For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

குஜராத் காங்கிரஸ் கட்சி, விரைவில் பாஜகவில் இணையும்.. டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்!

Google Oneindia Tamil News

காந்தி நகர்: வரும் சட்டமன்றத் தேர்தலோடு குஜராத் காங்கிரஸ் கட்சி, பாஜகவுடன் இணைந்துவிடும் என்று டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் விமர்சித்துள்ளார்.

குஜராத் மாநிலத்தில் இந்த ஆண்டு இறுதியில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக ஆளும் பாஜக மற்றும் எதிர்க்கட்சியான காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தீவிரமாக பணியாற்றி வருகின்றன. இந்த நிலையில் டெல்லி, ஆம் ஆத்மி ஆகிய மாநிலங்களில் ஆட்சியில் உள்ள ஆம் ஆத்மி கட்சியும் குஜராத் மாநில தேர்தலில் போட்டியிட்டு ஆட்சியமைக்க பணியாற்றி வருகிறது.

அமெரிக்காவில் மீண்டும் துப்பாக்கிச்சூடு.. 4 பேர் பலி.. தாக்குதல் நடத்திய நபரை தேடும் போலீஸ்!அமெரிக்காவில் மீண்டும் துப்பாக்கிச்சூடு.. 4 பேர் பலி.. தாக்குதல் நடத்திய நபரை தேடும் போலீஸ்!

 அரவிந்த் கெஜ்ரிவால்

அரவிந்த் கெஜ்ரிவால்

அதற்கான பணிகளை தொடங்கியுள்ள டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், பாஜக மற்றும் காங்கிரஸ் ஆகிய கட்சிகளை கடுமையாக சாடி வருகிறார். இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்து அரவிந்த் கெஜ்ரிவால் கூறுகையில், குஜராத்தில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சிக்கு வந்தால் வேலை இல்லாமல் தவிக்கும் இளைஞர்கள் அனைவருக்கும் வேலை வழங்கப்படும்.

 வேலைவாய்ப்பு

வேலைவாய்ப்பு

டெல்லியில் சில ஆண்டுகளில் 12 லட்சம் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை வழங்கியுள்ளோம். இதுபோன்று குஜராத் இளைஞர்களுக்கும் வேலை வழங்குவோம். அது நடக்கும் வரை, வேலையில்லாத இளைஞர்களுக்கு மாதம் ரூ. 3,000 ஊக்கத்தொகை வழங்கப்படும். 27 ஆண்டுகளாக குஜராத்தில் பாஜக ஆட்சியில் உள்ளது. ஆனால் ஊழல் செய்வது மட்டுமே பாஜகவின் செயல்பாடாக உள்ளது.

கள்ளச்சாராயம்

கள்ளச்சாராயம்

அதுமட்டுமல்லாமல் குஜராத் மாநிலத்தில் உள்ள ஒவ்வொரு மாவட்டம், ஒவ்வொரு கிராமத்திலும் கள்ளச்சாராயம் விற்பனை செய்யப்படுகிறது. இதனை விற்பனை செய்பவர்கள் கோடீஸ்வர்ரகளாக இருக்கிறார்கள். மக்கள் மீண்டும் பாஜகவுக்கு வாக்களித்தால், அடுத்த தலைமுறையினரும் கள்ளச்சாராயத்திற்கு அடிமையாவார்கள்.

காங்கிரஸ்

காங்கிரஸ்

வரும் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு ஒரு வாக்கு கூட கிடைக்கக் கூடாது. ஏற்கனவே காங்கிரஸ் கட்சியில் இருந்து பாஜகவுக்கு பலரும் செல்கின்றனர். தேர்தல் முடிவுகளுக்கு பின், காங்கிரஸ் கட்சியினர் மொத்தமாக பாஜகவுக்கு சென்றுவிடுவர். இந்த தேர்தலில், குஜராத் காங்கிரஸ், குஜராத் பாஜகவுடன் இணையப் போகிறது. குஜராத்தில் ஆம் ஆத்மி-யின் செல்வாக்கு அதிகரித்து வருகிறது. எங்களின் முதல் வாக்குறுதி மின்சாரம் வழங்குவது. இங்கு அதிக மின்சார கட்டணத்தால், மக்கள் துயரத்தில் இருக்கின்றனர்.

இங்கும் இலவசக் கல்வி, சுகாதாரம், மின்சாரம் வழங்கலாமா என்று மக்களிடம் கேட்டேன். 99 சதவிகிதம் மக்கள், இலவச கல்வி வேண்டும் என்று கூறி இருக்கின்றனர் என்று தெரிவித்தார்.

English summary
Delhi chief Minister Arvind Kejriwal said Congress has lost its relevance and there was no point voting for that party as its leaders end up joining the ruling BJP.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X