Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இவரை ப்ரோமோட் பண்ணுங்க.. இந்திய அணியே மாறும்.. ட்ரம்ப் கார்டாக உருவெடுத்த தமிழக வீரர்.. ட்விஸ்ட்

Subscribe to Oneindia Tamil

கேப்டவுன்: இந்தியா நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டி தற்போது நடந்து வருகிறது. இந்திய அணி பேட்டிங்கில் மோசமாக சொதப்பினாலும், தமிழக வீரர் ஒருவர் மிகவும் சிறப்பாக ஆடி உள்ளார்.

இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் தொடர் தற்போது நடந்து வருகிறது. இதில் டி 20 போட்டிகளை இந்திய அணி 1-0 என்ற கணக்கில் வென்றது.

இந்த நிலையில் தற்போது ஒருநாள் தொடர் நடந்து வருகிறது. இந்த தொடரில் முதல் போட்டியில் இந்திய அணியை நியூசிலாந்து அணி எளிதாக வீழ்த்தியது.

இரண்டாவது போட்டி மழை காரணமாக தடை பட்ட நிலையில் தற்போது மூன்றாவது மேட்ச் நடந்து கொண்டு இருக்கிறது.

பேட்டிங்

பேட்டிங்

இதிலும் இந்திய அணிதான் முதலில் பேட்டிங் செய்தது. இன்று ஆடும் இந்திய அணியிலும் சஞ்சு சாம்சன் சேர்க்கப்படவில்லை. ஷிகர் தவான் (கேப்டன்), சுப்மன் கில், ரிஷப் பந்த் (வி.கே), சூர்யகுமார் யாதவ், ஷ்ரேயாஸ் ஐயர், தீபக் ஹூடா, வாஷிங்டன் சுந்தர், தீபக் சாஹர், உம்ரான் மாலிக், அர்ஷ்தீப் சிங், யுஸ்வேந்திர சாஹல் ஆகியோர் இன்று நடக்கும் அணியில் சேர்க்கப்பட்டு உள்ளனர். இதையடுத்து முதலில் பேட்டிங் இறங்கிய இந்திய அணியில் ஓப்பனர்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். 13 ரன்கள் மட்டும் எடுத்து கில் அவுட் ஆனார். தவான் 28 ரன்கள் மட்டுமே எடுத்து அவுட் ஆனார்.

சொதப்பல்

சொதப்பல்

அதன்பின் களமிறங்கிய பண்ட் 16 பந்துகளை பிடித்து வெறும் 10 ரன்கள் மட்டும்எடுத்தார் . . இன்றைய பிட்ச் பேட்டிங் செய்ய சாதகமாக இருந்தது. ஆனாலும் இந்திய வீரர்கள் விக்கெட் இழக்க கூடாது என்று நிதானமாக ஆடினார்கள். இன்று மைதானத்தில் அவர் மோசமாக திணறினார். பேட் பந்தை மீட் செய்யவே இல்லை. அந்த அளவிற்கு மிக மோசமாக ஆடினார். இன்னொரு பக்கம் ஷரேயாஸ் ஐயர் மட்டும் 59 பந்துகளில் 49 ரன்கள் எடுத்தார். இதன் பின் இறங்கிய சூர்யா குமார் யாதவ் 6, தீபக் ஹூடா 12 என்று வரிசையாக வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட் ஆனார்கள்.

வாஷிங்டன் சுந்தர்

வாஷிங்டன் சுந்தர்

ஆனால் தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர் மட்டும் சிறப்பாக ஆடினார். 64 பந்துகளை பிடித்த அவர் 51 ரன்கள் எடுத்தார். 5 பவுண்டரி, 1 சிக்ஸர் இதில் அடக்கம். அவரின் பேட்டிங் இன்று சிறப்பாக இருந்தது. கடந்த போட்டியிலும் இந்திய அணியின் ஒட்டுமொத்த ரன்களை சட்டென உயர்த்தியது வாஷிங்டன் சுந்தர்தான். 3 சிக்ஸ், 3 பவுண்டரிகளை கடைசி கட்டத்தில் அடித்து அசத்தினார். இவரின் பேட்டிங் மிக சிறப்பாக இருந்து வருகிறது. ஆஸ்திரேலியா டெஸ்ட் மற்றும் டி 20 தொடரிலும் இவரின் பேட்டிங் மிக சிறப்பாக இருந்தது. இந்திய அணிக்கு இன்று டிரம்ப் கார்டாக இருந்தார்.

யார் இவர்?

யார் இவர்?

முன்பு தமிழ்நாடு அணியின் கேப்டனாக, ஓப்பனிங் பேட்ஸ்மேனாக இருந்தவர். நல்ல பேட்டிங் மற்றும் பவுலிங் ஆல் ரவுண்டர் இவர். இந்திய அணியில் ஜடேஜா சரியாக ஆடுவது இல்லை. காயம் காரணமாக அடிக்கடி இவர் ஆட முடியாமல் போகிறது. இந்த நிலையில் வாஷிங்க்டன் சுந்தரை இந்திய அணி அதிகம் பயன்படுத்த வேண்டும். அதோடு இவரை டாப் ஆர்டருக்கும் ப்ரோமோட் செய்ய வேண்டும். இதன் மூலம் அணியில் அடுத்த நல்ல ஆல் ரவுண்டராக இவர் உருவெடுக்கும் வாய்ப்புகள் உள்ளன.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+