பகல் முழுவதும் தேர்தல் பரபரப்பு.... மாலையில் கனமழை... பெங்களூர் மக்களுக்கு திண்டாட்டம்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: கர்நாடகா சட்டசபை தேர்தல் முடிவுகள் வெளியானதால், பெங்களூரு நகரம் பகல் முழுவதும் மிகவும் பரபரப்பாக இருந்தது. இந்த நிலையில், பெங்களூரின் பல பகுதிகளில் இன்று மாலையில் கனமழை பெய்தது.

கர்நாடகா சட்டசபை தேர்தல் முடிவுகள் இன்று வெளியாயின. பல திருப்பங்கள் இருந்ததால், பெங்களூரில் உள்ள கட்சி அலுவலகங்கள் பரபரப்பாக காணப்பட்டன. ஆளுநர் மாளிகைக்கு கட்சித் தலைவர்கள் படையெடுக்க, போக்குவரத்து நெரிசலால் மக்கள் திண்டாடினர்.

heavy rain in bengaluru

இந்த நிலையில் கடந்த சில நாட்களாகேவே பெங்களூரில் அவ்வப்போது பல இடங்களில் மழை பெய்து வருகிறது. கடந்த வார இறுதியில் கனமழை பெய்ததால், மக்கள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகினர்.

இன்று காலை முதல் தேர்தல் பரப்பரப்பால் சூடு பிடித்திருந்த பெங்களூருவை மாலையில் பெய்த கனமழை குளிரச் செய்தது. மேலும் சில நாட்களுக்கு இவ்வாறு அவ்வப்போது மழை பெய்யக் கூடும் என்று வானிலை ஆராய்ச்சி மையம் கூறியுள்ளது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
On election result day, bengaluru received heavy rain.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற