For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தலைநகர் டெல்லியை வாட்டும் மழை.. சாலை முழுக்க வெள்ளம்.. மக்கள் அவதி!

டெல்லியில் கடந்த இரண்டு நாட்களாக பெய்து வரும் கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு இருக்கிறது.

By Shyamsundar
Google Oneindia Tamil News

டெல்லி: டெல்லியில் கடந்த இரண்டு நாட்களாக பெய்து வரும் கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு இருக்கிறது.

கடந்த இரண்டு நாட்களில் மட்டும் திடீர் என்று மிகவும் அதிக அளவில் மழை பெய்து இருக்கிறது. சுமார் 4.36 மிமீ முதல் 9.8மிமீ வரை மழை பெய்து இருக்கிறது.

இதனால் அங்கு பெரிய அளவில் வெள்ளம் ஏற்பட்டு இருக்கிறது . அங்கு அதிகபட்சம் 32.2 டிகிரி செல்சியசும், குறைந்தபட்சம் 28 டிகிரி செல்சியசும் வெப்பநிலை நிலவி வருகிறது.

பெரிய பள்ளம்

இந்த அதிகபட்ச மழையால், காசியபாத்தின் வசுந்தரா நகரில் அதிக அளவில் வெள்ளம் ஏற்பட்டது. இதனால், அதிக அளவில் நீர் சாலையில் ஓடியது. இதனால் அந்த பகுதியில், பெரிய அளவில் சாலையில் குகை போல பள்ளம் ஏற்பட்டது.

நொய்டாவில் மழை

நொய்டாவில் மழை

இதனால் டெல்லியின் புறநகர் பகுதியிலும் மிகவும் அதிக அளவில் மழை பெய்தது. ஹரியானா செல்லும் சாலையிலும் மழை பெய்தது. மேலும் நொய்டா அருகிலும் மழை அதிக அளவில் பெய்தது. இதனால் அங்கு வெள்ளம் ஏற்பட்டு இருக்கிறது.

போக்குவரத்து நெரிசல்

போக்குவரத்து நெரிசல்

இந்த கனமழை காரணமாக டெல்லியில் பெரிய அளவில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு இருக்கிறது. எப்போதும் டெல்லியில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை விட 50 சதவிகிதம் அதிக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு இருக்கிறது.

தொடரும் மழை

தொடரும் மழை

இந்த நிலையில் இன்றும் மழை தொடரும் என்று கூறப்படுகிறது. அதன்படி, தெற்கு டெல்லி, காசியாபாத், நொய்டா, குர்ஜா, ஹோடல், பல்வால், மீரட், முசாபர்நகர், என்சிஆர் ஆகிய பகுதியில் மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது.

English summary
Heavy Rain in Delhi, People suffered as flood-damaged road.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X