For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

போதைப் பொருள் மாபியாக்களின் கூடாரமாக பெங்களூர் ஆனது எப்படி?

By Siva
Google Oneindia Tamil News

பெங்களூர்: போதைப்பொருள் மாபியாக்கள் போதைப்பொருளை கைமாற்றும் இடமாக பெங்களூர் உள்ளது.

கோவாவில் உள்ள பொறியியல் கல்லூரி ஒன்றில் மாணவர்கள் போதைப் பொருள் பயன்படுத்தி போலீசாரிடம் சிக்கினர். விசாரணையில் அவர்களுக்கு கர்நாடகாவில் இருந்து போதைப் பொருள் கிடைத்தது தெரிய வந்தது.

கோவா மாணவர்களுக்கு கர்நாடகாவில் உள்ள பெலகாவியில் இருந்து போதைப் பொருள் சென்றுள்ளது.

கர்நாடகா

கர்நாடகா

கடந்த ஒன்றரை ஆண்டுகளாக சர்வதேச போதைப் பொருள் மாபியாக்கள் கர்நாடாகவை தங்கள் தொழிலுக்கு பயன்படுத்தி வருகிறார்கள். பெங்களூர் விமான நிலையத்தில் தான் போதைப் பொருள் கைமாற்றப்படுகிறது.

பெங்களூர்

பெங்களூர்

மும்பை, ஹைதராபாத், கேரளா, தமிழ்நாடு மற்றும் கோவாவுக்கு செல்லும் போதைப் பொருட்கள் பெங்களூரில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில் தான் கைமாற்றப்படுகிறது. இது போலீசாருக்கும் தெரியும் என்று கூறப்படுகிறது.

மும்பை

மும்பை

முன்பு போதைப் பொருள் கடத்தல்காரர்கள் மும்பையில் தான் போதைப் பொருட்களை கைமாற்றி பிற இடங்களுக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் தீவிரவாத அச்சுறுத்தல்களால் மும்பையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டதையடுத்து அவர்கள் பெங்களூருக்கு இடம் மாறிவிட்டனர்.

போதைப் பொருள்

போதைப் பொருள்

பல நாடுகளில் இருந்து வரும் போதைப் பொருள் பெங்களூர் விமான நிலையத்தில் தான் வந்திறங்குகின்றது. அங்கிருந்து பல்வேறு மாநிலங்களுக்கு அவை அனுப்பி வைக்கப்படுகின்றது. பிற பெரிய நகரங்களுடன் ஒப்பிடுகையில் பெங்களூரில் கெடுபிடி அதிகம் இல்லை என்பது போதைப் பொருள் மாபியாக்களின் கருத்து.

English summary
A probe in Goa which was initiated after a drug bust at an engineering college has led investigators to Karnataka. The source of the marijuana which was found on the students has its roots in Karnataka, the Goa police say while adding that the same was sourced from Belagavi.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X