For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பழைய பிஎப் கணக்கில் இருந்து புது பிஎப் கணக்குக்கு பணத்தை ஆன்லைனில் மாற்றுவது எப்படி

Google Oneindia Tamil News

சென்னை: நீங்கள் முன்பு வேலை பார்த்த நிறுவனத்தில் இருக்கும் உங்கள் பிஎப் அக்கவுண்ட் பணத்தை இப்போது வேலை பார்க்கும் நிறுவனத்தில் உள்ள உங்கள் பிஎப் கணக்கிற்கு எப்படி ஆன்லைனில் பணத்தை மாற்றுவது என்பதை இப்போது பார்ப்போம்.

இன்றைய காலகட்டத்தில் ஒரே நிறுவனத்தில் வேலை செய்து ஓய்வு பெறுவது என்பது இயலாத காரியமாகி உள்ளது. இதனால் பணியாளர்கள் ஊதியம், நிர்வாக நடைமுறை போன்ற பல்வேறு காரணங்களால் மாற வேண்டிய நிலை உருவாகும்.

அப்படி மாறும் போது ஏற்கனவே நீங்கள் பணியாற்றிய நிறுவனம் ஒரு பிஎப் கணக்கில் உங்களிடம் பிடித்த பணத்தை நிறுவனத்தின் பங்கு பணத்தை போடும். ஆனால் புதிதாக வேலை செய்யும் நிறுவனமும் புதிய பிஎப் கணக்கை திறந்து அதில் பணம் போடும். ஆனால் இரண்டுக்குமே ஒரே யுனிவர்சல் அக்கவுண்ட் நம்பர் தான்(யுஏஎன் நம்பர்) இருக்கும்.

 யுஏஎன் நம்பர்

யுஏஎன் நம்பர்

எனவே அப்படிப்பட்ட சூழலில் பணத்தை எப்படி உங்களின் ஒரு பிஎப் கணக்கில் இருந்து புதிய பிஎப் கணக்கிற்கு பணத்தை ஆன்லைனில் மாற்றவது என்பதை இப்போது பார்ப்போம். இதற்கு முதலில் ஈபிஎஃப் கணக்கு வைத்திருப்பவர்கள் தங்கள் யுஏஎன் (யுனிவர்சல் கணக்கு எண்) உறுப்பினர் e-SEWA தளத்தில் செயல்படுத்தப்படுவதை உறுதி செய்ய வேண்டும். உறுப்பினர் மின்-சேவா போர்ட்டலில் UAN ஐ எவ்வாறு செயல்படுத்துவது என்பதை அறிய அங்கே கிளிக் செய்ய வேண்டும்.

உங்களை பற்றியது

உங்களை பற்றியது

பெயர், தொடர்பு விவரங்கள், திருமண நிலை மற்றும் பல போன்ற தனிப்பட்ட தகவல்கள் உள்நுழைந்த பிறகு உறுப்பினர் e-SEWA போர்ட்டலில் சரியாக பிரதிபலிக்கப்படுவதை தனிநபர் உறுதிப்படுத்த வேண்டும்.

அங்கீகரிக்கப்படணும்

அங்கீகரிக்கப்படணும்

அதன்பிறகு நீங்கள் e-SEWA போர்ட்டலில் வங்கி கணக்கு எண், அதன் ஐ.எஃப்.எஸ்.சி கோடு மற்றும் ஆதார் விவரங்கள் சரியானவை என்பதையும் உறுதிப்படுத்த வேண்டும். மேலும், வங்கி கணக்கு விவரங்கள் மற்றும் ஆதார் ஆகியவை உங்கள் நிறுவனம் மற்றும் யுஐடிஏஐ ஆகியவற்றால் டிஜிட்டல் முறையில் அங்கீகரிக்கப்பட்டுள்ளன என்பதை உறுதிப்படுத்த வேண்டும். இதுபோன்ற விவரங்களை உங்கள் கணக்கில் உள்நுழைந்த பிறகு 'Manage' ஆப்சனில் கீழ் உள்ள 'KYC' விருப்பத்தில் சரிபார்க்கலாம். 'டிஜிட்டல் ஒப்புதல்' என்பது உங்கள் விவரங்களை யுஐடிஏஐ மற்றும் உங்கள் நிறுவனம் டிஜிட்டல் முறையில் சரிபார்க்க வேண்டும் என்பதாகும். வங்கி கணக்கு விவரங்களை டிஜிட்டல் முறையில் நீங்கள் வேலை செய்யும் நிறுவனம் அங்கீகரிக்க வேண்டும்

