"கொஞ்சம் ஓவராதான் போயிட்டோமோ".. இன்ஸ்டாவில் ஃபோட்டோ.. ஐஏஎஸ் அதிகாரியை தூக்கிய இந்திய தேர்தல் ஆணையம்
காந்திநகர்: குஜராத்தில் தேர்தல் பணிக்காக நியமிக்கப்பட்ட ஐஏஎஸ் அதிகாரி ஒருவர், தனது இன்ஸ்டாகிராமில் போஸ்ட் செய்த புகைப்படமே அவருக்கு வினையாக மாறியுள்ளது.
இந்த புகைப்படத்தால் அவரை தேர்தல் பணியில் இருந்தே இந்திய தலைமைத் தேர்தல் ஆணையம் தூக்கியுள்ளது. மேலும், அடுத்த உத்தரவு வரும் வரை அவரை எந்த மாநில தேர்தல் பணிகளுக்கும் நியமிக்கக் கூடாது எனவும் இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
அப்படி என்ன புகைப்படத்தை போட்டு இந்திய தேர்தல் ஆணையத்தின் கோபத்துக்கு அந்த ஐஏஎஸ் ஆளானார். வாங்க பார்க்கலாம்.

'இன்ஸ்டா' அதிகாரிகள்..
ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎஃப்எஸ் போன்ற அரசு உயர் பதவிகளை வகிக்கும் பலர் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், ட்விட்டர் போன்ற சமூக வலைதளங்களில் படு ஆக்டீவாக இருப்பதை பார்த்திருப்போம். மக்களின் பிரச்சினைகளை உடனே அறிந்து கொள்வதற்கும், மக்களுடன் மக்களாக இருப்பதற்கும் இது நல்ல வழிதான். ஆனால் அது ஒரு எல்லையுடன் நின்றுகொள்ள வேண்டும். சில அதிகாரிகள் சமூக வலைதளங்களில் தங்கள் புகைப்படங்களுக்கு வரும் லைக்ஸ்களுக்கு அடிமையாகி விடுவதும் உண்டு. இதனால் தினமும் விதவிதமான புகைப்படங்களை அவர் பதிவிடுவதையே வாடிக்கையாக வைத்திருப்பர். அப்படி ஒரு ஐஏஎஸ் அதிகாரி செய்த செயலைதான் இங்கு பார்க்கப் போகிறோம்.

ரகசியம் காப்பது முக்கியம்..
உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரி அபிஷேக் சிங். குஜராத் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, இவரை கடந்த சில தினங்களுக்கு முன்பு தான் அகமதாபாத், அஸர்வா ஆகிய இரண்டு தொகுதிகளுக்கு தேர்தல் பார்வையாளராக இந்தியத் தேர்தல் ஆணையம் நியமித்தது. பொதுவாக, அரசு உயரதிகாரிகளுக்கு இதுபோன்று வழங்கப்படும் பொறுப்புகள் குறித்து பொதுவெளியில் சொல்லக் கூடாது என்பது ஒரு விதிமுறை. அதிலும், தேர்தல் சம்பந்தப்பட்டவை குறித்து ரகசியம் காக்கப்பட வேண்டியது அவசியம்.

தெறிக்கவிட்ட ஃபோட்டோஸ்..
ஆனால், சமூக வலைதளங்களில் ஓவர் ஆக்டீவாக இருக்கும் நமது ஐஏஎஸ் அதிகாரி அபிஷேக் சிங், இன்ஸ்டாவில் தனக்கு வரும் லைக்ஸ்களை பார்த்து சற்று மயங்கி விட்டார். தினமும், தான் பணிக்கு செல்ல புறப்படுவது; கெத்தாக காரில் அமர்வது போன்றவற்றை எல்லாம் செல்ஃபி எடுத்து இன்ஸ்டாவில் போட்டு லைக்ஸ்களை அள்ளிக் குவித்திருக்கிறார் மனிதர். சாதாரணமாகவே இன்ஸ்டாவில் ஃபோட்டோக்களை தெறிக்கவிடும் அபிஷேக் சிங், தனக்கு கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டதும் சும்மா இருப்பாரா? ஃபோட்டாக்களால் இன்ஸ்டாவையே நிரப்பிவிட்டார். தனக்கு வழங்கப்பட்ட தேர்தல் பார்வையாளர் காரின் முன்பு நின்று ஒரு ஃபோட்டோ, தனக்கு கீழ் பணியாற்றும் அதிகாரிகள், ஆயுதமேந்திய போலீஸாருடன் ஒரு ஃபோட்டோ என பிரித்து மேய்ந்துவிட்டார்.

