரட்டல்

    போகும் வழியில் துப்பாக்கி வைத்து மிரட்டி இருக்கின்றனர். அதன்பின் துப்பாக்கி முனையில் ராஜ்குமாரையும் அவர் தம்பியையும் கீழே இறங்கிவிட்டுள்ளனர். அவர்களை விட்டுவிட்டு அந்த பெண்ணை மட்டும் தூக்கி சென்றுள்ளனர்.

    புதிய வாகனம்

    புதிய வாகனம்

    அவர்கள் கடைசியாக வேறு ஒரு வாகனம் மாறிய தகவல் மட்டும் போலீசுக்கு கிடைத்து இருக்கிறது. அவர்கள் யார், எங்கே இருக்கிறார்கள் என எந்த தகவலும் இதுவரை போலீசுக்கு கிடைக்கவில்லை. இந்த விஷயத்தில் என்ன நடவடிக்கை எடுப்பது என்று தெரியாமல் போலீஸ் திணறி வருகிறது.

    English summary
    Group of men kidnap a woman in police getup in Madhya Pradesh. They took the police dress and police vehicle by showing gun to 100 dial police vehicle.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X