என் மீதே தாக்குதலா.. நான் கோழையில்லை.. போராளி.. உத்தர பிரதேசத்தில் கொந்தளித்த மம்தா பானர்ஜி
வாரணாசி: ‛‛நான் கோழை இல்லை... போராளி... என்மீதான தாக்குதல் உத்தர பிரதேசத்தில் ஆட்சியை இழப்பதை குறிக்கிறது'' என பாஜகவை மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறினார்.
உத்தர பிரதேசத்தில் 7 கட்டங்களாக தேர்தல் அறிவிக்கப்பட்டது. பிப்ரவரி 10, 14, 20, 23, 27 ஆகிய தேதிகளில் 5 கட்ட தேர்தல்கள் முடிவடைந்துள்ளன. இன்று 6ம் கட்ட தேர்தல் 57 தொகுதிகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இன்று ஓட்டுப்பதிவு நடக்கும் 57 தொகுதிகளில் மொத்தம் 676 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். பாஜகவின் முதல்வர் யோகி ஆதித்யநாத்தும் போட்டியில் உள்ளார். அதாவது யோகி ஆதித்யநாத் போட்டியிடும் கோரக்பூர் சட்டசபை தொகுதிக்கும் இன்று தான் ஓட்டுப்பதிவு நடந்து வருகிறது.

நான்கு முனை போட்டி
உத்தர பிரதேசத்தில் நான்கு முனை போட்டி நிலவுகிறது. தற்போது மாநிலத்தை ஆளும் பாஜக மீண்டும் ஆட்சியை கைப்பற்ற முயற்சித்து வருகிறது. இதனால் பிரதமர் நரேந்திர மோடி, உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், மத்திய அமைச்சர்கள் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர். அதேபோல் மாநிலத்தில் இழந்த செல்வாக்கை மீட்க அகிலேஷ் யாதவின் சமாஜ்வாடி, மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் காங்கிரஸ் கட்சியும் உத்தர பிரதேசத்தில் சூறாவளி பிரசாரம் செய்து வருகிறது. ராகுல்காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோர் பல்வேறு பொதுக்கூட்டங்களில் பேசி தொடர்ந்து பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர்.

மம்தா பிரசாரம்
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, உத்தரபிரதேசத்தில் சமாஜ்வாடி கட்சிக்கு ஆதரவு தெரிவித்து வருகிறார். அகிலேஷ் யாதவ் கட்சியின் வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். மாநிலத்தில் மார்ச் 7ல் நடைபெற உள்ள இறுதிக்கட்ட சட்டசபை தேர்தலையொட்டி வாரணாசி தொகுதியில் இன்று மம்தா பானர்ஜி பிரசாரம் செய்து அகிலேஷ் யாதவின் சமாஜ்வாடி கட்சிக்கு ஓட்டு சேகரித்தார். அப்போது மம்தா பானர்ஜி பேசியதாவது:

பாஜக ஆட்சியை இழக்கும்
நான் பலமுறை தாக்குதலுக்கு ஆளாகி உள்ளேன். என்னை கட்டையால் அடித்ததோடு, துப்பாக்கியால் சுட்டுள்ளனர். நான் ஒருபோதும் வீழ்ந்தது இல்லை. நான் கோழை இல்லை, போராளி. வாரணாசிக்கு வரும்போது என்மீது பாஜகவினர் தாக்குதல் நடத்தியது ஆட்சியை இழந்து அவர்கள் செல்வதை குறிக்கிறது. உக்ரைனில் இந்திய மாணவர்கள் தவித்து வரும் நிலையில் பிரதமர் நரேந்திர மோடி உத்தர பிரதேசத்தில் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்'' என குற்றம்சாட்டினார்.

காரணம் என்ன
முன்னதாக நேற்று மம்தா பானர்ஜி தஸ்வாமித் காட் பகுதியில் நடந்த கங்கை ஆரத்திக்கு சென்றார். அப்போது ஹிந்து யுவ வாகினி அமைப்பினர் அவருக்கு கருப்புகொடி காட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த அமைப்பை 20 ஆண்டுகளுக்கு முன்பு தற்போதைய முதல்வர் யோகி ஆதித்யநாத் நிறுவியது குறிப்பிடத்தக்கது. இதை தான் குறிப்பிட்டு இன்று மம்தா பானர்ஜி பேசியுள்ளார்.

வீடியோ வெளியீடு
இதற்கிடையே திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்பி அசோக் தன்வார் தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவானது மம்தா காரில் இருந்து வெளியே இறங்கி சாலையில் நிற்க, அருகே ஏரளாமானவர்கள் கோஷமிடும் வகையில் உள்ளது. இதில், ‛‛
இன்று வாரணாசியில் (உ.பி.) சில பாஜகவினர் மம்தா பானர்ஜியின் காரை நிறுத்தி கருப்பு கொடி காட்டினர். காரில் இருந்து அவர் இறங்கவே எதிரே நின்றவர்கள் அருகே செல்ல துணியவில்லை. இதுதான் மம்தாவின் உண்மையான பலம்'' என குறிப்பிட்டுள்ளார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications