For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

இமாச்சல பிரதேச சட்டசபை தேர்தல்.. வாக்குப்பதிவு நிறைவு!

Google Oneindia Tamil News

சிம்லா: இமாச்சல பிரதேசத்தில் இன்று காலை 8 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 5 மணிக்கு நிறைவடைந்தது. இன்று 412 வேட்பாளர்கள் களமிறங்கிய நிலையில், பொதுமக்கள் ஆர்வமாக வாக்களித்தனர்.

இமாச்சல பிரதேச சட்டசபை மொத்தம் 68 இடங்களைக் கொணது. இந்த 68 சட்டசபை தொகுதிகளுக்கும் இன்று ஒரே கட்டமாக வாக்குப் பதிவு நடைபெற்று வருகிறது. இமாச்சல பிரதேசத்தில் இன்று காலை 8 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்கியது.

இமாச்சல பிரதேச சட்டசபை தேர்தலில் மொத்தம் 55,74,793 வாக்காளர்கள் வாக்களிக்கின்றனர். தேர்தல் களத்தில் 412 வேட்பாளர்கள் மோதுகின்றனர். இன்று காலை 8 மணிக்கு தொடங்கிய வாக்குப் பதிவு மாலை 5 மணிக்கு நிறைவடையும்.

Himachal Pradesh Assembly Election 2022 LIVE: Voting today, 412 Candidates and 56 Lakh Voters

Newest First Oldest First
6:27 PM, 12 Nov

இமாச்சல பிரதேசத்தில் மாலை 5 மணி வரை 65.92% வாக்குகள் பதிவாகி இருந்ததாக தேர்தல் ஆணையம் தகவல்.
6:24 PM, 12 Nov

இமாச்சல பிரதேசத்தில் மாற்றம் ஏற்படுவது உறுதி. காங்கிரஸ் தனிப்பெரும்பான்மை உடன் ஆட்சியை பிடிக்கும். பாஜகவுக்கு படுதோல்வி நிச்சயம்- காங்கிரஸின் ஆனந்த் சர்மா நம்பிக்கை
5:24 PM, 12 Nov

இமாச்சல பிரதேசத்தில் வாக்குப்பதிவு நிறைவடைந்துள்ள நிலையில், வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு சீல் வைக்கும் தேர்தல் அதிகாரிகள்!
5:03 PM, 12 Nov

இமாச்சல பிரதேசத்தில் விறுவிறுப்பாக நடைபெற்ற வாக்குப்பதிவு நிறைவடைந்தது.
4:57 PM, 12 Nov

இந்த தேர்தலுக்கு பின்னரும், இமாச்சல பிரதேச முதல்வராக ஜெய்ராம் தாக்கூரே தொடர்ந்து இருப்பார் என பாஜக தேசிய தலைவர் நட்டா தெரிவித்து உள்ளார்.
4:35 PM, 12 Nov

இமாச்சலப் பிரதேசம் தாஷிகாங்கில் உள்ள உலகின் மிக உயரமான வாக்குச் சாவடியில் 52 வாக்காளர்கள் உள்ள நிலையில், அவர்களில் 51 பேர் வாக்களித்துள்ளனர்.
4:22 PM, 12 Nov

இமாச்சல பிரதேச தேர்தலில் மதியம் 3 மணி வரை 55% வாக்குகள் பதிவாகி உள்ளது.
4:14 PM, 12 Nov

இமாச்சல பிரதேச தேர்தலில் பாஜகவினர் முறைகேட்டில் ஈடுபடுவதாகக் காங்கிரஸ் கட்சியினர் தலைமை தேர்தல் அதிகாரியிடம் புகார்
3:57 PM, 12 Nov

குழந்தைகளுடன் வரும் பெற்றோர் வாக்களிக்கவும் மாற்றுத்திறனாளிகள் எளிதில் வாக்களிக்கவும் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன- தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார்
3:41 PM, 12 Nov

இமாச்சலப் பிரதேசத்தில் 157 வாக்குச் சாவடிகள் முழுக்க முழுக்க பெண் ஊழியர்களால் நிர்வகிக்கப்படுகின்றன- தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார்
3:27 PM, 12 Nov