தூக்கிய தேர்தல் ஆணையம்..
இந்நிலையில், ஐஏஎஸ் அதிகாரி அபிஷேக் சிங்கின் இன்ஸ்டாகிராம் ஃபோட்டோக்களுக்கு லைக்ஸ்கள் குவியவே, இந்த தகவல், இந்திய தேர்தல் ஆணையத்தின் பார்வைக்கும் சென்றுள்ளது. அவ்வளவுதான். அடுத்த நிமிடமே உத்தரவு பறந்தது. அதில், "அபிஷேக் சிங் தனக்கு தேர்தல் பார்வையாளர் பொறுப்பு வழங்கப்பட்டதை இன்ஸ்டாகிராமில் புகைப்படங்களுடன் பதிவிட்டுள்ளார். இது முழுக்க முழுக்க பப்ளிசிட்டிக்காக அவர் செய்திருக்கிறார். எனவே அவருக்கு கொடுக்கப்பட்ட தேர்தல் பார்வையாளர் பணிகளில் இருந்து அவர் உடனடியாக விடுவிக்கப்படுகிறார். மேலும், மறு உத்தரவு வரும் வரை அபிஷேக் சிங்கை எந்த தேர்தல் பணிகளுக்கும் நியமிக்கக் கூடாது" என இந்திய தேர்தல் ஆணையம் தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளது.
-
ஜுவல்லரி கடைகளுக்கு விழுந்த அடி! ஒரு ரூபாயில் தங்கம்.. இளைஞர்களின் ஸ்மார்ட் மூவ்! உரிமையாளர்கள் ஷாக் -
தவெக விற்கு தேர்தலில் ஆதரவு கிடையாது.. ‘ஜனநாயகன்’ லீக் காட்சிகளால் பின்வாங்கிய முஸ்லிம் மக்கள் கழகம் -
திமுகவிற்கு ‘குட்பை'.. விஜயின் தவெகவிற்கு மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் ஆதரவு! -
பெட்ரோல் டூவீலர்களுக்கு மொத்தமாக தடை.. அரசு திட்டவட்டம்! ஏற்கனவே பைக் வைத்திருப்போர் என்ன செய்யணும்? -
இரவிலேயே பாய் விரித்து இடம்.. நெல்லையில் எல்கேஜி அட்மிஷனுக்காக விடிய விடிய காத்திருந்த பெற்றோர்கள் -
மணி பிளான்ட் இனி தேவையில்லை.. காந்தம் போல பணத்தை ஈர்க்கும் 'அந்த' ஒரு செடி! வீட்டில் எங்கே வைக்கலாம் -
6 மாதங்களில் அண்ணாமலைக்கு தமிழக முதல்வர் பதவி! இபிஎஸ் தலையில் இடியை இறக்கிய திருமாவளவன் -
பாண்டியன் ஸ்டோர்ஸ்: மயில் கர்ப்பத்தை பற்றி பழனி சொன்ன விஷயம்! கோபத்தில் சரவணன்.. கதிர் செய்த நல்ல விஷயம் -
Gold: பசிபிக் கடலுக்கடியில் குவிந்து கிடக்கும் ”தங்கம்” கண்டுபிடித்த விஞ்ஞானிகள்.. எம்மாடியோவ்! -
ராகுல் காந்தியை பார்த்ததும்.. திரும்பி வந்து பேசிய பிரதமர் மோடி.. நாடாளுமன்ற வளாகத்தில் நடந்த சுவாரசியம் -
சிறகடிக்க ஆசை: விஜயா செய்த சதி, ஜெயிலுக்கு போகும் மொத்த குடும்பம்.. மனோஜால் ஏற்படும் விபரீதம்! ஜெயித்த ரோகிணி -
ஈரான் கொடுத்த ஷாக்.. ஆடிப்போன அமெரிக்கா.. பூதாகரமாக வெடிக்கும் கண்ணிவெடி விவகாரம்!












Click it and Unblock the Notifications