ஹரியானா முதல்வர் ஹூடாவை நீக்க கோரி அமைச்சர் ராஜினாமா!
சண்டிகர்: ஹரியானா முதல்வர் பூபிந்தர்சிங் ஹூடாவை நீக்க வேண்டும் என்று காங்கிரஸ் மேலிடத்தை வலியுறுத்தி அம்மாநில அமைச்சர் அஜய் யாதவ் ராஜினாமா செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஹரியாணாவில் பூபிந்தர் சிங் ஹூடா தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. அண்மையில் முடிவடைந்த லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் கட்சி அம்மாநிலத்தில் படுதோல்வியை சந்தித்தது.
இந்நிலையில் ஹூடா அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த மாநில மின் துறை அமைச்சர் அஜய் யாதவ் நேற்று பதவியை ராஜினாமா செய்தார். ரிவாரி தொகுதியில் இருந்து காங்கிரஸ் எம்எல்ஏவாக 6 முறை தேர்ந்தெடுக்கப்பட்ட அவர், தனது அமைச்சர் பதவி ராஜினாமா கடிதத்தை ஹூடாவுக்கு அனுப்பி வைத்தார்.
இது குறித்து அஜய் யாதவ் கூறியதாவது:
- அமைச்சர் பதவியை விட்டு விலகினாலும் காங்கிரஸ் கட்சியில் இறுதி வரை தொடர்வேன். சோனியா காந்திதான் என் தலைவர்.
- கடந்த லோக்சபா தேர்தலில் ஹரியாணாவில் காங்கிரஸ் ஒரு தொகுதியில் மட்டுமே வெற்றி பெற்றது. மற்ற இடங்களில் தோல்வி அடைந்தது. ஆனால், எந்தப் பாடத்தையும் கற்கத் தவறிவிட்டது.
- லோக்சபா தேர்தலில் கட்சியின் தோல்விக்கான காரணங்களை அந்தோணி குழுவின் முன் நான் விரிவாக எடுத்துக் கூறியுள்ளேன். விரைவில் கட்சித் தலைமையைச் சந்திக்க உள்ளேன்.
- முதல்வர் பதவியில் இருந்து ஹூடா நீக்கப்படாவிட்டால், அக்டோபர் மாதம் நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் நான் போட்டியிட மாட்டேன்.
அஜய் யாதவைத் தொடர்ந்து மேலும் சில அமைச்சர்களும் ஹூடாவை நீக்கக் கோரி ராஜினாமா செய்யக் கூடும் என்றும் கூறப்படுகிறது. இதனால் ஹூடாவுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications