புதிய 500, 2000 ரூபாய் நோட்டுகளை அச்சடிக்க எவ்வளவு செலவாகிறது தெரியுமா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

டெல்லி: ஒரு புதிய 500 மற்றும் 2000 ரூபாய் நோட்டை அச்சடிக்க ஆகும் செலவு எவ்வளவு என்பதை மத்திய அரசு மாநிலங்களவையில் தெரிவித்து உள்ளது.

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 8 ஆம் தேதி முதல் புழக்கத்தில் இருந்த பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை செல்லாது என்று அறிவித்தது மத்திய அரசு. கருப்பு பணத்தை வெளிக் கொண்டு வருவதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக பிரதமர் மோடி கூறினார். இதனையடுத்து புதிய 500 மற்றும் 2000 ரூபாய் நோட்டுகளை மத்திய ரிசர்வ் வங்கி புழக்கத்தில் விட்டது.

Here's How Much It Costs The RBI To Print New 500 And 2,000 Rupee Notes

இதுதொடர்பான கேள்விக்கு மாநிலங்களவையில் எழுத்துப்பூர்வமாக பதிலளித்துள்ள மத்திய நிதி துறை இணை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால், "ஒரு புதிய 500 ரூபாய் நோட்டை அச்சடிக்க ரூ 2.87 முதல் ரூ. 3.09 வரையில் செலவாகிறது. அதேபோல் புதிய 2000 ரூபாய் நோட்டை அச்சடிக்க ரூ. 3.54 முதல் ரூ. 3.77 வரை செலவாகிறது என தெரிவித்து உள்ளார்.

ரூபாய் நோட்டுகள் இப்போதும் அச்சடிக்கப்பட்டு வருகிறது எனக் குறிப்பிட்ட அவர், நவம்பர் 8-ம் தேதியில் இருந்து அச்சடிக்கப்படும் ரூபாய் நோட்டுகளுக்கு மொத்தமாக ஆன செலவைப் பற்றி கூறுவது கடினம். தற்போதும் அந்த பணி முடிவடையவில்லை என்று கூறினார்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Government reveals cost of printing new Rs 500 and Rs 2,000 notes
Please Wait while comments are loading...