
தேர்தல்ல நிற்காதீங்க! மோடியே போன் போட்டு சொன்னாரே? நொறுங்கிய மூத்த தலை! அப்பவே சுதாரிச்சு இருக்கணும்
சிம்லா: பிரதமர் மோடியே போன் செய்து பேசியதாக சொல்லப்படும் க்ரிபால் பர்மார் தான் போட்டியிட்ட தொகுதியில் பின்னடைவை சந்தித்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இமாச்சல பிரதேச தேர்தல் முடிவுகள் வெளியாகி வருகின்றன. இமாச்சல பிரதேசத்தில் கடந்த நவம்பர் 12ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற்றது. 68 தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக தேர்தல் நடந்தது.
அங்கு மெஜாரிட்டி பெற 35 இடங்களில் வெற்றிபெற வேண்டும். இந்த நிலையில் இமாச்சல பிரதேசத்தில் தற்போது காங்கிரஸ் முன்னிலை பெற்றுள்ளது. 39 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. கடந்த சட்டசபை தேர்தலில் அங்கு காங்கிரஸ் 21 இடங்களை மட்டுமே வென்று இருந்த நிலையில் இந்த முறை 39 இடங்களை பெற்று வெற்றிபெறும் நிலையில் உள்ளது. மாறாக பாஜக 26 இடங்களுக்கு சுருங்கி உள்ளது.
புது ரெக்காட் படைத்த பாஜக.. பிரதமர் மோடி போட்டு தந்த பாதை.. வேறு எந்த கட்சியும் செய்யாத சாதனை

பாஜக தோல்வி
இமாச்சல பிரதேசத்தில் பாஜகவின் தோல்விக்கு பல்வேறு காரணங்கள் சொல்லப்படுகின்றன. அங்கு பாஜக கட்சிக்கு தலைவலியாக உருவெடுத்தவர்தான் க்ரிபால் பர்மார். பாஜகவில் மூத்த தலைவராக இருந்த இவர் பிரதமர் மோடிக்கு மிகவும் நெருக்கம். பிரதமர் மோடியுடன் 25 வருடமாக இவர் நெருக்கமாக இருந்து வருகிறார். அதேபோல் பாஜக தேசிய தலைவர் ஜெபி நட்டாவுடனும் இவர் சிறு வயதில் இருந்து நட்பாக இருந்து வந்துள்ளார். க்ரிபால் பர்மார் நட்டாவின் பள்ளி கால நண்பர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

யார் இவர்?
முன்னாள் எம்பியான இவர் கடந்த சில மாதங்களாக பாஜகவில் ஓரம்கட்டப்பட்டு வந்தார். இமாச்சல பிரதேச முதல்வர் ஆக வேண்டும் என்பது க்ரிபால் பர்மார் ஆசை. ஆனால் இவருக்கு பாஜக மேலிடம் கிரீன் சிக்னல் கொடுக்கவில்லை. அதேபோல் க்ரிபால் பர்மார் - நட்டா இடையே சில விஷயங்களில் கருத்து வேறுபாடும் ஏற்பட்டது. இதனால் இவர்கள் நேரடியாக விமர்சனம் செய்து கொள்ளும் அளவிற்கு நிலைமை போனது. முன்னதாக நடைபெற்ற பதேபூர் இடைத்தேர்தலில் க்ரிபால் பர்மார் போட்டியிட பாஜக தலைமை அனுமதிக்கவில்லை.

க்ரிபால் பர்மார்
இதனால் பாஜக மீது கடுமையான விமர்சனங்களை வைத்தார். அதேபோல் நட்டா மீதும் கடுமையாக விமர்சனங்களை வைத்தார். நட்டா என் நண்பர் என்று நினைத்தேன். ஆனால் அவர் என் முதுகில் குத்திவிட்டார். அவரை நம்பி ஏமாந்துவிட்டேன் என்று க்ரிபால் பர்மார் கடுமையாக விமர்சனம் செய்தார். இந்த நிலையில்தான் தற்போது நடக்கும் சட்டசபை தேர்தலில் க்ரிபால் பர்மார் பதேபூர் தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட்டார். பாஜக வேட்பாளரை எதிர்த்து சுயேட்சையாக போட்டியிட்டார். பாஜக தலைவர்கள் பலர் இவரை சமாதானம் செய்ய முயன்றும் யாரும் கேட்காத காரணத்தால் கடைசியில் பிரதமர் மோடியே இவருக்கு போன் செய்ததாக கூறப்பட்டது.

மோடி போன்
ஆம் பிரதமர் மோடி தனக்கு போன் செய்ததாக க்ரிபால் பர்மார் கூறி இருந்தார். அவர் என் நண்பர்தான். எனக்கு போன் செய்து தேர்தலில் போட்டியிட வேண்டாம் என்று கூறினார். அவருடன் பேசியது இனிமையாக இருந்தது. அவரே எனக்கு போன் செய்கிறார் என்றால் நான் எவ்வளவு முக்கியம் என்று பாருங்கள். அப்போதுதான் நான் தேர்தலில் வெற்றிபெறுவேன் என்ற நம்பிக்கை எனக்கு வந்தது. இந்த போன் கால் மிகவும் முக்கியம் என்று மோடி என்னிடம் கூறினார். ஆம் அந்த போன் கால் என் பலத்தை எனக்கே உணர்த்திய முக்கியமான கால், என்று க்ரிபால் பர்மார் கூறி இருந்தார்.

போன் செய்தாரா?
ஆனால் பிரதமர் மோடி அலுவலகம் இப்படி ஒரு போன் செய்யப்பட்டதை பற்றி உறுதி செய்யவில்லை. அதே சமயம் மறுக்கவும் இல்லை. இந்த நிலையில்தான் க்ரிபால் பர்மார் பதேபூர் தொகுதியில் பின்னடைவை சந்தித்து உள்ளார். சுயேச்சை வேட்பாளரான இவர் 3ம் இடத்திற்கு பின்தங்கி உள்ளார். பாஜகவின் ராகேஷ் என்ற வேட்பாளர் முன்னிலை வகித்து வருகிறார். பிரதமர் மோடியே போன் செய்து பேசியதாக கூறப்படும் க்ரிபால் பர்மார் இப்படி அவரின் தொகுதியிலேயே பின்னடைவை சந்தித்து இருப்பது விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.