தொடர் விடுமுறை... திருப்பதியில் இலவச தரிசனத்துக்கு 12 மணி நேரம் காத்திருப்பு

Posted By:
Subscribe to Oneindia Tamil

திருப்பதி: ரம்ஜான் பண்டிகையையொட்டி 3 நாள்கள் தொடர் விடுமுறை என்பதால் திருப்பதியில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது.

பெரும்பாலான மக்களின் விருப்பமான இடம் திருப்பதிதான். அள்ள அள்ள குறையாது என்பதை போல் பார்க்க பார்க்க தெகட்டாத ஒருவர் ஏழுமலையான் மட்டுமே. வெளிநாடுகளிலிருந்தும் மக்கள் ஏராளமானோர் திருப்பதி பாலாஜியை சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

இதனால் வார நாள்களில் கூட்டம் சற்று குறைவாகவும், வார விடுமுறை நாள்களில் கூட்டம் அதிகமாகவே இருக்கும். எனவே ஏழுமலையானை தரிசிக்கவு்ம நேரம் பிடிக்கும்.

 3 நாள்கள் விடுமுறை

3 நாள்கள் விடுமுறை

சனி, ஞாயிறு நாள்கள் என்றாலே ரூ.300-க்கு டிக்கெட் புக்கிங் செய்து விட்டு திருப்பதியில் குவிவர். இதே தொடர் விடுமுறை என்றால் கேட்கவே வேண்டாம். திங்கள்கிழமை ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு பள்ளி, கல்லூரிகள், அரசு மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.

 பக்தர்கள் குவிந்தனர்

பக்தர்கள் குவிந்தனர்

இதனால் விடுமுறையை கழிக்க பக்தர்கள் திருப்பதியில் குவிந்த வண்ணம் உள்ளனர். ஏழுமலையானை காண பக்தர்கள் மணிக்கணக்கில் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

 31 அறைகள் நிரம்பின

31 அறைகள் நிரம்பின

திருமலையில் உள்ள 31 வைகுண்டம் அறைகளும் மக்கள் கூட்டத்தால் நிரம்பி வழிகின்றன. இதனால் அறையை கடந்து வெளியே அரை கி.மீ. தூரத்துக்கு நின்று கொண்டிருக்கின்றனர்.

 எத்தனை மணி நேரம் தரிசனம்

எத்தனை மணி நேரம் தரிசனம்

இலவச தரிசனத்தில் ஏழுமாலையானை காண 12 நேரம் ஆகிறது. அதபோல் மலைப்பாதை வழியாக செல்லும் பக்தர்கள் 10 மணிநேரம் காத்திருக்கின்றன. ரூ.300 தரிசன டிக்கெட் பெற்ற பக்தர்கள் 4 மணி நேரமும் காத்திருக்கின்றனர்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Continous holiday, heavy crowd in tirupathi, free darshan devotees are waiting for 12 hours for darshan.
Please Wait while comments are loading...