இமாச்சல பிரதேச சட்டசபை தேர்தலில் 14 கிமீ நடந்து வந்து ஜனநாயக கடமையாற்றிய 83 வயது பெண்.
3:16 PM, 12 Nov

சிம்லா அருகே உள்ள தாண்டீர் வாடி தொகுதியில் நீண்ட வரிசையில் நின்று பெண்கள் ஆர்வமாக வாக்களித்தனர்.
2:41 PM, 12 Nov

மதியம் 1 மணி நிலவரப்படி லாஹால் தொகுதியில் குறைந்த அளவில் ஓட்டுப்பதிவாகி உள்ளது.
2:12 PM, 12 Nov

மதியம் 1 மணி நிலவரப்படி சிராமர் தொகுதியில் அதிகபட்சமாக 41.89 சதவீத வாக்குகள் பதிவானது.
1:46 PM, 12 Nov

மொத்தமுள்ள 69 தொகுதிகளில் மதியம் 1 மணி நிலவரப்படி 37.19 சதவீத வாக்குப்பதிவு
1:45 PM, 12 Nov

கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் பனி பிரதேசங்களில் வசிக்கும் மக்கள் வாக்கு செலுத்துவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்
1:25 PM, 12 Nov

11 மணி நிலவரப்படி டூன் சட்டசபை தொகுதியில் குறைந்தபட்சமாக 7 சதவீத ஓட்டுக்கள் மட்டுமே பதிவாகி உள்ளது
1:08 PM, 12 Nov

சம்பா மாவட்டம் பாங்கி தாலுகாவில் உள்ள சாசக் படோரி வாக்குச்சாவடிக்கு பனிபடர்ந்த பாதையை கடந்து ஓட்டுப்போட மக்கள் படையெடுத்து சென்றனர். இமாச்சல பிரதேசத்தில் தற்போது கடும் குளிர் நிலவி வருவது குறிப்பிடத்தக்கது.
12:52 PM, 12 Nov

இமாச்சல பிரதேச மொத்த வாக்காளர்களில் 1.20 லட்சம் பேர் 80 வயதுக்கு மேற்பட்டவர்கள் ஆவார்கள். நான் அவர்களை தலை வணங்குகிறேன். அவர்களிடம் இருந்து உத்வேகத்தை பெறுவதன் மூலம் இளைஞர்கள் முன்னேற்றம் அடையலாம். சுதந்திர இந்தியாவின் முதல் வாக்காளரான மறைந்த ஷியாம் சரண் நேகிக்கு நாம் அஞ்சலி செலுத்த வேண்டும். இதற்கு அனைவரும் தேர்தலில் ஓட்டளிக்க வேண்டும் என தலைமை தேர்தல் அதிகாரி ராஜீவ் குமார் பேட்டி
12:47 PM, 12 Nov

இமாச்சலில் மொத்தம் 56,000 வாக்காளர்கள் மாற்றுத்திறனாளிகளாக உள்ளனர். இவர்கள் ஓட்டு செலுத்த வசதியாக அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. அதோடு 37 வாக்குச்சாவடிகளை மாற்றுத்திறனாளிகள் நிர்வகித்து வருகின்றனர். மாற்றுத்திறனாளிகளுக்கும் வேலை வழங்க வேண்டும் என்ற அடிப்படையில் இதனை செய்துள்ளோம் - இந்திய தலைமை தேர்தல் அதிகாரி ராஜீவ் காந்தி பேட்டி
12:44 PM, 12 Nov

இமாச்சலில் மொத்தம் 56,000 வாக்காளர்கள் மாற்றுத்திறனாளிகளுக்காக உள்ளனர். இவர்கள் ஓட்டு செலுத்த வசதியாக அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. அதோடு 37 வாக்குச்சாவடிகளை மாற்றுத்திறனாளிகள் நிர்வகித்து வருகின்றனர். மாற்றுத்திறனாளிகளுக்கும் வேலை வழங்க வேண்டும் என்ற அடிப்படையில் இதனை செய்துள்ளோம் - இந்திய தலைமை தேர்தல் அதிகாரி ராஜீவ் காந்தி பேட்டி
12:35 PM, 12 Nov

