தேனீக்களை வேலைக்கு எடுக்கும் இந்திய ராணுவம்! பல கோடி மதிப்பிலான ஆயுதங்களை விட இது சிறந்ததாம்!
டெல்லி: உலகின் ஒவ்வொரு நாட்டு ராணுவமும் அதிநவீன ஆயுதங்களுக்குப் பல பில்லியன்களை ஒதுக்கி வருகிறது. இந்தியாவும் கூட ராணுவத்திற்கு ஒவ்வொரு ஆண்டும் பெரிய தொகையை ஒதுக்கி வருகிறது. அதேநேரம் இந்திய எல்லை பாதுகாப்புப் படை எல்லைகளில் பாதுகாப்பை உறுதி செய்யத் தேனீக்களை வேலைக்கு எடுப்பது உங்களுக்குத் தெரியுமா! ஏன் அவர்கள் இதுபோல செய்கிறார்கள்.. இதன் பின்னணி குறித்து நாம் பார்க்கலாம்.!
உலக நாடுகள் தங்கள் ராணுவத்தை நவீனமயமாக்கவும் புதுமையான ஆயுதங்களைத் தரவும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இதற்காக ஒவ்வொரு நாடும் பல பில்லியன்களையும் ஒதுக்கி வருகிறது. எதிரிகளை காலி செய்ய அதிநவீன ஆயுதங்களை வாங்குவதில் தான் அதில் பெரிய தொகை செல்கிறது.

ஆயுதங்கள் மட்டுமில்லை
ஆனால் எல்லா சமயங்களிலும் அதிநவீன ஆயுதங்கள் மட்டும் நம்மை பாதுகாத்துவிடாது. சில நேரங்களில் எதிரிகளை காலி செய்யப் பழைய கால முறைகளுக்கும் கூட நாம் திரும்ப வேண்டி இருக்கும். அப்படி தான் இங்கே இந்தியா வங்கதேச எல்லையில் வினோதமான ஒரு டெக்னிக்கை இந்திய ராணுவம் கையில் எடுத்துள்ளது. இது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.
இந்திய வங்கதேச எல்லை என்பதால் இந்தியா பாகிஸ்தான் எல்லை அளவுக்குப் பதற்றம் நிறைந்ததாக இருக்காது. அங்குச் சற்று அமைதியான சூழலே இருக்கும். ஆனால், இதற்காக இந்தியா வங்கதேச எல்லையில் பிரச்சினையே இருக்காது எனச் சொல்லிவிட முடியாது. கடத்தல், சட்டவிரோத ஊடுருவல்கள் ஆகியவை இந்தியா வங்கதேச எல்லையில் மிகப் பெரிய பிரச்சினையாகவே இருந்து வருகிறது. இதைச் சமாளிக்க இந்தியா மிகவும் பழமையான ஒரு டெக்னிக்கை கையில் எடுத்துள்ளது.
தேனீக்கள்
என்னதான் எல்லையில் வீரர்கள் இருப்பார்கள்.. ரோந்து பணிகள் இருக்கும் என்றாலும் கூட 24*7 ஒரே இடத்தை கண்காணிக்க முடியாது. இதனால் வீரர்கள் இல்லாத நேரம் பார்த்து ஊடுருவல் நடப்பது தொடர் கதையாக இருக்கிறது. இதைச் சமாளிக்கவே உள்ளே பாதுகாப்புப் படையினர் அங்குத் தேனீக்களை நிறுத்தியுள்ளனர்.
எதற்காகத் தேனீக்கள்?
மேற்கு வங்க மாநிலம் நாடியா மாவட்டத்தில் உள்ள பாதுகாப்புப் படையினர் 32வது பட்டாலியன் தான் இதைச் செய்துள்ளனர். அங்கு இரு நாடுகளைப் பிரிக்கும் எல்லையில் உள்ள முள்வேலிகளில் பெட்டிகளில் தேனீக்கள் தொங்கவிடப்பட்டு இருக்கும். பொதுவாகத் தேனீக்களை வளர்ப்போர் இதுபோன்ற பெட்டிகளில் தான் அதைத் தொங்க விடுவார்கள். ஆனால், இங்கு தேனீக்களின் பெட்டிகளைத் தொங்க விடுவது தேனுக்காக இல்லை. கடத்தல்காரர்கள் மற்றும் ஊடுருவல் காரர்களுக்கு எல்லையைத் தாண்ட முயலும் போது வேலிகள் ஆடும். அப்போது இந்த தேனீக்கள் அவர்களைக் கடிக்க ஆரம்பித்துவிடும்.
சட்டவிரோதமான செயல்களைச் செய்வோர் வலி மிகுந்த தேனீக்கள் தாக்குதலை எதிர்கொள்ள நேரிடும். தேனீக்களைக் களமிறக்கிய பிறகு அங்குக் கடத்தல் ஊடுருவல் பிரச்சினை கணிசமாகக் குறைந்துள்ளதாகக் கூறப்படுகிறது. பல கோடி மதிப்பிலான ஆயுதங்கள் கூட சில அரிய நேரங்களில் சொதப்பலாம்.. ஆனால், இந்த இயற்கை டெக்னிக் சொதப்பவே சொதப்பாது என்கிறார்கள்.
இந்திய ராணுவத்தின் திட்டம்
தேனீக்கள் அதே இடத்தில் தொடர்ந்து இருக்க வேண்டும் என்பதால்.. அவற்றுக்குத் தேன் கிடைக்கும் வகையில் தாவரங்களை அருகே பயிரிட்டும் வளர்த்து வருகிறது இந்திய ராணுவம்.. மேலும், அங்குள்ள எல்லை பாதுகாப்புப் படையினருக்கு அடிப்படை தேனீ வளர்ப்பு பயிற்சியும் அளிக்கப்படுகிறது. அதேநேரம் இது இந்திய ராணுவம் மட்டும் செய்வதில்லை எலிகள், சில வகை பறவைகளை உலகெங்கும் உள்ள பல்வேறு ராணுவங்கள் பயன்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications