For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மும்பையில் கனமழை... அரை மணி நேரத்தில் வெள்ளகாடாகியது

மும்பையில் கனமழை பெய்துள்ளது. அரை மணி நேரத்தில் ஆங்காங்கே தண்ணீர் தேங்கியுள்ளது.

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

Recommended Video

    மும்பையில் கனமழை..வீடியோ

    மும்பை: மகாராஷ்டிரா மாநிலம், மும்பையில் கனமழை பெய்தது. சாலை எங்கும் தண்ணீர் ஓடுவதால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

    பருவமழைக்கு முன்பு பெய்யும் மழை காலம் மும்பையில் தொடங்கியது. இந்த மழையால் மாம்பழங்கள் பழுக்கும் என தெரிகிறது. கோடை காலத்தில் சூரியன் வடக்கு திசை நோக்கி செல்லும்.

    அப்போது ஓரிடத்தில் ஏற்படும் அதிகப்படியான வெப்பநிலையால் இடியுடன் கூடிய மழை ஏற்படும். இதுவே முன்பருவமழை என்பதாகும். அரை மணி நேரத்திற்கு மும்பையில் மழை கொட்டித் தீர்த்துவிட்டது.

    150 தூரத்துக்கு பறந்த பேரிகாடுகள்

    150 தூரத்துக்கு பறந்த பேரிகாடுகள்

    இதனால் சாலைகளில் மழை நீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த மழைக்கு முன்னர் கடுங்காற்று வீசியது. இதனால் சாலைகளில் கிடந்த பேனர்கள் 150 மீட்டர் தூரத்துக்கு பறந்து சென்றன.

    கொட்டும் மழை

    கொட்டும் மழை

    தண்டவாளங்களில் தண்ணீர் தேங்கியுள்ளதால் மும்பையில் உள்ளூர் ரயில்கள் தாமதமாகவும் பாதுகாப்புடனும் இயக்கப்படுகிறது. இந்த கொட்டும் மழையில் போக்குவரத்து காவலர் நந்தகுமார் இங்கே போக்குவரத்தை சரி செய்தார். மழை உறை கூட இல்லாமல் அவர் பணியாற்றியதை பார்த்த மக்கள் வெகுவாக பாராட்டினர்.

    வெள்ளநீர்

    தாதர் கிழக்கு பகுதியில் டாக்டர் அம்பேத்கர் சாலையில் பெய்த மழையால் சாலைகளில் குளம் போல் தேங்கியுள்ள நீர்.

    தண்ணீர்

    மும்பையில் கனமழை பெய்தது. பல்வேறு இடங்களில் தண்ணீர் தேங்கியிருந்தது.

    வாகன ஓட்டிகள் அவதி

    அரை மணி நேரத்தில் வீடுகளை சுற்றி தண்ணீர் சூழ்ந்தது. இதனால் பள்ளம் மேடு தெரியாமல் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டனர்.

    English summary
    Heavy rains lashed parts of Mumbai on Thursday due which flights were affected. A Jet airways London-Mumbai flight had to be diverted to Ahmedabad airport due to the downpour.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X