இமாச்சல பிரதேசத்தில் மொத்தம் 7881 ஓட்டுச்சாவடிகள் உள்ளன. இதில் 157 ஓட்டுச்சாவடிகளை முழுமையாக பெண்கள் மட்டுமே நிர்வகித்து வருகின்றனர். குழந்தைகளுடன் ஓட்டுச்சாவடிக்கு வரும் மக்களுக்கு தேவையான ஏற்பாடுகளை செய்து கொடுத்துள்ளோம். அமைதியான முறையில் தேர்தல் நடக்கிறது என இந்திய தலைமை தேர்தல் அதிகாரி ராஜீவ் குமார் தகவல்
12:15 PM, 12 Nov

சுரா சட்டசபை தொகுதியில் உள்ள 122வது வாக்குச்சாவடியில் 105 வயது நிரம்பிய நரோ தேவி ஓட்டளித்து ஜனநாயக கடமையை ஆற்றினார்.
12:01 PM, 12 Nov

11 மணி நிலவரப்படி அதிகபட்சமாக சுந்தர்நகர் சட்டசபை தொகுதியில் 23 சதவீத ஓட்டுக்கள் பதிவாகி உள்ளது.
11:42 AM, 12 Nov

இமாச்சல பிரதேச சட்டசபை தேர்தலில் காலை 11 மணி நிலவரப்படி மொத்தம் 11.82 சதவீத ஓட்டுக்கள் பதிவு
11:36 AM, 12 Nov

முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் எம்பியுமான ஆனந்த் சர்மா சிம்லாவில் உள்ள சாய்னிக் ரெஸ்ட் ஹவுஸ் லாங்க்வுட்டில் ஓட்டு செலுத்தினார்
11:34 AM, 12 Nov

காலை 9 மணி நிலவரப்படி அதிகபட்சமாக காங்க்ரா தொகுதியில் 4.54 சதவீத ஓட்டு பதிவாகி இருந்தது.
11:34 AM, 12 Nov

பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா ஓட்டளித்தார். பிலாஸ்பூரில் உள்ள விஜயாப்புரா வாக்குச்சாவடியில் ஜேபி நட்டா வாக்களித்தார். அதன்பிறகு ஜேபி நட்டா கூறுகையில், ‛‛இன்று காலை முதல் சாதகமான சூழல் உள்ளது. மக்கள் ஆர்வமாக வாக்களித்து வருகின்றனர். இதில் வைராக்கியம் இருப்பதாக நினைக்கிறேன். அதிகளவில் வாக்குப்பதிவாக வேண்டும். இதனால் பொதுமக்கள் அனைவரும் வாக்களிக்க வேண்டும்’’ என்றார்.
11:28 AM, 12 Nov

இமாச்சல பிரதேச முன்னாள் முதலமைச்சர் பிரேம் குமார் துமால் தனது மகனும் மத்திய அமைச்சருமான அனுராக் தாகூர் உள்பட குடும்பத்துடன் வந்து ஓட்டளித்தார். அனுராக் தாகூர் கூறுகையில், ‛‛தேர்தலை முதல்வர் ஜெய்ராம் தாகூர் தலைமையில் சந்தித்து உள்ளோம். அவரது தலைமையில் மாநிலத்தில் 5 ஆண்டு நல்லாட்சியை கொடுத்து உள்ளோம். இதனால் மீண்டும் ஒருமுறை மக்கள் எங்களுக்கு வாய்ப்பு வழங்குவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது’’ என்றார்.
11:01 AM, 12 Nov

காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ஆனந்த் சர்மா சிம்லாவில் வாக்களித்தார்.
READ MORE

English summary
Himachal Pradesh Election 2022 [ஹிமாச்சல் சட்டமன்ற தேர்தல் 2022] Polling Live Updates, Latest News and Highlights in Tamil: Check all the Live News updates on the Himachal State Assembly Pradesh Election Polling, Results, Breaking News & Highlights and much more in tamil at Oneindia Tamil.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X