குஜராத்தில் மீண்டும் மலரும் தாமரை! அடிவாங்கும் காங்கிரஸ்.. “ஷாக்” தரும் ஆம் ஆத்மி - கருத்துக்கணிப்பு
காந்திநகர்: நடைபெற உள்ள குஜராத் மாநில சட்டசபைத் தேர்தலில் பாஜகவுக்கே மக்கள் ஆதரவு அதிகம் இருப்பதாக சி.எஸ்.டி.எஸ் மற்றும் லோக்நிதி இணைந்து நடத்திய கருத்துக்கணிப்பில் தெரியவந்து இருக்கிறது.
பாஜகவின் கோட்டையாக கருதப்படும் குஜராத் மாநிலத்தில் வரும் டிசம்பர் 1 ஆம் தேதி மற்றும் 5 ஆம் தேதி 2 கட்டங்களாக குஜராத் மாநில சட்டசபைத் தேர்தல் வாக்குப்பதிவ நடைபெற உள்ளது.
டிசம்பர் 8 ஆம் தேதி வாக்குகள் எண்ணப்படும் என்று இந்திய தலைமை தேர்தல் ஆணையம் நேற்று அறிவித்து இருக்கிறது. இந்த தேர்தலில் பாஜக, காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சிகளிடையே கடும் போட்டி நிலவுகிறது.

கருத்துக்கணிப்பு
இந்த நிலையில் குஜராத் தேர்தல் நிலவரம் தொடர்பாக லோக்நிதி மற்றும் சி.எஸ்.டி.எஸ். நிறுவனங்கள் இணைந்து கருத்துக்கணிப்புகளை நடத்தின. குஜராத்தில் கடந்த 2017 ஆம் ஆண்டு பாஜக பெற்ற 49.1 சதவீத வாக்குகளைவிட இம்முறை 2.1 சதவீத வாக்குகள் குறைந்து 47 சதவீத வாக்குகளை பெறும் என்று கூறப்படுகிறது.

காங்கிரஸுக்கு அடி
கடந்த 2017 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் 41.4 சதவீத வாக்குகளை பெற்ற காங்கிரஸ் கட்சியின் வாக்குவங்கி இம்முறை பெருமளவில் சரிந்து 21 சதவீத வாக்குகளை பெறும் என்றும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. இதன் மூலம் காங்கிரஸ் கட்சி கடந்த தேர்தலை ஒப்பிடுகையில் 20.4 சதவீத ஆதரவை இழக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

ஆம் ஆத்மி
புதிதாக இம்முறை தேர்தலில் களம் காணும் ஆம் ஆத்மி கட்சி 22 சதவீத ஆதரவை பெற்று 2 வது இடத்தை பிடிக்கும் என்று அதில் குறிப்பிடப்பட்டு உள்ளது. இதன் மூலம் ஆம் ஆத்மியின் வருகை பாஜகவை விட காங்கிரஸ் கட்சிக்கே பலத்த அடியை கொடுத்திருப்பது தெரிகிறது.

கிராமம் நகரம்
குஜராத்தின் கிராம பகுதிகளில் பாஜகவுக்கு வலுவான ஆதரவு உள்ளது. நகர பகுதிகளில் காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சிகளுக்கு அதிக ஆதரவு காணப்படுகிறது. இளைஞர்கள் பலரின் ஆதரவு ஆம் ஆத்மி கட்சிக்கு இருப்பதாகவும், முதியோர்களின் ஆதரவு பாஜகவுக்கு அதிகம் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

ஏழை நடுத்தர மக்கள்
ஏழை மற்றும் நடுத்தர வாக்காளர்களை எடுத்துக் கொண்டால் 4 பேரில் ஒருவரின் ஆதரவு ஆம் ஆத்மி கட்சிக்கும், 4 ல் ஒருவரது ஆதரவு காங்கிரஸ் கட்சிக்கு உள்ளது கருத்துக்கணிப்பு முடிவில் தெரிகிறது. குஜராத் மாநிலத்தில் பட்டிதார் சமுதாயத்தை சேர்ந்தவர்களே அதிகளவில் வசித்து வருகின்றனர்.

பட்டிதார் சமூகம்
இந்த சமுதாயத்தை சேர்ந்தவர்கள் கடந்த முறை காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக இருந்ததால் அக்கட்சி கடும் நெருக்கடியை கொடுத்தது. ஆனால், இம்முறை பட்டிதார் சமுதாயத்தில் சில பிரிவினர் பாஜகவுக்கு ஆதரவாக இருக்கின்றனர். இதர பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்தவர்கள் மற்றும் பழங்குடி மக்களின் ஆதரவும் பாஜகவுக்கே இருக்கிறது.

தலித், இஸ்லாமியர்
தலித்துகள் மற்றும் இஸ்லாமியர்களின் ஆதரவு இன்னும் காங்கிரஸ் கட்சிக்கே அதிகம் உள்ளது. 50 சதவீத இஸ்லாமியர்களின் ஆதரவு காங்கிரஸ் கட்சிக்கே குஜராத்தில் உள்ளது. 10 இஸ்லாமியர்களின் 3 பேரின் ஆதரவு ஆம் ஆத்மி கட்சிக்கு சென்றுள்ளது. அதேபோல் இஸ்லாமியர்களில் 10 ல் ஒருவரின் ஆதரவு பாஜகவுக்கு உள்ளதாக கருத்துக்கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications