சுப்ரீம் கோர்ட் நீதிபதி மீது பெண் வழக்கறிஞர் பரபரப்பு பாலியல் தொல்லை புகார்
டெல்லி: உச்சநீதிமன்ற நீதிபதி ஒருவர் தனக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்ததாக பெண் வழக்கறிஞர் ஒருவர் தனது பிளாக்கில் எழுதியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தன்னுடைய தாத்தா வயதில் இருக்கும் அந்த நீதிபதியை எதிர்த்து தன்னால் போராட முடியாமல் போனதை கோழைத்தனமாக உணர்கிறேன் என்றும் அந்தப் பெண் வழக்கறிஞர் கூறியுள்ளார்.
டெல்லியில் ஓடும் பேருந்தில் மருத்துவ மாணவி ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவத்தை எதிர்த்து நாடே போராடிக் கொண்டிருந்த சமயத்தில் இந்த தொல்லையை தான் சந்தித்தாகவும் அந்த பெண் வழக்கறிஞர் குறிப்பிட்டுள்ளார்.

கொல்கத்தாவைச் சேர்ந்தவர்
சம்பந்தப்பட்ட பெண் வழக்கறிஞர் கொல்கத்தாவில் உள்ள தேசிய நீதி அறிவியல் பல்கலைக்கழகத்தில் சட்டம் படித்தவர் ஆவார்.

ஹோட்டல் ரூமில் வைத்து
டெல்லியில் உள்ள ஒரு ஹோட்டல் அறையில் வைத்து தன்னிடம் அத்துமீறி அந்த நீதிபதி நடந்து கொண்டதாகவும் இவர் குறிப்பிட்டுள்ளார். சமீபத்தில்தான் அந்த நீதிபதி பணியிலிருந்து ஓய்வு பெற்றதாகவும் அப்பெண் தெரிவிததுள்ளார்.

பிளாக்கில் வேதனை
இதுகுறித்து தனது பிளாக்கில் அந்தப் பெண் வழக்கறிஞர் எழுதியிருப்பதாவது... கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நான் எனது படிப்பின் இன்டர்ன்ஷிப்புக்காக டெல்லியில் தங்கியிருந்தேன். அப்போது டெல்லி பாலியல் பலாத்காரத்திற்கு எதிராக நாடே கொந்தளித்துப் போராடிக் கொண்டிருந்தது.

மன ரீதியாக செக்ஸ் துன்புறுத்தல்
அப்போது அந்த நீதிபதியை நான் சந்தித்தேன். அவர் சமீபத்தில் ஓய்வு பெற்றவர். மிகவும் மதிக்கப்படும் நீதிபதியும் கூட. எனது இறுதி செமஸ்டரின்போது அவரிடம்தான் நான் பயிற்சிக்காக சேர்ந்திருந்தேன். என்னிடம் அவர் அத்துமீறி நடந்து கொண்டார். உடல் ரீதியாக அல்ல, ஆனால் வரம்பு மீறி நடந்து கொண்டார். எனக்கு தாத்தா வயதில் இருப்பவர் அவர்.

விவரம் சொல்ல விரும்பவில்லை
முழு விவரத்தையும் சொல்ல நான் விரும்பவில்ல. அந்த அறையிலிருந்து எப்படியோ நான் வந்து விட்டேன். ஆனால் என்னை அந்த துயரம் துரத்தியபடி உள்ளது.

மேலும் 3 பேரிடம் அத்துமீறியவர்
இந்த நீதிபதி ஏற்கனவே 3 பேரிடம் அத்துமீறியவர் என்று நான் கேள்விப்பட்டேன். அதேபோல மேலும் சில நீதிபதிகளிடம் தாங்கள் இதேபோன்ற துன்புறுத்தலை சந்தித்தாக என்னிடம்4 பெண்கள் கூறியுள்ளனர்.

துணிச்சல் வர வேண்டும்
என்னைப் போல பாதிக்கப்பட்ட பெண்கள் தாங்கள் சந்தித்த துயரங்களை வெளியில் அம்பலப்படுத்த வேண்டும் என்பதற்காகவே நான் துணிச்சலுடன் இதைக் கூறுகிறேன்.

அப்போது என்னால் முடியவில்லை
ஆனால் அப்போது என்னால் இதை வெளிப்படுத்த முடியவில்லை. அவருக்கு எதிராக என்னால் சட்ட ரீதியாகக் கூட போராட முடியவில்லை என்பதை நினைக்கும்போது கோழைத்தனமாக உணர்கிறேன் என்று கூறியுள்ளார் அப்பெண்.
இருப்பினும் இதுதொடர்பாக இதுவரை இப்பெண் வழக்கறிஞர் புகார் எதையும் தரவில்லை.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications