கோவாவில் மமதா பானர்ஜி- நடிகை நஃபிசா அலி, டென்னிஸ் வீரர் லியாண்டர் பயஸ் திரிணாமுல் ஜோதியில் ஐக்கியம்!
பனாஜி: மேற்கு வங்க முதல்வரும் திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மமதா பானர்ஜி கோவாவில் சூறாவளி பயணம் மேற்கொண்டுள்ளார். இதனால் எஞ்சியிருக்கும் தலைவர்களும் மமதா பானர்ஜி தலைமையில் திரிணாமுல் காங்கிரஸுக்கு தாவிவிடுவார்களோ என்கிற பீதியில் இருக்கிறதாம் காங்கிரஸ். இதனிடையே நடிகையும் சமூக ஆர்வலருமான நஃபிசா அலி, டென்னிஸ் ஜாம்பவான் லியாண்டர் பயஸ் ஆகியோர் மமதா பானர்ஜி முன்னிலையில் திரிணாமுல் காங்கிரஸில் இன்று இணைந்தனர்.
உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களுடன் கோவா மாநிலத்துக்கும் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. 2017-ல் நடைபெற்ற கோவா சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி தனிப்பெரும் கட்சியாக வென்றது. ஆனால் காங்கிரஸ் சுதாரிக்காமல் போனதால் பாஜக, சிறு கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைத்தது.
கோவா மாநில சட்டசபை தேர்தலில் மீண்டும் பாஜக ஆட்சி அமைக்கும்; காங்கிரஸ் கட்சிக்கு சிங்கிள் டிஜிட் இடங்கள்தான் கிடைக்கும்; ஆம் ஆத்மி கட்சிக்கு காங்கிரஸை விட சில இடங்கள் கூடுதலாக கிடைக்கும் என்றன கருத்து கணிப்பு. ஆனால் இந்த கணிப்பு எல்லாம் திரிணாமுல் காங்கிரஸ், கோவாவில் உதயமாகாத வரைதான்.

கோவாவில் திரிணாமுல்
இப்போது கோவாவில் ஆட்சியைப் பிடிப்பதற்கு திரிணாமுல் காங்கிரஸ் படுதீவிரமாக முயற்சித்து வருகிறது. கோவா மாஜி முதல்வரும் முதுபெரும் காங்கிரஸ் தலைவருமான லூயிசினோ ஃபெலோராதான் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் முதல் முதலில் இணைந்தார். இதனைத் தொடர்ந்து ஏராளமான காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டம் கூட்டமாக திரிணாமுல் காங்கிரஸ் ஜோதியில் ஐக்கியமாகி வருகின்றனர். கோவா சுயேட்சை எம்.எல்.ஏ. பிரசாத் கெளன்கரும் தமது ஆதரவாளர்களுடன் திரிணாமுல் காங்கிரஸில் இணைந்தார்.

மமதா பயணம்
இந்நிலையில் கோவா மாநிலத்தில் 3 நாட்கள் பயணம் மேற்கொண்டுள்ளார் மமதா பானர்ஜி. கோவா தலைநகர் பனாஜிக்கு நேற்று மாலை வருகை தந்தார் மமதா பானர்ஜி. இன்று காலையில் திரிணாமுல் காங்கிரஸ் நிர்வாகிகளை சந்தித்து மமதா பானர்ஜி ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மமதா பானர்ஜி பேசியதாவது: நான் மதச்சார்பின்மை கொள்கையில் நம்பிக்கை வைத்திருக்கிறேன். மக்களின் ஒற்றுமையில் நம்பிக்கை வைத்திருக்கிறேன். இந்தியா என் தாய்நாடு. மேற்கு வங்கம் என் தாய்நிலம் எனில் கோவாவும் என் தாய்நிலம்தான்.

நான் உங்கள் சகோதரி
மேற்கு வங்கம் மிக வலிமையான மாநிலம். எதிர்காலத்தில் கோவா மாநிலத்தையும் மிக வலிமையானதாக உருவாக்க விரும்புகிறோம். மேற்கு வங்கத்தைச் சேர்ந்த மமதா பானர்ஜிக்கு கோவாவில் என்ன வேலை என சிலர் கேட்கிறார்கள்? ஏன் மமதா பானர்ஜி இங்கு அரசியல் செய்யக் கூடாது? நான் இந்தியன். இந்திய நிலப்பரப்பில் எங்கு வேண்டுமானாலும் நான் செல்லலாம். நான் உங்களின் சகோதரி. உங்களது அதிகாரத்தை பறித்துக் கொள்ள நான் இங்கு வரவில்லை. நான் முதல்வர் நாற்காலியில் அமருவதற்கும் இங்கே வரவில்லை. எனக்கு பாஜகவினர் கறுப்பு கொடி காட்டினார்கள். அவர்களுக்கு நான் வணக்கம் செலுத்தினேன். நீங்கள் உங்கள் அரசியல் பணிகளை வழக்கம் போல செய்யலாம். உங்களுக்கு உதவத்தான் நாங்கள் இங்கே இருக்கிறோம். இவ்வாறு மமதா பானர்ஜி பேசினார்.

திரிணாமுல் ஜோதியில் நஃபிசா அலி, லியாண்டர் பயஸ்
இந்த நிகழ்ச்சியைத் தொடர்ந்து பெடிம் பகுதியில் மீனவர்களை சந்தித்து மமதா பானர்ஜி பேசுகிறார். பின்னர் காய்கறி வியாபாரிகள் உள்ளிட்டோருடன் கலந்துரையாடுகிறார். அதனைத் தொடர்ந்து நாளை செய்தியாளர்களையும் மமதா சந்தித்து பேசுகிறார். இதனிடையே நடிகையும் சமூக ஆர்வலருமான நஃபிசா அலி, டென்னிஸ் ஜாம்பவான் லியாண்டர் பயஸ் ஆகியோர் மமதா முன்னிலையில் திரிணாமுல் காங்கிரஸில் இணைந்தனர். மமதா பானர்ஜியின் இந்த சூறாவளி பயணம் கோவாவில் அனைத்து அரசியல் கட்சிகளிடையே கலக்கத்தை உருவாக்கி இருக்கிறது என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள். பல இடங்களில் மமதாவின் போஸ்டர்கள் கிழிக்கப்பட்டிருக்கின்றன. இம்மாநிலத்தில் எஞ்சியிருக்கும் தலைவர்களும் மமதா பானர்ஜி தலைமையில் திரிணாமுல் காங்கிரஸில் இணைந்துவிடுவார்களோ என்கிற அச்சத்தில் இருக்கிறதாம் காங்கிரஸ்.
-
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்?












Click it and Unblock the Notifications