வெப்சைட் திறங்க

வெப்சைட் திறங்க

சரி இவைஎல்லாம் சரியாக இருக்கிறது என்றால். இப்போது விஷயத்துக்கு வந்துவிடுவோம் எப்படி மாற்றுவது என்பதை பார்ப்போம். படி நிலை 1 : www. https://unifiedportal-mem.epfindia.gov.in/memberinterface/ என்ற தளத்தில் உங்கள் யுஏஎன் நம்பரை ஓபன் செய்ய வேண்டும்.

பிஎப் கணக்கு

பிஎப் கணக்கு

படிநிலை 2 : உங்கள் யுஏஎன் கணக்கு ஓபன் ஆன பிறகு Online Services' என்ற ஆப்சனை கிளக் செய்தால் அதில் 'One member - One EPF account என்று இருக்கும். அதை நீங்கள் திறக்க வேண்டும்.

பிஎப் நம்பர்

பிஎப் நம்பர்

படிநிலை 3 புதிய விண்டோ ஓபன் ஆகும்.அதில் உங்களை பற்றி தனிப்பட்ட தகவல்கள் உங்கள் பிஎப் கணக்குகள் காட்டும். அதில் இப்போது நீங்கள் வேலை பார்க்கும் பிஎப் நம்பரை அளிக்க வேண்டும்..

ஹெச்ஆரை கேளுங்க

ஹெச்ஆரை கேளுங்க

படிநிலை 4 உங்கள் தற்போதைய அல்லது முந்தைய நிறுவன ஹெச்ஆர் உங்கள் ஆன்லைன் பரிமாற்ற படிவத்தை சான்றளிப்பாரா என்பதைத் தேர்ந்தெடுக்கவும். பரிமாற்ற படிவத்தை சான்றளிப்பதற்காக உங்கள் தற்போதைய நிறுவனத்தை தேர்வு செய்ய முடிந்தால், உங்கள் தற்போதைய நிறுவனத்தின் ஹெச்ஆரை ( மனிதவளத் துறை) நீங்கள் அணுக வேண்டும்.

எதில் மாறணும்

எதில் மாறணும்

படிநிலை 5 பிஎப் நம்பரை என்டர் செய்த பிறகு Get Details என்று ஓரத்தில் இருப்பதை நீங்கள் கிளிக் செய்ய வேண்டும்.
படிநிலை 6: தற்போதைய ஈபிஎஃப் கணக்கிற்கு பணத்தை மாற்ற வேண்டியதற்காக ஏற்கனவே வேலைபார்த்த நிறுவனத்தின் ஈபிஎஃப் கணக்கை தேர்ந்தெடுக்கவும்.

டிராக் ஐடி வரும்

டிராக் ஐடி வரும்

படிநிலை 7: இறுதியாக உங்களுக்கு ஒரு ஒடிபி நீங்கள் பதிவு செய்த மொபைலுக்கு வரும் அதை என்டர் செய்தால் முடிந்துவிடும். அவ்வளவு தான் உங்களுக்கு டிராக்கிங் ஐடி தோன்றும். அதற்கு இசேவா போர்டலில் போய் 'Track Claim Status' ஆப்சனில்போய் சில நாட்கள் கழித்து சோதித்தால் என்ன நிலை என்பது தெரியும். உங்கள் நிறுவனம் இதை ஏற்றுக்கொண்ட பிறகு இதற்கான பிரசாஸ் தொடங்கும். மூன்று மாதத்தில் உங்கள் புதிய பிஎப் கணக்கில் பழைய பணம் வந்து சேர்ந்துவிடும்.

English summary
How to transfer money from your previous epf account to your present epf account, deatails here
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X