மூட் மாறிய டிரம்ப்.. இஸ்ரேல்-லெபனான் இடையே போர் நிறுத்தம்! சட்டென சொல்லிட்டாரே!
வாஷிங்டன்: இஸ்ரேலுக்கும் லெபனானுக்கும் இடையே விரைவில் 10 நாட்கள் போர் நிறுத்தம் அமல்படுத்தப்படும் என அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். ஈரான் உடனான பெரிய மோதலை முடிவுக்குக் கொண்டுவரும் ஒரு முக்கியமான நகர்வாக இது பார்க்கப்படுகிறது.
டிரம்ப், இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு மற்றும் லெபனான் அதிபர் ஆவுன் ஆகியோருடன் தொலைபேசியில் பேசினார். இந்த வாரம் தொடக்கத்தில் போர் நிறுத்தம் தொடர்பாக ராஜதந்திர பேச்சுவார்த்தை மேற்கொள்ளப்பட்டிருந்தது. அதன் தொடர்ச்சியாகவே போர் நிறுத்தம் தொடர்பான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தனது எக்ஸ் தளத்தில் டிரம்ப் வெளியிட்ட பதிவில், "இந்த இரு தலைவர்களும், தங்கள் நாடுகளுக்கு இடையில் அமைதியை ஏற்படுத்துவதற்காக, 10 நாள் போர் நிறுத்தத்தை முறைப்படி தொடங்க ஒப்புதல் அளித்துள்ளனர்" என்று குறிப்பிட்டுள்ளார். இந்த போர் நிறுத்தம் வாஷிங்டன் நேரப்படி மாலை 5 மணிக்கு (ஆஸ்திரேலியாவின் கிழக்குப் பகுதி நேரப்படி காலை 7 மணி) தொடங்கும்.
பயங்கரவாத அமைப்பாகக் கருதப்படும் ஈரான் ஆதரவு ஹிஸ்புல்லா அமைப்பின் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. பிப்ரவரி 28 அன்று தொடங்கிய போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்காக, அமெரிக்கா, ஈரான், இஸ்ரேல் ஆகிய நாடுகளுக்கு இடையே ஏப்ரல் 7ஆம் தேதி முதல் ஒரு போர் நிறுத்தம் அமல்படுத்தப்பட்டது. ஆனால், அதில் லெபனான் சேர்க்கப்படவில்லை.
லெபனான் மீது இஸ்ரேல் நடத்தும் தாக்குதல்களுக்கும் போர் நிறுத்தம் வேண்டும் என்று ஈரான் வலியுறுத்தி வந்தது. இருப்பினும், இந்தக் கோரிக்கையை அமெரிக்காவும், இஸ்ரேலும் பொருட்படுத்தாமல் இருந்தன.
இந்த போர் நிறுத்தம் குறித்து நெதன்யாகு இதுவரை எந்தக் கருத்தையும் தெரிவிக்கவில்லை. ஆனால், கடந்த 24 மணி நேரத்திற்குள், இஸ்ரேலியப் படைகள் ஹிஸ்புல்லா இலக்குகளைத் தாக்கி வருவதாகவும், தெற்கே உள்ள பின்ட் ஜ்பெய்ல் நகரை கைப்பற்ற இருப்பதாகவும் அவர் கூறியிருந்தார். மேலும், தங்கள் நாட்டின் பாதுகாப்பு மண்டலத்தைப் தொடர்ந்து பலப்படுத்த பாதுகாப்புப் படைகளுக்கு அவர் உத்தரவிட்டார்.
ஈரானுடனான பேச்சுவார்த்தைகள் குறித்து அமெரிக்க நண்பர்கள் தொடர்ந்து தெரிவித்து வருவதாக நெதன்யாகு கூறினார். "எங்களின் இலக்குகள் ஒரே மாதிரியானவை. சண்டை மீண்டும் தொடங்குவதற்கான வாய்ப்புகள் இருப்பதால், எந்தச் சூழ்நிலையையும் எதிர்கொள்ளவும் நாங்கள் தயாராக இருக்கிறோம்" என்றும் அவர் கூறியிருந்தார்.
-
யுரேனியத்தை ஒப்படைத்தால் கூட.. ஈரான் தப்பிக்காது! டிரம்ப் கொடுத்த பகிரங்க வார்னிங்! -
ஆடிப்போன டிரம்ப்.. ஈரான் நினைத்தால்.. 1 வாரத்தில் 10 அணு ஆயுதங்கள் ரெடியாகும்.. வெளியான பரபர தகவல்! -
ஹார்முஸ் நீரிணைக்கு சுங்க கட்டணமா? மொத்த அரபு நாடுகளும் க்ளோஸ்.. அமெரிக்கா சீரியஸ் வார்னிங்! -
குட்டையை குழப்பும் இஸ்ரேல்.. ஈரானிடம் கெஞ்சும் டிரம்ப் அரசு.. இறுதிக்கட்டத்தில் போர்! -
அமெரிக்க பொருளாதாரம் அபாயத்தில் உள்ளதா? ஜகா வாங்கும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்.. வெளியானது முக்கிய அறிகுறி! -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில்












Click it and Unblock the Notifications