For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கடத்தல்காரர்களிடம் இருந்த குழந்தை... மீட்கப்பட்டதும் சிரித்தது... வைரலாகும் போட்டோ

தெலுங்கானா மாநிலத்தில் கடத்தப்பட்ட குழந்தை மீட்கப்பட்டதை அடுத்து காவல் துறை ஆய்வாளர் பார்த்து புன்முறுவல் பூத்தது போன்ற புகைப்படம் ஒன்று தற்போது வைரலாகி வருகிறது.

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

ஹைதராபாத்: தெலுங்கானா மாநிலத்தில் கடத்தப்பட்ட 4 மாத குழந்தை மீட்கப்பட்டதை அடுத்து ஹைதராபாத் காவல் துறை அதிகாரியை பார்த்து சிரிக்கும் புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

ஹைதராபாத் நகரத்தைச் சேர்ந்தவர் ஹுமேரா பேகம் (21). இவரது 4 வயது ஆண் குழந்தை ஃபாசான் கான். இந்தக் குழந்தை கடந்த 6-ஆம் தேதி கடத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து இந்த குழந்தை போலீஸார் தேடி வந்தனர். அப்போது கடத்தப்பட்ட குழந்தையை 15 மணி நேரத்தில் போலீஸார் கண்டுபிடித்து அவரது தாயிடம் ஒப்படைத்தனர்.

Hyderabad police with kidnapped baby - photo goes viral

குழந்தையை கடத்திய யூசுப் மற்றும் முஸ்தாக் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
குழந்தை மீட்கப்பட்டபோதும், தாயிடம் ஒப்படைக்கப்பட்டபோதும் அழுது கொண்டே இருந்தது. இதைத் தொடர்ந்து நம்பள்ளி காவல் நிலைய ஆய்வாளர் சஞ்சய் குமார் அந்த குழந்தையை வாங்கி லேசாக தாலாட்டும் படி செய்தார்.

அப்போது அந்தக் குழந்தை அழுகையை நிறுத்திவிட்டு மிகவும் அழகாக சிரித்தது. இது தொடர்பான புகைப்படத்தை ஹைதராபாத் நகர கூடுதல் காவல் துறை ஆணையர் சுவாதி லக்ரா தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவேற்றம் செய்திருந்தார். இதற்கு 21,000 லைக்குகளும், 5000 முறை ரீடுவீட் செய்தும் உள்ளனர்.

English summary
A picture of a Hyderabad police officer smiling down at the 4-month-old baby boy he rescued from a kidnapping is currently going viral on social media.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X