For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

எங்கேயோ திக்கு திசை காணாத தூரம் தான்.. மாயமான தங்கையை கண்டுபிடித்த அண்ணன்.. நெகிழ்ச்சி கதை!

Google Oneindia Tamil News

பெல்லாரி: மகாராஷ்டிராவில் ஒரு மத தன்னார்வ தொண்டு நிறுவனத்தில் பணியாற்றுகிறார் பிரசன்னா ஜோஷி. இவர் 2016ல் காணாமல் போன தனது தங்கை குறித்து சமூக ஊடகங்களில் ஒரு பதிவைக் கண்டு இன்ப அதிர்ச்சி அடைந்தார். அவரை கர்நாடகா மாநிலம் பல்லாரியில் கண்டுபிடித்து மீட்டுள்ளார்

மகாராஷ்டிராவின் லாதூரியைச் சேர்ந்த பிரசன்னா ஜோஷியின் சகோதரி சுப்ரியா 2016ம் ஆண்டு காணாமல் போனார் திருமணம் தொடர்பாக சுப்ரியா தனது சகோதரருடன் சண்டையிட்டு வீட்டை விட்டு வெளியேறியிருக்கிறார்.

அந்த பெண் வீட்டை விட்டு வெளியேறிய பின் பல இடங்களில் அலைந்திருக்கிறார். இதனால் பிரசன்னா பல முறை தனது சகோதரியைத் தேடியும் அவர் கிடைக்கவில்லை

 ஆபரேஷன் முடிந்த அரை மணி நேரத்தில் ரத்த வாந்தி.. 22 வயது பெண்ணின் திடீர் மரணம்.. என்ன காரணம்? ஆபரேஷன் முடிந்த அரை மணி நேரத்தில் ரத்த வாந்தி.. 22 வயது பெண்ணின் திடீர் மரணம்.. என்ன காரணம்?

மனநிலை சரியில்லா சுப்ரியா

மனநிலை சரியில்லா சுப்ரியா

மார்ச் மாதத்தில் கொரோனா தொற்று நோய் பரவ ஆரம்பித்த போது, கர்நாடகா மாநிலம் பெல்லாரி மாவட்ட நிர்வாகம் சோதனை முடுக்கிவிட்டபோதுதான் அந்த மகிழ்ச்சியான செய்தி கிடைக்க தொடங்கியது. சுப்ரியா வீடற்றவர் மற்றும் மனநிலை சரியில்லாதவர் என்பதை அதிகாரிகள் கண்டறிந்தனர். கோவிட் -19 சோதனைக்காக அவர்கள், சுப்ரியாவை விஜயநகர் மருத்துவ அறிவியல் கழகத்திற்கு (விம்ஸ்) அழைத்துச் சென்றனர். அவருக்கு கொரோனா இல்லை என்பது உறுதி செய்யப்பட்ட பின்னர், சாந்தி தமா அனாதை இல்ல மையத்தில் சிகிச்சையில் வைக்கப்பட்டார். அனாதை இல்லத்தில் உள்ள ஊழியர்களும் ஆலோசகர்களும் சுப்ரியாவுடன் அவரது குடும்பத்தைப் பற்றி பேச முயன்றனர்.

சமூக வலைதள பதிவு

சமூக வலைதள பதிவு

அவள் மன அதிர்ச்சியிலிருந்து அவள் முழுமையாக குணமடையவில்லை என்பதையும் அவள் நீண்ட காலத்திற்கு முன்பே வீட்டை விட்டு வெளியேறிவிட்டதையும் அவர்கள் உணர்ந்தார்கள். இந்நிலையில் சாந்தி தமா அனாதை இல்லத்தின் மூத்த ஆலோசகர் இது பற்றி கூறுகையில் "சுப்ரியாவின் உறவினர்களின் உறவினர்கள் யார் என்பது குறித்து அறிய சமூக ஊடகங்களில் அவரைப் பற்றி வெளியிட்டோம்.

கோவிட் பரிசோதனை

கோவிட் பரிசோதனை

ஜூன் முதல் வாரத்தில், சுப்ரியாவின் சகோதரர் பிரசன்னா ஜோஷி எங்களைத் தொடர்புகொண்டு பல்லாரிக்கு வந்தார். தனிமைப்படுத்தி கொரோனா சோதனை அவருககு நடத்தப்பட்டது. கொரோனா இல்லை என்பது அவருக்கு உறுதியானது. இதையடுத்து அவரது தந்தையை சந்திக்க அனுமதித்தோம். சந்தித்தவுடன் இரு உடன்பிறப்புகளும் ஒருவருக்கொருவர் அடையாளம் கண்டுகொண்டனர் .

பெல்லாரி காவல் துணை ஆணையர்

பெல்லாரி காவல் துணை ஆணையர்

இதனிடையே பெல்லாரி துணை காவல் ஆணையர் எஸ் எஸ் நகுல் கூறும் போது, சுப்ரியா மார்ச் மாதம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக தெரிவித்தார். "குடும்பம் மீண்டும் இணைந்ததில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம், இதற்கான அனைத்து நன்றிகளும் பல்லாரியில் உள்ள மருத்துவமனை மற்றும் அனாதை இல்ல ஊழியர்களுக்கே சேரும் என்று அவர் கூறினார்.

தேடினோம் உறவுகளை

தேடினோம் உறவுகளை

மாவட்ட பெண்கள் மற்றும் குழந்தைகள் நல மேம்பாட்டு அலுவலர் ஆர்.நாகராஜ் கூறுகையில், "கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சுப்ரியா வந்த போது, கோகர்ணா மற்றும் கோவாவில் இருந்து வந்நதாக கூறினார். அந்த பெண் வீட்டை விட்டு வெளியேறிவிட்டாள் என்று எங்களுக்குத் தெரிந்ததும், அவளுடைய குடும்பத்தைக் கண்டுபிடிக்க சமூக ஊடகங்களில் வெளியிட முடிவு செய்து வெளியிட்டோம், "என்று அவர் விளக்கினார்.

நெகிழ்ச்சியுடன் நன்றி

நெகிழ்ச்சியுடன் நன்றி

தனது தங்கை சுப்ரியாவை மீட்டுக்கொடுத்த அனாதை இல்லம் மற்றும் பெல்லாரி மாவட்ட நிர்வாகத்திற்கு பிரசன்னா ஜோஷி, நன்றி தெரிவித்தார். "எங்கள் பெற்றோர் 2013 இல் இறந்துவிட்டார்கள். அதன் பின்னர் சுப்ரியா அதிர்ச்சி நிலையில் இருந்தார். ஒரு சிறிய பிரச்சினை தொடர்பாக அவள் என்னுடன் சண்டையிட்டு வீட்டை விட்டு வெளியேறினாள். இப்போது நான் அவளைக் கண்டுபிடித்துவிட்டேன். என் மகிழ்ச்சியை வெளிப்படுத்த என்னிடம் வார்த்தைகள் இல்லை, "என்று நெகிழ்ச்சி தெரிவித்தார்.

English summary
Prasanna Joshi, an employee with a religious NGO in Maharashtra, found a post on social media about his missing sister Supriya, had gone missing since 2016 from Latur of Maharashtra and she was found in Ballari recently.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X