முஸ்லிம்களுக்கு 150 நாடுகள்... இந்துக்களுக்கு இந்தியா மட்டுமே.. குஜராத் முதல்வர் விஜய் ரூபானி
அகமதாபாத்: முஸ்லிம்கள் குடியேறுவதற்கு 150 நாடுகள் இருக்கின்றன.. ஆனால் இந்துக்கள் குடியேறுவதற்கு இந்தியா என்ற ஒரே ஒரு நாடுதான் இருக்கிறது என்று குஜராத் முதல்வர் விஜய் ரூபானி பேசியிருப்பது சர்ச்சையாகி உள்ளது.
குஜராத் மாநிலம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு ஆதரவு தெரிவித்து நேற்று பேரணிகள் நடைபெற்றன. ஆர்.எஸ்.எஸ். சார்பு அமைப்பான நக்ரிக் சமிதி எனப்படும் குடிமக்கள் கமிட்டி சார்பாக இந்த பேரணி நடைபெற்றது.
சபர்மதி ஆசிரமம் அருகே நடைபெற்ற நிகழ்ச்சியில் குஜராத் முதல்வர் விஜய் ரூபானி பேசியதாவது:
பாகிஸ்தானில் வாழும் சீக்கியர்களுக்கும் இந்துக்களுக்கும் இந்திய குடியுரிமை வழங்க வேண்டும் என்று காந்தியடிகள் விரும்பினார். காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் அப்போதைய பிரதமர் மன்மோகன்சிங்கும் இதனை வலியுறுத்தினார். ஆனால் குடியுரிமை சட்ட விவகாரத்தில் மகாத்மா காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் ஆகியோரது விருப்பங்களுக்கு காங்கிரஸ் கட்சி மதிப்பளிக்கவில்லை.

குறைந்த இந்துக்கள் விழுக்காடு
1947-ல் நாடு பிரிவினையின் போது பாகிஸ்தானில் 22% இந்துக்கள் இருந்தனர். தற்போது பலாத்காரங்கள், சித்ரவதைகள், ஒடுக்குமுறைகளால் பாகிஸ்தானில் வாழும் இந்துக்கள் எண்ணிக்கை 3% ஆக குறைந்துள்ளது.

காங்கிரஸ் எதிர்ப்பு
இதனால்தான் இந்தியாவுக்கே திரும்புவதற்கு இந்துக்கள் விரும்புகின்றனர். ஒடுக்கப்பட்ட இந்துக்களுக்கு காங்கிரஸ் என்ன செய்ய விரும்பியதோ அதைத்தான் மத்திய அரசு செய்து கொண்டிருக்கிறது. ஆனால் இப்போது காங்கிரஸ் கட்சி இதனை எதிர்க்கிறது.

வங்கதேச இந்துக்கள்
வங்கதேசத்தில் இந்துக்களின் எண்ணிக்கை 2% ஆக குறைந்துள்ளது. ஆப்கானிஸ்தானில் 2 லட்சம் இந்துக்களும் சீக்கியர்களும் வசித்தனர். ஆனால் தற்போது அவர்களது எண்ணிக்கை வெறும் 500 ஆக குறைந்துள்ளது.

இந்துக்களுக்கு ஒரே நாடு
முஸ்லிம்கள் 150 நாடுகளுக்கு சென்று குடியேற முடியும். ஆனால் இந்துக்களுக்கு இந்தியா என்ற ஒரே ஒரு நாடுதான் உள்ளது. அதனால் அவர்கள் இந்தியாவுக்கு திரும்புவதில் என்ன பிரச்சனை?

தலித் தலைவர்கள்
குஜராத்தில் பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளில் இருந்து வந்த 10,000 அகதிகள் வசிக்கின்றனர். கட்ச் பிராந்தியத்தில் தலித்துகளாக அவர்கள் இருக்கின்றனர். ஆனால் தலித் தலைவர்களோ, அவர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்குவதை எதிர்க்கின்றனர்.

இந்திய குடியுரிமை
இந்து அகதிகளுக்கு இந்திய குடியுரிமை வழங்கி; என்.ஆர்.சி. மூலம் சட்டவிரோத குடியேறிகள் வெளியேற்றப்பட்டால் ஆட்சி அதிகாரத்தை பறிகொடுத்துவிடுவோம் என அச்சப்படுகிற கட்சிகள்தான் குடியுரிமை சட்ட திருத்தத்தை எதிர்க்கின்றன. ஒடுக்குமுறைக்குள்ளாகி தஞ்சம் அடைந்த அகதிகளுக்கு குஜராத் மாநிலத்தில் இந்திய குடியுரிமை வழங்கும் பணி தொடங்கிவிட்டது.
இவ்வாறு விஜய் ரூபானி பேசினார்.
-
Thaai Kizhavi OTT: ஓடிடியில் வெளியாகும் தாய் கிழவி.. எப்போது, எதில் பர்க்கலாம்? வெளியான தகவல் -
அரபு நாடுகளில் இந்தியர்களின் 12, 000 கோடி முதலீடு காலி.. 800 நிறுவனங்கள் எதிர்காலம் கேள்விக்குறி! -
கோவை தெற்கில் களமிறங்கும் மகேந்திரன்.. ஆதரவாக இருக்கும் செந்தில் பாலாஜி.. கணக்கு போடும் ஸ்டாலின்! -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
திருப்பரங்குன்றம் வழக்கு.. நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் உத்தரவுக்கு இரு நீதிபதிகள் அமர்வு இடைக்கால தடை -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
காட்டி கொடுக்கும் ரஷ்யா.. அமெரிக்க படைகள் தலைக்கு மேல் சுற்றும் கத்தி.. பெரிய சிக்கலில் டிரம்ப்? -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
ஆதவை கண்டித்த ரஜினிகாந்த்..பாஜக சரத்குமாரை எப்போது கண்டிப்பிங்க.. வீடியோவால் சூப்பர் ஸ்டாரை சீண்டும் தவெக -
முதல் விக்கெட்? திமுக கூட்டணிக்கு ‘குட்பை' சொல்லும் வேல்முருகன்.. அதிருப்திக்கு என்ன காரணம்? பின்னணி இதுதான்












Click it and Unblock the Notifications